முகப்பு /செய்தி /ஆன்மிகம் / Vastu Tips: வாஸ்துப்படி இந்த செடிகளை வீட்டில் வளர்த்தால் பண இழப்பு ஏற்படும்!

Vastu Tips: வாஸ்துப்படி இந்த செடிகளை வீட்டில் வளர்த்தால் பண இழப்பு ஏற்படும்!

vastu tips

vastu tips

இந்த செடிகளை நீங்கள் வீட்டுல வளர்த்தால் உங்களுக்கு பண இழப்புகள் ஏற்படலாம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நம்மில் பலருக்கு தோட்டக்கலை மீது அதிக ஆர்வம் இருக்கும். எனவே, வீட்டை சுற்றியும், வீட்டுக்குள்ளேயும் செடிகளை அழகுக்காக வளர்ப்போம். அப்படி, செடி வளர்க்கும் போது நாம் செய்யும் சில வாஸ்து தவறுகள் நமக்கு துரதிஷ்டத்தையும் பண இழப்பையும் ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. அப்படி நாம் வீட்டில் வளர்க்ககூடாத தாவரங்கள் பற்றி இங்கே காணலாம்.

முள் இருக்கும் செடிகள்

வாஸ்து சாஸ்திரத்தில், கற்றாழை மற்றும் முள் உள்ள செடிகள் எதிர்மறை சக்தியை வீட்டிற்குள் கொண்டு வரும். செடிகளின் அல்லது இலைகளில் உள்ள கூர்மையான முட்கள் எதிர்மறை ஆற்றலைக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. கற்றாழை வீட்டிற்கு துரதிர்ஷ்டத்தையும், குடும்பத்தில் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தையும் அதிகரிக்குமாம். எனவே, வீட்டில் முள் உள்ள செடிகளை வளர்ப்பதை தவிர்ப்பது நல்லது.

​பருத்தி செடி

பருத்தி செடிகளை வீட்டில் வளர்ப்பது நல்ல பலன்களை தராது என வாஸ்து சாஸ்த்திரம் கூறுகிறது. குளிர்கால பருத்தி செடிகள் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் வாஸ்து படி நல்லது அல்ல என கூறப்படுகிறது. இதை வீட்டில் வளர்த்தால் நிதி இழப்பு மற்றும் துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. பருத்தி செடிகள் துரதிர்ஷ்டவசமாக கருதப்படுவதால், அவற்றை வீட்டிற்குள் வைக்கப்படும் போது துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்.

பொன்சாய் செடிகள்

வாஸ்து சாஸ்திரத்தில் பொன்சாய் செடிகள் குறித்து எந்த தகவலும் குறிப்பிடப்படவில்லை. அவை பார்ப்பதற்கு சிறியதாகவும், கவர்ச்சிகரமானதாக இருந்தாலும், அவற்றை வீட்டில் வைக்க பரிந்துரைக்கப்படவில்லை. பொன்சாய் செடிகளில் தாவரத்தின் வளர்ச்சி தடைபடுவதால், குடும்பத்தினரின் வாழ்க்கைச் சுழற்சியும் பாதிக்கப்படும். அத்துடன் உங்கள் தொழில் அல்லது வியாபாரத்தில் மந்தநிலையையும் சந்திக்கலாம். எனவே, இவற்றை தவிர்ப்பது நல்லது.

புளிய மரம்

புளிய மரங்கள் இயற்கையாகவே நல்ல மரங்களாக கருதப்படுவதில்லை. அவற்றை நாம் எப்போதும் தீய சக்தியுடன் ஒப்பிடுவோம். இவை தீய சக்தியை எளிமையாக ஈர்க்கும் என்று கூறப்படுகிறது. எனவே, அவற்றை வீட்டிற்கு அருகில் அல்லது வீட்டு தோட்டத்தில் வைப்பது நல்லது அல்ல. இந்த மரம் எதிர்மறையான ஆற்றலை அதிகமாக ஈர்க்கிறது மற்றும் வாஸ்து சாஸ்திரத்தின்படி மன அமைதியை சீர்குலைக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

மருதாணி செடி

நம்மில் பலரின் வீட்டில் மருதாணி செடி இருக்கும். ஏனென்றால், அவை மருத்துவ பொருட்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஆனால், வாஸ்துப்படி, வீட்டில் மருதாணி அல்லது மெஹந்தி செடிகளை வைக்கக்கூடாது என கூறப்படுகிறது. ஏனெனில், இதிலும் தீய சக்திகள் இருப்பதாக நம்பப்படுகிறது. இந்த செடியின் வாசனை மிகவும் வலுவானது. இது ஆபத்தான பிராணிகளை ஈர்க்கும். இது மன அமைதியையும் வீட்டின் வளிமண்டலத்தையும் சீர்குலைக்கும்.

பால் உற்பத்தி செய்யும் மரங்கள்

சில தாவரங்களின் கிளைகள் உடைந்தால் அதிலிருந்து பால் வழியும். இத்தகைய தாவரங்கள் நமக்கு துரதிர்ஷ்டத்தைத் தருவதாகக் வாஸ்து சாஸ்த்திரத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே, வீடுகளில் அல்லது தெருக்களில் இதை நடுவதை தவிர்க்கவும். வாஸ்து சாஷ்திரத்தின்படி, ஆலமரம் மற்றும் அரச மரம் போன்ற பால் சுரக்கும் மரங்கள் அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தாது. இவை சுத்தமான நல்ல காற்றை கொடுத்தாலும், எதிர்மறையான ஆற்றலை உண்டாக்குகிறது. எனவே, இவற்றை தவிர்ப்பது நல்லது.

ஒலியாண்டர் அல்லது அரளி செடிகள்

அழகான இளஞ்சிவப்பு, வெள்ளை, மஞ்சள் பூக்களுடன் காணப்படும் அரளி செடி அழகான மற்றும் கண்கவர் தாவரமாகும். ஆனால், இதில் அலகைபோலவே ஆபத்தும் நிறைந்துள்ளது. ஆம், இதில் நம்பமுடியாத அளவுக்கு நச்சுத்தண்மை உள்ளதாக கூறப்படுகிறது. இதன் ஒரு இலை, உங்களுக்கோ அல்லது உங்களின் செல்லப்பிராணிக்கோ ஆபத்தாக மாறலாம். இதை உட்கொண்டால், அரித்மியா, தலைச்சுற்றல் மற்றும் நடுக்கம் ஆகியவற்றை ஏற்படுத்தும். இதன் இலைகளை உட்கொண்டு மக்கள் இறந்த நிகழ்வுகளும் குறிப்பிடப்பட்டுள்ளது.

First published:

Tags: Nature plant, Vastu, Vastu tips