முகப்பு /செய்தி /ஆன்மிகம் / வாஸ்துப்படி மற்றவர்களிடம் இந்த விஷயங்களை மறந்தும் பகிரக்கூடாதாம்!

வாஸ்துப்படி மற்றவர்களிடம் இந்த விஷயங்களை மறந்தும் பகிரக்கூடாதாம்!

இந்த விஷயங்களை மற்றவர்களுக்கு எப்பவும் பகிரக்கூடாதாம்.

இந்த விஷயங்களை மற்றவர்களுக்கு எப்பவும் பகிரக்கூடாதாம்.

things should not be shared with others | நம்மிடம் இருக்கும் சில பொருட்களை மற்றவர்களுடன் பகிர்ந்தால், அது தீய விளைவுகளை ஏற்படுத்தும் என வாஸ்து சாஸ்த்திரம் கூறுகிறது. அந்தவகையில், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடாது விஷயங்களை பற்றி இங்கே காணலாம்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil |

things you should not share with others | நம்மிடம் இருக்கும் சில பொருட்கள் நமது நண்பர்களுக்கு பிடிக்கும். நமது நண்பர்களிடம் சில பொருட்கள் நமக்கு பிடிக்கும். எனவே, சில சமயங்களில் நமக்கு பிடித்த ஆடை, காலணி, வாட்ச் என அனைத்தையும் நாம் கடன் வாங்கி அணிவதும், கடன் கொடுப்பதும் இயல்பான ஒன்று. ஏனென்றால், சிறு வயதில் இருந்தே ஷேரிங் நல்லது என கேட்டு வளர்ந்திருக்கிறோம்.

ஆனால், வாஸ்து சாஸ்த்திரம் சில விஷயங்களை நாம் மற்றவர்களுக்கு பகிரக்கூடாது என கூறுகிறது. அப்படி பகிர்ந்தால், அவை நம் வாழ்வில் சிரமங்களை ஏற்படுத்தும் எனவும் கூறுகிறது. அப்படி நாம் பகிரக்கூடாத விஷயங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.

​உடுத்திய ஆடைகளை பகிர்ந்துகொள்வது…

கணக்கே இல்லாத அளவுக்கு நமது நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் நமது உடைகளை பகிர்த்திருப்போம் அல்லது பண்டமாற்று செய்திருப்போம். இது, ஆடைகளை மீண்டும் மீண்டும் அணிவதை தவிர்ப்பதோடு, அது நமக்கு பிடித்த ஒன்றாகவும் இருந்திருக்கும். வாஸ்துப்படி, இப்படி ஆடைகளை பரிமாறிக்கொள்வது அல்லது பகிர்வது தவிர்க்கப்பட வேண்டும் என கூறப்படுகிறது.

ஏனெனில், அவ்வாறு செய்வது ஒரு நபரின் துரதிர்ஷ்டத்தை அல்லது தீயவற்றை மாற்றுவதற்கான செயல் என கூறப்படுகிறது. அதுமட்டும் அல்ல, இது தோல் அலர்ஜி மற்றும் தொற்று பரவுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துகிறது.

​காலணிகளைப் பகிர்ந்துகொள்வது…

காலணிகளைப் பகிர்வது என்பது உடைகளைப் பகிர்வது போல் இயல்பானது அல்ல. உங்களுக்கு பிடித்த ஷூ வேறொருவரின் கால் அளவுக்குப் பொருந்தாமல் போகலாம். ஆனால், செருப்புகள் அப்படி இல்லை. ஆனால், காலணிகளை பகிர்வது வாஸ்து சாஸ்திரம் அசுப செயல்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

Also Read | இந்த பொருட்களை வீட்டில் வைத்தால் பண கஷ்டம் நீங்கி வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்!

நாம் கோயிலுக்கு சென்று வந்து பார்க்கையில், நமது காலனி காணாமல் போனால், வீட்டில் உள்ள பெரியவர்கள் கூறுவார்கள்…. “சரி விடு, நம்மை பிடித்த சனி விலகிவிட்டது” என. அது, உண்மை தான். வாஸ்துப்படி, சனி (சனி பகவான்) ஒரு நபரின் பாதத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, மற்றவர்களின் காலணிகளை அணிவது சனியின் கோபத்தை அணிந்தவர் மீது பரப்பும். இதனால் வீட்டில் நல்லிணக்கமும் அமைதியும் இல்லாமல் போகலாம்.

​கடன் வாங்கிய பேனா…

எங்காவது நாம் செல்லும் போது, நம்மிடம் பேனா இல்லை என்றால் யாரிடமாவது கடன் வாங்கி அதை கொடுக்காமல் மறந்து நாம் அப்படியே வந்துவிடுவோம். ஆனால், அப்படி செய்வது வாஸ்து சாஸ்திரத்தில் தவறாகக் கருதப்படுகிறது. உண்மையில், ஒரு நபரின் விதி அவரது பேனாவுடன் தொடர்புடையது என்று கூறப்படுகிறது.

எனவே, உங்களிடம் பேனாவைக் கொடுக்கும் நபர் துரதிர்ஷ்டவசமான நேரத்தில் இருந்தால், அவருடைய பேனாவை நீங்கள் கடன் வாங்கினால் அவர்களின் துரதிர்ஷ்டத்தை நீங்கள் எடுத்துக் கொள்வீர்கள். எனவே, நீங்கள் எப்போதாவது பேனா கடன் வாங்கினால், உங்கள் வேலை முடித்ததும் பேனாவைத் திருப்பித் தர மறக்காதீர்கள்.

​கை கடிகாரத்தை கடன் வாங்குதால்…

உங்கள் நண்பர் அல்லது உடன்பிறந்தவர்களிடம் இருந்து கைக்கடிகாரத்தை கடன் வாங்கியிருந்தாலும், முடிந்தவரை உங்கள் சொந்த கடிகாரத்தை அணிய முயற்சிக்கவும். ஆனால், கடிகாரம் உங்களுக்கு நேரத்தைச் சொல்வது மட்டுமல்ல, உங்கள் வாழ்க்கையின் வரவிருக்கும் நல்ல மற்றும் கெட்ட நேரங்களுடனும் தொடர்புடையது.

Also read | உங்கள் கனவில் சிவன் வந்தால் இதுதான் அர்த்தம்.. ஜோதிடம் சொல்லும் பலன்கள்!

எனவே, நீங்கள் கடன் வாங்கிய கடிகாரத்தின் உரிமையாளர் கடினமான காலங்களைச் சந்தித்தால், அது உங்களுக்கு மாற்றப்பட்டு உங்கள் வாழ்க்கையை எதிர்மறையாக பாதிக்கும்.

​நண்பரின் மோதிரங்களை வாங்கி அணிவது…

நண்பர்கள் அல்லது குடும்பத்தினருக்கு சொந்தமான மோதிரம் அல்லது ரத்தினக் கற்களை அணிவதைத் தவிர்க்கவும். ஒவ்வொரு மோதிரமும் அல்லது ரத்தினமும் ஒரு கிரகத்துடன் தொடர்புடையது என்பதால், அதை அணிவதற்கு முன், அந்த ரத்தினம் உங்களுக்கு ஏற்றதா இல்லையா என்பதை நீங்கள் சரிபார்க்க வேண்டும்.

இது ஒரு சில மணிநேரங்கள் அல்லது நாட்களுக்கு மட்டுமே என்றாலும், உங்களுக்குப் பொருத்தமற்ற மோதிரங்கள் அல்லது ரத்தினக் கற்களை அணிவது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் அல்லது பிற தீங்குகளை விளைவிக்கும்.

First published:

Tags: Astrology, Zodiac signs