Home /News /spiritual /

நடிகை ரோஜாவின் வீட்டு பூஜை அறை - வைரல் வீடியோ

நடிகை ரோஜாவின் வீட்டு பூஜை அறை - வைரல் வீடியோ

குடுபத்தினருடன் நடிகை ரோஜா

குடுபத்தினருடன் நடிகை ரோஜா

Actress Roja | அரசியலில் பிசியாக இருந்தாலும் கணவர், குழந்தைகள் என 19 வருடங்கள் சிறந்த குடும்ப தலைவியாகவும் வாழ்ந்து வருகிறார் நடிகை ரோஜா.

தமிழ் திரையுலகில் 1990-களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை ரோஜா. இயக்குநர் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில், நடிகர் பிரசாந்திற்கு ஜோடியாக செம்பருத்தி என்ற படத்தில் தமிழ்த்திரை உலகில் அறிமுகமானவர். பின் 2009-ல் Yuvajana Sramika Rythu Congress என்ற கட்சியில் சேர்ந்தார். 2014 பொதுத் தேர்தலில், நகரி சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக நின்று வெற்றியும் பெற்று எம்.எல்.ஏ ஆனார்.

கடந்த 2019 தேர்தலிலும் ஆந்திரா மாநிலம் நகரியில் வெற்றி பெற்று தற்போது எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். அரசியலில் பிசியாக இருந்தாலும் கணவர், குழந்தைகள் என 19 வருடங்கள் சிறந்த குடும்ப தலைவியாகவும் வாழ்ந்து வருகிறார் நடிகை ரோஜா. அதுமட்டும் அல்லாமல் நடிகை ரோஜா சாமி பக்தி உடையவர். அவரை அடிக்கடி திருப்பதியிலும் திருத்தணியிலும் பார்க்கலாம்.

முக்கியமாக  திருப்பதி மலையில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்து நேராக திருத்தணி சுப்பிரமணியசாமி மலைக் கோவிலுக்கு சென்று வணங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார் ரோஜா.

அத்துடன் வீட்டிலும் தனது பூஜை அறையில் இஷ்ட தெய்வம் முதல் குலத்தெய்வம் வரை அனைவரின் புகைப்படங்களையும் விக்ரகங்களையும் வைத்து பூஜித்து வருகிறார். எந்த விஷேச நாளிலும் வீட்டில் பூஜை செய்ய தவறமாட்டாராம். அதிலும் முக்கியமான பண்டிகைகள் அனைத்திலும் தனது கணவர் செல்வமணி மற்றும் குழந்தைகளுடன் தான் பூஜை செய்து கொண்டாடுவாராம் .

கடவுள் பக்தி அதிகம் உள்ளதால்தான் நடிகையாக, மனைவியாக, அம்மாவாக ஏன் அரசியலிலும் வெற்றியாளராக தான் விளங்குவதாக ரோஜ ஏற்கனவே கூறியுள்ளார். இந்த பதிவில் நடிகை ரோஜாவின் வீட்டு பூஜை அறை எப்படி இருக்கும் அவர் தினமும் எப்படி பூஜை செய்கிறார் என்பதை ஒரு வீடியோவின் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.

வீடியோ





மேலும் படிக்க...  துர்கா ஸ்டாலின் குலதெய்வம் - வீட்டு பூஜை அறை - சாய் பாபா சிலை - டிரெண்டிங் வீடியோ
Published by:Vaijayanthi S
First published:

Tags: Actress Roja

அடுத்த செய்தி