ஜோதிட சாஸ்திரத்தில் இது அக்னி நட்சத்திர தோஷம் என்று அழைக்கப்படுகிறது. அக்னி நட்சத்திர காலத்தில் எந்த ஒரு சுபகாரியங்களும் நிகழ்த்தப்பட மாட்டாது. புதிய பேச்சுவார்த்தைகள் எதுவும் இக்காலகட்டத்தில் துவங்கப்படாது. அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் இந்த வருடம் இன்று மே 4-ந்தேதி தொடங்குகிறது. மே 28-ந் தேதி வரை தொடர்ந்து 25 நாட்களுக்கு அக்னி வெயில் நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்னி வெயில் காலகட்டத்தில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கும். அதிலும் மே 11 முதல் 24-ந்தேதி வரை வெயில் மிகவும் அதிகமாக காணப்படும். எனவே பொதுமக்கள் இதுபோன்ற நாட்களில் பகல் நேரத்தில் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும்.
மேலும் வெயிலிலிருந்து காத்துக்கொள்ள அக்னி பகவானை வழிபடலாம்.. தான, தர்மங்கள் செய்யலாம்... முக்கியமாக கோயிகளுக்கு செல்வதும் அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடத்துவதும் நல்லது. அதனால் மிக நல்ல பலன்கள் கிடைக்கும். அத்துடன் பரணி நட்சத்திரத்திற்கு உரிய தேவதையான துர்க்கையையும், கார்த்திகை நட்சத்திரத்திற்கு உரிய அக்னி தேவன், ரோகிணி நட்சத்திரத்திற்கு உரிய பிரம்மாவையும் வழிபடலாம். முருகன், சிவன் அக்னியின் அம்சம். மேலும் சீதளா தேவியை வணங்குவதால் அம்மை போன்ற நோய்கள் வராமல் தடுக்கப்படும்.
அக்னி நட்சத்திர காலத்தில் தான - தர்மங்களை செய்யலாம். அத்துடன் இந்த காலத்தில் தண்ணீர் பந்தல் அமைத்தல், மோர் பந்தல் அமைத்தல் முதலியன செய்தால் இறைவனின் அருள் பெறலாம். இந்த காலத்தை கத்திரி வெயில் காலம் என்றும் அழைப்பார்கள். அப்படிப்பட்ட இந்த வெயில் காலத்தில் உஷ்ணம் அதிகமாக இருக்கும். அதனால் இந்த காலத்தில் ஏழைகளுக்கும், மாற்று திறனாளிகளுக்கும், முடியாதவர்களுக்கும் குடைகள், காலணிகளை வழங்குதல் நல்லது. அத்துடன் அன்னதானமும் செய்தல் சிறந்தது.
Also Read... Agni Natchathiram | அக்னி நட்சத்திரம் 2022 எப்போது?
ஒருவர் மன நிறைவு அடைவது நீர் அருந்திய பின்னரும், உணவருந்திய பின்னரும் தான். அதனை செய்வதால் இறை அருள் முழுவதுமாக கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதனால் நமக்கு தோல் நோய்கள் வராமல்மிருக்கும் என்பது ஐதீகம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Agni Dev, Summer, Summer Heat