திருப்பதி தேவஸ்தானத்தின் ஸ்பெஷல் நறுமண ஊதுபத்தி.. செப்டம்பர் 13 முதல் விற்பனை...

திருப்பதி ஏழுமலையான் கோவில்

திருப்பதியில் உள்ள தொழிற்சாலையில் ஊதுபத்தி தயாரிக்கும் பணிகள் தீவிரம்.

 • Share this:
  திருப்பதியில் இம்மாதம் 13ஆம் தேதி முதல் ஏழு பிராண்ட்களில் பூஜைக்கு பயன்படுத்தப்படும் ஊது பத்திகளை விற்பனை செய்ய திருமலை திருப்பதி தேவஸ்தானம் தயராக உள்ளது. 

  திருமலை திருப்பதி தேவஸ்தானம் தனக்கு சொந்தமாக இருக்கும் கோவில்களில் பயன்படுத்தப்படும் மலர்களை பயன்படுத்தி ஊது பத்திகளை தயார்செய்து பக்தர்கள் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இம்மாதம் 13ஆம் தேதி முதல் ஊதுபத்தி விற்பனையை திருமலை, திருப்பதி, திருச்சானூர் ஆகிய ஊர்களில் ஆலய வளாகங்களில் பக்தர்களுக்கு விற்பனை செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

  திருப்பதியில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா கோசாலையில் ஊதுபத்தி தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. திருப்பதி ஏழுமலையான் கோவில், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில், திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோவில் ஆகிய கோவில்கள் உட்பட தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோவில்களில் பயன்படுத்தப்படும் மலர்களை கோசாலையில் அமைக்கப்பட்டுள்ள ஊதுபத்தி தயாரிக்கும் தொழிற்சாலைக்கு கொண்டு வந்து அவற்றை நன்றாக காய வைத்து இயந்திரம் மூலம் இடித்து பொடி செய்கின்றனர்.

  மேலும் படிக்க... திருப்பதி கோவில் பற்றி நீங்கள் அறிந்திடாத சில சுவாரசிய தகவல்கள்...

  பின்னர் அந்தப் பொடியை மற்றொரு இயந்திரத்தில் கொட்டி அதனுடன் வேறு சில பொருட்களைக் கலந்து ஊதுபத்தி தயார் செய்கின்றனர். பின்னர் வேறொரு இயந்திரத்தில் தயார் செய்யப்பட்ட ஊதுபத்திகளை காயவைத்து அவற்றின்மீது நறுமண கலவை தெளிக்கப்படுகிறது. பின்னர் மீண்டும் மற்றொரு இயந்திரம் மூலம் காய வைக்கப்படும் ஊதுபத்திகள் ஏழு பிராண்டுகளில் பெட்டிகளில் அடைக்கப்பட்டு இருப்பு வைக்கப்படுகிறது.

  மேலும் படிக்க... விநாயகரின் 32 வடிவங்கள் என்னென்ன தெரியுமா?

  இம்மாதம் 13ஆம் தேதி முதல் தந்தனானா, திவ்யபாதா, துஷ்த்தி, துருஷ்தேதி, அபயஹஷ்தா, சிருஷ்த்தி ஆக்குருஷ்த்தி ஆகிய 7 பிராண்டுகளில் தினமும் மூன்றரை லட்சம் ஊதுபத்திகளை தேவஸ்தான நிர்வாகம் விற்பனைக்கு கொண்டுவர உள்ளது.

  மேலும் படிக்க... மேலும் படிக்க... விநாயகர் சிலைகளை இயற்கை மூலப் பொருட்களை கொண்டு தயாரிக்க வேண்டும் – சத்குரு வேண்டுகோள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vaijayanthi S
  First published: