“வீட்டை கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப்பார்” என்பார்கள். அதற்கு அர்த்தம் வீடு காட்டுவதும், திருமணம் செய்வதும் அவ்வளவு எளிமையான விஷயம் இல்லை என்பது தான். சொந்த வீடு கட்டுவது அல்லது வாங்க வேண்டும் என்பது நம்மில் பலரின் கனவு.
ஓட்டு வீட்டில் இருப்பவருக்கு காரவீடு கட்டணும் என்கிற ஆசை, வாடகை வீட்டில் இருப்பவருக்கு சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என ஆசை, சொந்த வீட்டில் இருப்பவர்களுக்கு புதிய வீடு கட்டவேண்டும் என்ற ஆசை. என்ன தான் வீடு கட்டுவதற்கான யோகம் ஏற்பட்டாலும், சிலர் துவங்கிய வேலையை சட்டென முடிக்காமல் வருட கணக்கில் இழுத்து கொண்டே செல்வார்கள். இதற்கு காரணம் அவர்கள் வீடு கட்ட துவங்கிய மாதம்.
ஆம், வாஸ்து சாஸ்த்திரத்தில் படி, சில குறிப்பிட்ட மாதங்களின் வீடு கட்ட துவங்கினால், பணம் விரையமாவதுடன், வீடு காட்டும் பணி முடியாமல் வருடக்கணக்காக இழுத்துக்கொண்டே போகும் என கூறப்படுகிறது. அந்தவகையில், வீடுகட்ட உகந்த மாதம் எது என்பதை இங்கே பார்க்கலாம்.
வீடு கட்ட உகந்த மாதம் எது?
சித்திரை மாதத்தில் வீடு கட்டினால் வீண் செலவு ஏற்படும்.
வைகாசி மாதத்தில் வீடு காட்டினால் செயல் வெற்றி கிடைக்கும்.
ஆனி மாதத்தில் வீடு காட்டினால் மரண பயம் ஏற்படும்.
ஆடி மாதத்தில் வீடு காட்டினால் வீட்டில் உள்ள கால்நடைக்கு நோய் ஏற்படுமாம்.
ஆவணி மாதத்தில் வீடு கட்டினால் குடும்ப உறவில் ஒற்றுமை ஏற்படும்.
புரட்டாசி மாதத்தில் வீடுகட்டினால் குடும்பத்தவர்க்கு நோய் பாதிப்பு ஏற்படும்.
ஐப்பசி மாதத்தில் வீடு கட்டினால் உறவினரால் கலகம் ஏற்படும்.
கார்த்தி மாதத்தில் வீடு கட்டினால் லட்சுமி தேவி அருள் கிடைக்கும்.
மார்கழி மாதத்தில் வீடு கட்டினால் வீடு எழும்பாமல் தடை வந்து கொண்டே இருக்கும்.
Also Read | செவ்வாய் பெயர்ச்சி 2023: அதிகம் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்?
தை மாதத்தில் வீடு கட்டினால் அக்கினி பயம் கடன் தொல்லை அதிகரிக்கும்.
மாசி மாதத்தில் வீடு கட்டினால் சௌபாக்கியம் உண்டாகும்.
பங்குனி மாதத்தில் வீடு கட்டினால் வீட்டுப்பொருள் பொன், பண விரயம் ஏற்படும் என்பது வாஸ்து நம்பிக்கை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Dream, Rented house, Vastu, Vastu tips