Home /News /spiritual /

ஆடி அமாவாசை 2022 | சிறப்புகள், விரத முறை, தானம், மற்றும் தர்ப்பணம் செய்ய ஏற்ற நேரம்.!

ஆடி அமாவாசை 2022 | சிறப்புகள், விரத முறை, தானம், மற்றும் தர்ப்பணம் செய்ய ஏற்ற நேரம்.!

அமாவாசை

அமாவாசை

Aadi Ammavasai 2022 | கடக ராசியில் ஏற்கனவே சூரியன் சஞ்சரிக்கும் நிலையில், சந்திரன் தனது சொந்த வீடான கடகத்தில் ஆட்சி பெற்று சஞ்சரிக்கும் போது தோன்றும் அமாவாசை மிகச்சிறப்பானது. ஆடி அமாவாசையின் சிறப்பு, எப்போது தர்ப்பணம் செய்யலாம், விரத முறைகள் பற்றி இங்கே பார்க்கலாம்.

மேலும் படிக்கவும் ...
சூரியனும் சந்திரனும் ஒரே ராசியில் வரும் நாள் தான் அமாவாசை ஆகும். ஒவ்வொரு மாதமும், குறிப்பிட்ட நட்சத்திரத்தில் அமாவாசை தோன்றும். அவற்றில், தை அமாவாசை மற்றும் ஆடி அமாவாசை ஆகிய இரண்டுமே மிகச்சிறப்பு வாய்ந்தவை. முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் பித்ரு காரியம் செய்யவும், வேண்டி விரதம் இருக்கவும் ஏற்ற நாளாகும். இந்த ஆண்டு ஆடி அமாவாசை, ஜூலை 28 அன்று வருகிறது. கடக ராசியில் ஏற்கனவே சூரியன் சஞ்சரிக்கும் நிலையில், சந்திரன் தனது சொந்த வீடான கடகத்தில் ஆட்சி பெற்று சஞ்சரிக்கும் போது தோன்றும் அமாவாசை மிகச்சிறப்பானது. ஆடி அமாவாசையின் சிறப்பு, எப்போது தர்ப்பணம் செய்யலாம், விரத முறைகள் பற்றி இங்கே பார்க்கலாம்.

ஆடி அமாவாசை அன்று விரதம் இருந்து, முன்னோர்கள் வழிபாடு செய்வது குடும்பத்தில் தலைமுறை தலைமுறையாக இருந்து வந்த தடைகள் மற்றும் சாபங்கள் நீங்கும் என்பது ஐதீகம். பித்ரு லோகத்தில் இருக்கும் ஆத்மாக்கள், அதாவது முன்னோர்கள், ஆடி அமாவாசை அன்று பூமிக்கு வருகிறார்கள். எனவே, அமாவாசை என்று, பித்ருக்களை வழிபாடு செய்து, ஆசி பெறுவது வாழ்வை பல விதங்களில் மேம்படுத்தும்.

ஆடி அமாவாசை தர்ப்பணம் எப்படி செய்ய வேண்டும்.?

சிரத்தையும் (மிகுந்த அக்கறையுடன்) நாம் செய்யும் காரியம் தான் சிரார்த்தம் என்று மருவி உள்ளது. எனவே, இந்த நாளில் மிகுந்த கவனத்துடனும், அக்கறையுடனும் அனைத்து காரியங்களை செய்ய வேண்டும்.

பொதுவாக தர்ப்பணம் அல்லது இறந்தவர்களுக்கு பித்ரு காரியங்களை நீர் நிலைகளின் அருகில் செய்வார்கள். ஆடி அமாவாசை அன்று, ஆறு, கடல், குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் பித்து காரியம் செய்ய மக்கள் கூட்டம் அலைமோதும்.



குறிப்பாக, பித்ரு காரியம் செய்ய, முன்னோர்களின் ஆத்மா சாந்தியடையச் செய்யும் புண்ணிய ஸ்தலங்களான காசி மற்றும் ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் லட்சக்கணக்கானவர்கள் அலைமோதுவார்கள். ஆனால், அந்த இடங்களுக்கு செல்ல முடியாதவர்கள், தாங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் இருக்கும் நீர் நிலைகள் அல்லது வீட்டிலேயே கூட அமாவாசை தர்ப்பணம் செய்யலாம்.

Also Read : அமாவாசை : ஸ்ரீராமர் தர்ப்பணம் செய்த நித்ய அமாவாசை திருக்கோயில்.!

வீடு முழுவதையும் தண்ணீர் விட்டு கழுவி, சுத்தம் செய்து, பூஜையறையில் சுவாமி படங்களை துடைத்து, சந்தனம் குங்குமம் வைத்து, அலங்கரிக்க வேண்டும். முதல் நாளே, இதை செய்து விட வேண்டும்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக கோவில்கள் மூடப்பட்டிருந்ததால், பெரிய அளவில் ஒரு இடத்தில் ஒன்று கூடி தர்ப்பணம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. நீர் நிலைகளில் கூட்டாக தர்ப்பணம் செய்ய வாய்ப்புள்ளவர்கள், மற்றவர்களுடன் சேர்த்து, பித்ருக்களை வேண்டி தர்ப்பணம் செய்து முடிக்கலாம். இல்லையென்றால், வீட்டில் புரோகிதரை வரவழைத்து தர்ப்பணம் செய்யலாம். தர்ப்பணம் செய்ய முடியவில்லை என்னும் பட்சத்தில், உணவு சமைத்து அன்னதானம் செய்யலாம்.

Also Read : திருமண தடை, குழந்தை வரம் உள்ளிட்ட பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் அம்மன் கோயில்கள்.!

இறந்த முன்னோர்களில் பெண்கள் சுமங்கலியாக இறந்திருந்தால், சுமங்கலிப் பெண்களை சாப்பிட வரவேற்று, உணவு பரிமாறி, அவரவருக்கு இயன்ற வகையில் சேலை, மஞ்சள், குங்குமம் வழங்கி வழிபட்டு முன்னோர்களின் ஆசி பெறலாம்.



குழந்தைகள் தவிர்த்து, வீட்டில் உள்ள பெரியவர்கள் தலைக்குக் குளிக்க வேண்டும். சாப்பிடுவதற்கு முன்னர், உங்கள் மூதாதையருக்கு பிடித்த உணவுகளை சமைத்து படைக்க வேண்டும். எத்தனை நபர்களை வணங்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அவர்களுக்கு தனித்தனியாக வாழை இலையில் உணவு பரிமாறி படைக்கலாம், அல்லது பெரிய தலைவாழை இலையில் அனைத்து உணவுகளையும் பரிமாறி படைக்கலாம்.

முன்னோர்களுக்கு உணவைப் படைக்கும் முன்பு, யாரும் சாப்பிடக் கூடாது. நாள் முழுவதும் விரதம் இருக்கலாம். அல்லது உணவு படைக்கும் வரை சாப்பிடாமல் இருந்து, விளக்கேற்றி, கற்பூர ஆராதானை செய்து பின்னர் சாப்பிடலாம்.

Also Read :  அம்மாயி கொழுக்கட்டையும் அவ்வை நோன்பும் – ஆடி செவ்வாய் வழிபாடின் மகிமை!

காகமும் முன்னோர்கள் ஆசீர்வாதமும்

காகம் என்பது முன்னோர்களின் அம்சமாகக் கருதப்படுகிறது. எனவே, வீட்டில் இருப்பவர்கள் சாப்பிடும் முன்பு, உணவை காகத்துக்கு படைக்க வேண்டும். சாதம், காய்கறி, குழம்பு ஆகியவற்றில் நெய் சேர்த்து காகத்துக்கு படைக்க வேண்டும். காகங்கள் / காகம் அமாவாசை அன்று வைத்த உணவை சாப்பிட்டால், முன்னோர்கள் சாப்பிட வந்துள்ளார்கள், முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைத்துள்ளது. இதனால், தோஷங்கள் நீங்கி, வீட்டில் சுபிட்சம் உண்டாகும்.

மேலும், காகம் சனீஸ்வரரின் வாகனம் ஆகும். எனவே, சனி தோஷம் நீங்கும் என்பதும், ஏழரைச் சனி, அஷ்டம சனியின் தாக்கம் குறையும் என்பதும் நம்பிக்கை.



காகம் வரவில்லை என்றாலோ, அல்லது உணவை சாப்பிடவில்லை என்றாலோ, உங்கள் குடும்பத்தில் இறந்தவர்கள் ஏதோ குறையுடன் இருப்பதாக கருதப்படுகிறது.

தானமாக என்ன கொடுக்கலாம்?

பித்ருக்களுக்கு திதி கொடுக்கும் போது, அவரவரால் இயன்ற அளவுக்கு, உணவு, ஆடை, உள்ளிட்டவற்றை தானமாக வழங்கலாம். சிலர், கால்நடைகளுக்கு உணவுகளை தானமாக வழங்குவர். ஆனால், அன்னதானம் செய்வது மிகவும் சிறந்தது. மேலும், அரிசி, தானியங்கள் தானம் செய்தால் மகாலட்சுமியின் ஆசி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

Also Read : கிருத்திகை விரதம் மற்றும் முருகன் கோவில்களில் திருவிழா.!

ஆடி அமாவாசை 2022 தர்ப்பணம் செய்ய ஏற்ற நேரம்

இந்த ஆண்டு அமாவாசை திதி 27 ஜூலை 2022 அன்று இரவு 10.06க்குத் தொடங்கி, 28 ஜூலை வரை நீடிக்கிறது. எனவே, 28 ஜூலை அன்று காலை சூரிய உதயத்துக்குப் பின்னர், பிற்பகல் 3 மணி வரை எப்போது வேண்டுமானாலும் தர்ப்பணம் செய்யலாம், திதி குடுக்கலாம்.
Published by:Selvi M
First published:

Tags: Aadi

அடுத்த செய்தி