Home /News /spiritual /

12 ஆண்டுகளுக்குப் பிறகு கும்ப ராசியில் சூரியனும் வியாழனும் அஸ்தமனம்... இந்த 6 ராசியினருக்கு எதிர்காலம் பிரகாசிக்கும்...

12 ஆண்டுகளுக்குப் பிறகு கும்ப ராசியில் சூரியனும் வியாழனும் அஸ்தமனம்... இந்த 6 ராசியினருக்கு எதிர்காலம் பிரகாசிக்கும்...

குரு பகவான்

குரு பகவான்

Rasi palan | ஜோதிடத்தில் கிரகங்களின் சேர்க்கை மிகவும் சிறப்பு வாய்ந்தது. கிட்டதட்ட12 ஆண்டுகளுக்குப் பிறகு சூரியனும் வியாழனும் கும்ப ராசியில் சந்திக்க உள்ளனர். இது சில ராசிகளுக்கு கடுமையான பிரச்சனைகளை ஏற்படுத்தும்...

    பிருஹஸ்பதி  என்று அழைக்கப்படும் வியாழன் கிரகமான குரு பகவான் கும்ப ராசியில் அஸ்தமாகியுள்ளார். மறுபுறம், சூரிய பகவான் மகர ராசியிலிருந்து விலகி கும்ப ராசிக்குள் நுழைந்துள்ளார்.  கும்ப ராசியில் சூரியன் மற்றும் வியாழன் இணைவு 12 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகிறது. முன்னதாக, கும்ப ராசியில் வியாழன் மற்றும் சனியின் இணைப்பு இருந்தது. வியாழன் கிரகம் குரு என்று அழைக்கப்படுகிறது. இந்த கிரகங்கள் தனுசு மற்றும் மீனத்தை ஆளும் கிரகங்கள். குரு அறிவு, கல்வி, தொண்டு, அறம் மற்றும் சமயப் பணிகளின் முகவராகக் கருதப்படுகிறார்.

    ஜோதிட சாஸ்திரத்தின்படி, இந்த கிரகத்தின் அருள் யாருக்கு கிடைக்கிறதோ, அவருடைய வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வியாழன் கிரகம் கும்ப ராசியில் சஞ்சரிக்கிறது. இந்த கிரகம் அஸ்தங்கம் காலம் பிப்ரவரி 22 முதல் மார்ச் 22 வரை இருக்கும். கும்ப ராசியில் வியாழன் மற்றும் சூரியனின் இணைப்பு 12 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகிறது. குரு பெயர்ச்சி மேஷம் மற்றும் சிம்ம ராசியினருக்கு அதிர்ஷ்டத்தை தரும். பல வருடங்களுக்குப் பிறகு இப்படி ஒரு தற்செயல் நிகழ்வு நடந்திருக்கிறது என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

    குரு பகவான் இந்த 6 ராசிக்காரர்களுக்கு அனுகூலமாக இருப்பார்
    ரிஷபம், மிதுனம், துலாம், தனுசு, மகரம், கும்பம் ஆகிய ராசிகளுக்கு குருவின் இணைவு மிகவும் சுப பலன் தரும். இந்த ராசிக்காரர்களுக்கு லக்ஷ்மி அன்னையின் அருள் பொழியும். வீட்டில் மகிழ்ச்சியும் செழிப்பும் இருக்கும். பணப் புழக்கமும் நன்றாக இருக்கும்.

    மேலும் படிக்க... இந்த 4 ராசிகாரர்களுக்கு சிவனின் ஆசிகள் எப்போதும் இருக்குமாம் 

    மேலும் இந்த 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்
    கடகம், கன்னி, விருச்சிகம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் குரு அஸ்தங்கம் போது கவனமாக இருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்கள் தேவையற்ற சர்ச்சைகளைத் தவிர்க்க வேண்டும். பண இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகம்.அதனால் எல்லா விஷயங்களிலும் மிக கவனமாக செயல்படுவது நல்லது.

    மேலும் படிக்க... ராகு பலன்: மேஷ ராசிக்கு வரும் ராகுவால் இந்த 4 ராசியினருக்கு லாபம்தான்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Guru temple

    அடுத்த செய்தி