• HOME
 • »
 • NEWS
 • »
 • spiritual
 • »
 • நாளை ஐப்பசி மாத பிரதோஷ விரதம்!

நாளை ஐப்பசி மாத பிரதோஷ விரதம்!

சிவன்

சிவன்

சிவபெருமானை நாம் நாள் தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும்.

 • Share this:
  மாதந்தோறும் இருமுறை வளர்பிறை, தேய் பிறை திரயோதசி ( 13 ம் நாள் ) நாட்கள் பிரதோஷ தினங்களாகும். இந்நாட்களில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான நேரம் பிரதோஷ காலமாகும். இந்த நேரத்தில் பரமசிவனை வணங்கி வழிபட்டால் மற்ற நாட்களில் ஏற்படும் துன்பங்கள் நீங்கி இன்பம் பெறலாம் என்பது நம்பிக்கை.

  பிரதோஷம் என்றால் என்ன?

  சிவபெருமான் ஆலகால விஷத்தை அருந்தி நீலகண்டனானது இந்தப் பிரதோஷ நேரத்தில் தான். தேவர்களும், அசுரர்களும் போட்டி போட்டுக் கொண்டு பாற்கடலைக் கடைந்தபோது திருமகள், ஐராவதம், காமதேனு, கற்பகத்தரு, சிந்தாமணி, கௌஸ்துப மணி முதலியவை ஒவ்வொன்றாகத் தோன்றின. லட்சுமியைத் திருமால் ஏற்றுக் கொண்டார். மற்ற பொருட்களை இந்திராதி தேவர்கள் ஏற்றுக் கொண்டனர்.

  ஆனால் கூடவே கொடிய ஆலகால விஷமும் வெளிப்பட்டது. இதைக்கண்டு தேவர்களும், முனிவர்களும் பெரிதும் நடுங்கினர். உயிர்களைக் காப்பாற்ற பரமசிவன் அந்த ஆலகால விஷத்தை உண்டார். தன் கணவரின் உடலில் விஷம் பரவுவதைக்கண்ட பார்வதி தேவி தன் தளிர்க்கரங்களால் அவரைத் தொட விஷம் சிவனின் நெஞ்சுக் குழியிலேயே நின்றுவிட்டதால் இறைவன் நீலகண்டனானார். இந்த நேரம் தான் பிரதோஷ காலம் என்று வணங்கப்படுகிறது.

  ஐப்பசி மாதம் என்பது தமிழ் மாதங்களிலே விசேஷமான மாதம். இந்த மாதத்தில் வருகிற பிரதோஷம் மகத்துவமானது. இன்று விரதம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்தால் வேண்டுதல் நிறைவேறும் என்பது நம்பிக்கை. அதுமட்டுமல்லாமல்  ஐப்பசியை துலா மாதம் என்பார்கள். காவிரியில் துலா ஸ்தானக் கட்டம் என்றே உள்ளது. மயிலாடுதுறையில் காவிரிக்கரையில் துலா ஸ்தானக் கட்டம் என்ற ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

  இந்த மாதத்தில், காவிரியில் நீராடி, துவாதசியில் பெருமாளை தரிசிப்பது மகா புண்ணியம் ஆகும். அதனால் தனம், தானியம் பெருகும். குடும்பத்தில் நல்லது நடக்கும்.கடன் தொல்லையில் இருந்து மீட்டெடுக்கும் என்று ஆச்சார்யப் பெருமக்கள் கூறியுள்ளனர்.

  மேலும் படிக்க... சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டது... பக்தர்களுக்கு அனுமதியில்லை

  விரதம் இருக்கும் முறை

  பிரதோஷ நாளில் காலையில் இருந்து விரதம் இருந்து பிரதோஷ வேளையில், மாலையில், சிவன் கோவிலுக்குச் செல்ல வேண்டும். நந்திதேவருக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனையைக் கண்ணார தரிசித்துப் பிரார்த்தனை செய்தால் இல்லத்தில் சுபிட்சம் உண்டாகும். பலர் பிரதோஷ தினத்தில் விரதமிருந்து, பிரதோஷ தரிசனம் காண்ட பின்னர் தங்களின் விரதத்தை முடிப்பது உண்டு. சாதாரண நாளில் வரும் பிரதோஷத்தில் இருக்கும் விரதத்தை விட சனிக்கிழமைகளில் வரும் சனி மகா பிரதோஷத்தின் போது விரதமிருந்தால் ஆயிரம் மடங்கு கூடுதல் பலன் கிடைக்கும் என்பது ஆன்மிக நம்பிக்கை.

  பிரதோஷ பூஜை


  பிரதோஷ நேரத்தில் நந்தி பகவானுக்கு அருகம்புல் அல்லது வில்வ இலை மாலை சாற்றி நெய் விளக்கு ஏற்றி, பச்சரிசி, வெல்லம் வைத்து பூஜை செய்வது வழக்கம்.

  மேலும் படிக்க... நாளை ஐப்பசி மாதப் பிறப்பு... முன்னோரை வணங்கினால் குலம் தழைக்கும்...               

  ஐப்பசி மாதம் 2021 - விசேஷங்கள், விரதங்கள் குறித்த தகவல்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Vaijayanthi S
  First published: