முகப்பு /செய்தி /ஆன்மிகம் / Valentine day 2023: உங்க ராசிப்படி இந்த கலர் ஆடை அணிந்தால் உங்கள் காதல் கைகூடும்!

Valentine day 2023: உங்க ராசிப்படி இந்த கலர் ஆடை அணிந்தால் உங்கள் காதல் கைகூடும்!

love proposal

love proposal

உங்கள் ராசிப்படி காதலர் தினத்தன்று இந்த நிறத்தில் ஆடை அணிந்தால் உங்கள் காதல் கைகூடும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

காதலிக்கும் அனைத்து ஜோடிகளும், காதலர் தினத்துக்காக ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். பிப்ரவரி மாதம் முழுவதும் காதலின் மாதமாக கருதப்பட்டாலும், காதலர் தினமான பிப்ரவரி 14 அன்று தான் விமர்சையாக இளைஞர்களால் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தன்று ஒவ்வொருவரும் தனது துணையிடம், தங்களின் இதயப்பூர்வமான அன்பை வெளிப்படுத்துவார்கள். அப்படி நீங்களும் உங்கள் காதலை வெளிப்படுத்த காத்துக்கொண்டிருந்தால், காதலர் தினத்தன்று ஜோதிட சாஸ்திரப்படி உங்கள் ராசிப்படி எந்த நிறத்தில் ஆடை அணிந்தால் உங்கள் காதல் வெற்றி பெரும் என நாங்கள் கூறுகிறோம்.

மேஷம் : மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். செவ்வாய் கிரகத்தின் நிறம் சிவப்பு. எனவே, நீங்கள் காதலர் தினத்தன்று மட்டுமல்ல, எல்லா நல்ல விஷயத்திற்கும் சிவப்பு அல்லது காவி நிற ஆடைகளை அணிந்தால் செய்யும் செயலில் வெற்றி பெறலாம். திருமணம் ஆனவர்கள் இந்த நிறத்தை அணிந்தால், கணவன் - மனைவிக்கு இடையிலான பரஸ்பர அன்பு அதிகரித்து, உறவு பலப்படும்.

ரிஷபம் : காதலர் தினத்தில் பச்சை நிற ஆடை அணிவது ரிஷப ராசியினருக்கு நன்மை தரும். பச்சை நிறம் மனதில் நேர்மறையான எண்ணங்களைக் கொண்டு வருவதுடன், மனதில் உள்ள அன்பைத் தெரிவிக்கும் வண்ணமாகவும் உள்ளது. அதனால் தான் காதலர் தினத்தில் பச்சை நிற ஆடைகளை அணிய வேண்டும். இந்த நிறம் உங்களுக்கும் உங்கள் வாழ்க்கை துணைக்கும் இடையே உள்ள அன்பை பலப்படுத்தும்.

மிதுனம் : மிதுன ராசியினருக்கு மஞ்சள் அல்லது குங்குமப்பூ நிறம் நல்ல அதிஷ்டத்தை கொடுக்கும். எனவே, இந்த நாளில் நீங்கள் இளஞ்சிவப்பு நிற ஆடைகளை அணிந்தால் அது உங்களுக்கு நல்ல விஷயத்தை கொடுப்பதுடன், அன்பை அதிகரிக்கும்.

கடகம்  : கடக ராசிக்கு அதிபதி சந்திரன். எனவே, கடக ராசிக்காரர்கள் சிவப்பு நிற ஆடைகளை அணிந்தால் மிகவும் நல்லது. நீங்கள் திருமணமானவராக இருந்தால், சிவப்பு நிற ஆடைகள் உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தும் மற்றும் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரும்.

சிம்மம் : காதலர் தினம் உங்கள் துணையுடன் அற்புதமான நேரத்தை செலவிட சிறந்த நாள். மஞ்சள் நிற ஆடைகளை அணிவது நல்லது. பரஸ்பர அன்பைப் பேணுவதற்கு இந்த வண்ண ஆடைகள் உங்களுக்கு உதவும்.

கன்னி : கன்னி ராசியினர் காதலர் தினத்தில் தங்கள் துணையை கவர நீல நிற ஆடைகளை தேர்வு செய்யலாம். இந்த நிறத்தைத் தேர்ந்தெடுப்பது பரஸ்பர அன்பைப் பராமரிக்க உதவுகிறது. மேலும் காரிய வெற்றி கிடைக்கும்.

துலாம் : எந்த ஒரு சுப நிகழ்ச்சியிலும் கருப்பு நிறத்தை அணிந்தால், அது அசுபமாக கருதப்படுகிறது. இருப்பினும் துலாம் ராசிக்காரர்கள் காதலர் தினத்தன்று கருப்பு நிற ஆடையை அணிந்தால் அது அவர்களுக்கு நல்ல பலனை கொடுக்கும் மற்றும் ஒருவருக்கு ஒருவர் மீதுள்ள அன்பு அதிகரிக்கும்.

விருச்சிகம் : குங்குமப்பூ நிறம் அனைத்து ராசிகளுக்கும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. ஆனால், காதலர் தினத்தன்று விருச்சிக ராசிக்காரர்கள் காவி நிற ஆடைகளை அணிந்தால் அது மிகவும் அதிர்ஷ்டம் தரும். நல்லிணக்கத்தை அதிகரிக்க இந்த நிறத்தை நீங்கள் அணிய வேண்டும்.

தனுசு : தனுசு ராசிக்காரர்கள் காதலர் தினத்தில் அழகான சிவப்பு நிற ஆடையை அணிவதன் மூலம் தங்கள் துணையை கவரலாம். இந்த நிறம் தனுசு ராசிக்கு ஏற்றது. சிவப்பு அன்பின் நிறமாக கருதப்படுகிறது. எனவே, நீங்கள் காதலர் தினத்தில் சிவப்பு நிற ஆடையை அணிவதால் நல்ல பலன் கிடைக்கும்.

மகரம்: காதலர் தினத்தில் மகர ராசிக்காரர்கள் க்ரீம் நிற ஆடைகளை அணிவது மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். எனவே, உங்களின் நாளை சிறப்பிக்க விரும்பினால், நீங்கள் கிரீம் நிற ஆடைகளை அணிய வேண்டும். காதலர் தினத்தில் உங்கள் துணையுடன் தரமான நேரத்தை செலவிடுங்கள்.

கும்பம்: காதலர் தினத்தில் உங்கள் துணையை கவர பாட்டில் பச்சை நிற ஆடைகளை அணியுங்கள். இந்த வண்ண ஆடைகள் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் கொண்டுவர உதவும்.

மீனம்: காதலர் தினத்தன்று மீன ராசிக்காரர்கள் வெள்ளை நிற ஆடை அணிவது மங்களகரமானதாக கருதப்படுகிறது. வெள்ளை நிறம் இந்த ராசிக்காரர்களுக்கு அன்பையும் மகிழ்ச்சியையும் தருவதாகக் கருதப்படுகிறது.

First published:

Tags: Lovers day, Valentine's day