• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • ஆவணி மாத திங்கட்கிழமை விரதம் இருப்பதால் ஏற்படும் நன்மைகள் & விசேஷ தினங்கள்

ஆவணி மாத திங்கட்கிழமை விரதம் இருப்பதால் ஏற்படும் நன்மைகள் & விசேஷ தினங்கள்

மாதிரி படம்

மாதிரி படம்

ஆவணி மாதத்தில், பௌர்ணமி ஷ்ரவண நட்சத்திர (திருவோணம்) நாளில் தோன்றும். இது, விஷ்ணுவின் ஜனன கால நட்சத்திரமாகும்.

  • Share this:
வேத ஜோதிட நாட்காட்டி, பஞ்சாங்கத்தின் படி, ஆவணி மாதம் மிகவும் சுபத்தன்மை நிறைந்த மாதம். இந்த மாதம் இரண்டு விதமாக கணிக்கப்படுகிறது. குரு பவுர்ணமி தொடக்கம் மற்றும் அமாவாசை அன்று ஆவணி மாதம் தொடக்கம் ஆரம்பிக்கிறது. இந்த மாதம் முழுவதும் சிவ பெருமானை வணங்கி, வழிபடுவதற்காக, ஆசீர்வாதத்தைப் பெறுவதற்கு ஏற்ற மாதம். ஆயிரக்கணக்கான பக்தர்கள், இந்த மாதம் முழுவதும் விரதமிருந்து, தினமும் சிவலிங்கத்திற்கு பூஜை செய்கின்றனர். சிவபெருமானின் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காக, கூடுதலாக, பல பூஜைகளையும், பிரார்த்தனைகளையும், வழிபாடுகளையும் செய்கின்றனர்.

ஆவணி மாத திங்கட்கிழமை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது

ஆவணி மாதத்தில், பௌர்ணமி ஷ்ரவண நட்சத்திர (திருவோணம்) நாளில் தோன்றும். இது, விஷ்ணுவின் ஜனன கால நட்சத்திரமாகும். அல்லது, ஒவ்வொரு ஆண்டும் பௌர்ணமி நாளும், திருவோண நட்சத்திரமும் ஒன்றிணைந்து வரும். அதனாலேயே, இது ஆவணி / ஷ்ரவண மாதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மாதத்தின் ஒவ்வொரு திங்களும், மிகவும் சுபத்துவம் வாய்ந்தது. சிவன் கோவில்களில், ஆவணி மாதத்தின் ஒவ்வொரு திங்கைகிழமை அன்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. சிவலிங்கத்திற்கு இரவும், பகலும் தொடர்ந்து நீர் மற்றும் பால் அபிஷேகம் செய்யப்படும். அது மட்டுமின்றி ஆவணி முழுவதும், ஒவ்வொரு திங்களன்றும் வில்வ இலைகள், சிவபக்தர்கள் புனித நீர், பால் மற்றும் பூக்களால் அர்ச்சிக்கின்றனர். பக்தர்களும் காலை முதல் இரவு வரை விரதமிருந்து, இரவு முழுவதும் எரியும் வகையில் ஒற்றை அகல் விளக்கை ஏற்றுவார்.

ஆவணி மாதத்தின் முக்கியத்துவம்

இந்து புராணங்களின் படி, தேவர்களும் (கடவுள்), அசுரர்களும், பாற்கடலில் இருந்து அமிர்தத்தை கடைந்தனர். அமிர்தம் சாகா வரம் தரும் ஆற்றல் கொண்டது. எனவே, தேவர்களும், அசுரர்களும் தங்களுக்கு சாகா வரம் பெறுவதற்காக, வாசுகி என்ற பாம்பை கயிறாப் பயன்படுத்தி, சமுத்திரத்தில் இருந்த மலையைக் கடந்தனர். இதற்காக, செல்வத்தின் அதிபதியான லக்ஷ்மியை வழிபட்டனர். லக்ஷ்மியும், பாற்கடலில் கடைந்த அமிர்தத்தை தேவர்களுக்கு வழங்க விரும்பினார்.

இரு தரப்புமே, தங்களுக்கு மட்டுமே அமிர்தம் கிடைக்க வேண்டும் என்று சண்டைடியிட்டனர், எனவே, யார் பலசாலிகள் என்று போரிட்டு, வெற்றி பெறுபவர்களுக்கு சாகா வரம் தரும் அமிர்தம் என்று முடிவு செய்தனர். கடும் போருக்குப் பிறகு, அமிர்தத்தை இரண்டு தரப்பினருமே சமமாகப் பிரித்து உண்ண முடிவு செய்தனர். சிவபெருமானின் கழுத்தில் இருக்கும் பாம்புகளான வாசுகி மற்றும் சுமேரு பர்வதம் ஆகியவற்றை நியமித்தனர்.

பாற்கடலைக் கடையும் போது, பதினான்கு வெவ்வேறு விலைமதிப்பில்லா, சுபத்துவமான பொருட்கள் கிடைத்தன. அவற்றில், நவரத்தின கற்கள், நகைகள், உடன் கடும் விஷமான ஆலகால விஷமும் அடங்கும். அமிர்தத்தை கடைந்தவர்கள் நஞ்சை எதிர்பார்க்கவில்லை. என்ன செய்வது என்று தெரியாத நிலையில், நஞ்சு உலகைய அழிக்கத் தொடங்கியிர்ந்தது. பிரபஞ்சத்தின் இறையான சிவபெருமான், அந்த ஆலகால விஷத்தை குடித்தார். அவரின் மனைவியான பார்வதி தேவி, நஞ்சை அவர் விழுங்கி விடக் கூடாது என்று அவரின் கழுத்தை இறுக்கமாகப் பிடித்தார். இதனால், சிவபெருமானின் நாக்கும் தொண்டையும் நீல நிறத்தில் மாறின. இதன் காரணமாகவே, அவர் நீலகண்டன் என்று அழைக்கப்படுகிறார்.

உலகில் உள்ள அனைவருக்கும் இரவா வரம் தந்த அமிர்தத்தை அனைவரும் உண்ட அந்தே நேரத்தில், சிவபெருமான் மட்டும் உயிரைக் குடிக்கும் நஞ்சை அருந்தினார். கொடிய விஷமான ஆலகால விஷம், சிவபெருமானை பல விதமான துன்பங்களுக்கு ஆளாக்கியது. அதனாலேயே, தன்னுடைய உடலை குளிர்விக்க, பிறை நிலவை தலையில் அணிந்தார். அனைத்து தேவர்கள், கடவுள் மற்றும் அவதாரங்களும், சிவபெருமான புனிதமான கங்கை நீரால் அபிஷேகம் செய்தனர். இவை நடந்தது அனைத்துமே, இந்த அற்புதமான ஆவணி மாதத்தில் தான். எனவே தான், ஆவணி மாதம் மிகவும் விசேஷமான மாதமாக கருதப்படுகிறது.

விசேஷம் மட்டுமில்லாமல், ஆவணி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சமீபத்தில் திருமணமான பெண்கள், தீய சக்தி மற்றும் துரதிர்ஷ்டம் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்க, ஆவணி மாத செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மங்கள கெளரி விரதம் கடைபிடிக்கிறார்கள். ஆவணி மாத வெள்ளிக்கிழமைகள் மற்றும் சனிக்கிழமைகளில், திருமணமான பெண்கள் பெருமாளுக்கு விரதம் இருக்கிறார்கள். அதே போல, ஆண்களும், சனிக்கிழமைகளில் பெருமாளுக்கான சடங்குகளை செய்கிறார்கள். திருமணமான பெண்களின் முக்கிய நோன்பான வரலக்ஷ்மி விரதம் இந்த மாதத்தில் அனுசரிக்கப்படுகிறது.

ஆவணி மாத விசேஷ தினங்கள்ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், சத்தீஸ்கர், பீகார் மற்றும் ஜார்க்கண்ட் ஆந்திரா, தெலுங்கானா, கோவா, மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா மற்றும் தமிழ்நாடு
ஜூலை 25, 2021 August 9, 2021
ஜூலை 26, 2021 August 16, 2021
ஆகஸ்ட் 2, 2021 ஆகஸ்ட் 23, 2021
ஆகஸ்ட் 9, 2021 ஆகஸ்ட் 30, 2021
ஆகஸ்ட் 16, 2021 செப்டம்பர் 6, 2021
ஆகஸ்ட் 22, 2021 செப்டம்பர் 7, 2021

விரதம் இருப்பதால் ஏற்படும் நன்மைகள் அறிவியல் ரீதியான விளக்கம் :

பொதுவாக விரதம் இருப்பது உடலுக்கும் மனதுக்கும், புத்துணர்வு அளிக்கும். ஆவணி மாதத்தில் விரதம் இருப்பது ஒருவரின் உடல்நலத்துக்கு மிகவும் நன்மை அளிப்பதாக கூறப்படுகிறது. மழைக்காலத்தின் ஒரு பகுதியாக ஆவணி மாதத்தில் சூரிய ஒளி குறைந்த அளவிலேயே இருக்கும். எனவே, இது ஜீரண சக்தியைக் குறைக்கும். அதன் விளைவாக, சுலபமாக ஜீரணமாகும் உணவுகளை சாப்பிட வேண்டும். அதனால் தான், பெரும்பாலானவர்கள் இந்த மாதத்தில் சைவ உணவுப் பழக்கத்தை மேற்கொள்கின்றனர். அது மட்டுமின்றி, விரதம் இருப்பதும் பரவலாக கடைக்பிடிக்கப்பட்டு வருகின்றது. விரதம் இருப்பது உணவு செரிமானாக் குழாயை சுத்திகரித்து, நுண்கிறுமிகள் தாக்குதலில் இருந்து இயற்கையான பாதுகாப்பு அளிக்கிறது.

ஆவணி மாதத்தில் விரதம் இருக்கும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் :

விரதம் இருக்க வேண்டுமென்றால், ஒருவர் அதிகாலையில் எழுந்து குளிக்க வேண்டும். எப்போதுமே, சிவபெருமானை வழிபடும் முன், விநாயகரை வழிபடுவது வழக்கம். ஈசனுக்கான பிரசாதங்களில் வில்வ இலைகள், நீர், தேன், பால் மற்றும் வெள்ளை பூக்கள் ஆகியவை அடங்கும். பிரார்த்தனைகளுக்கான மந்திரங்களை கூறிய பிறகு, நீங்கள் உண்ணாவிரதத்தைத் தொடங்கலாம். மாலையில், சூரியன் மறையும் வரை விரதத்தைத் தொடரலாம். சில நபர்கள் நாள் முழுவதும் விரதங்களை மேற்கொள்ளாமல், குறிப்பிட்ட மணிநேரங்கள் வரை விரதம் இருக்கிறார்கள். அல்லது விரதமாக சமைத்த உணவுகளை உண்ணாமல், நாள் முழுவதும் பழங்களை மட்டும் உண்ணுகிறார்கள். சிலர், தண்ணீர் மட்டும் அருந்துவார்கள். தங்களின் சௌகரியத்துக்கு ஏற்றவாறு, விரதத்தை மேற்கொள்ளலாம்.

மாலை நேரத்தில் விரதத்தை முடிக்க, ஒரு சிலர் சிவன் கோயில்களுக்கு சென்று, ஈசனை வழிபட்டு, விரதத்தை நிறைவு செய்கின்றனர். சிலர், வீட்டிலேயே வழிபாட்டை நிறைவு செய்கின்றனர்.

ஆவணி நோன்பை கடைபிடிக்கும் ஒரு சில பக்தர்கள், 24 மணி நேரம் கடுமையான விரதம் மேற்கொள்கிறார்கள். அடுத்த நாள் காலையில் இவர்கள் விரதத்தை பூர்த்தி செய்கிறார்கள். பெண்கள் சோமவார விரதத்தை மேற்கொண்டால், தாங்கள் விரும்பும் வாழ்க்கைத்துணை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

கூடுதலாக, அனைத்து ஆசைகளும் விருப்பங்களும் நிறைவேறும் என்றும் பரவலாக நம்பப்படுகிறது. இந்தியா முழுவதும் இதைப் போன்று விரதங்களும், சடங்குகளும் பரவலாகக் காணப்படுகின்றன. ஆச்சரியமூட்டும் விதமாக, ஒரு சிலர், சோமவார விரதத்தை ஆண்டு முழுவதும் கடைபிடிக்கின்றனர். இதைப் போன்ற ஆழமான பக்தியும், அற்புதங்களும் இந்தியாவில் மட்டுமே காணப்படுகின்றன.

ருத்ராபிஷேக பூஜையை, நேர்த்தியான முறையில் செய்வது, சிவபெருமானின் ஆசீர்வாதம் கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது.

ஆவணி மாதத்தில் சிவபெருமானை வழிபடுவதற்கான பூஜை :

சிவபெருமானைப் பூஜிக்க, கிழக்கு நோக்கி உட்கார வேண்டும். அதைத் தொடர்ந்து, வலது கையில் ஒரு சில துளிகள் புனித நீரை எடுத்துக் கொண்டு, உங்களுக்கு என்ன தேவையோ அதைக் கேட்க வேண்டும். அதைத் தொடர்ந்து, நீங்கள் தியானம் செய்யும் போது, ஈசனையும் நினைத்துக் கொள்ளவும். கையில் உள்ள நீரை, சிவலிங்கத்தின் மீது ஊற்றவும். ‘ஓம் நம சிவாய’ என்று கூறிய படி, பஞ்சாமிர்தத்தை சிவலிங்கத்தின் மீது அபிஷேகம் செய்யவும். மீண்டும் தண்ணீர் ஊற்றி, அட்சதைத் தூவவும். பிறகு, ஆர்த்தி எடுக்க வில்வ இல்லை மற்றும் ஊதுபத்தியை ஏற்றி வைக்கவும். இனிப்புகளை காணிக்கையாக்கி, பாவங்கள் மற்றும் கர்மாவில் இருந்து விடுபட வேண்டுங்கள்.

ஆவணி மாதத்தில் திங்கட்கிழமை அன்று சிவபெருமானை வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகள் :

* பக்தர்கள் ஆன்மீக ரீதியான அறிவைப் பெறுவார்கள்
* உடல் மற்றும் மன ரீதியான ஆரோக்கியம் மேம்படும்
* பிரபஞ்சத்தை உருவாக்கியதும், அழிப்பதும் ஈசனே! எனவே, இந்த நாளில் சிவபெருமானை வழிபடுவது, நல்ல * * * ஞாபக சக்தியையும், மன உறுதியையும் கொடுக்கும்.
* சிவபெருமான் நல்ல வாழ்க்கைத்துணையை வழங்குவார்
* கூடுதலாக, விரதமிருப்பது, நம் பாதையில் இருக்கும் நச்சுகள் மற்றும் இடையூறுகளை நீக்குகிறது
* விளக்கு ஏற்றி வழிபட்டால், நம்முடைய அறிவு மேம்படும்
* கங்கை நீரால் அபிஷேகம் செய்வது, முக்திக்கு வழிவகுக்கும்
* சிவபெருமானுக்கு விருப்பமான பிரசாதங்களை வழங்குவது, நமக்கு எல்லா விதத்திலும் வெற்றியைப் பெற உதவும். நம்முடைய ஆசைகளும் நிறைவேறும்.

ஜோதிட ரீதியாக ஆவணி மாதத்தின் சிறப்புகள் :

வேத ஜோதிடத்தின் கூற்று படி, சூரியன் சிம்ம ராசியில் பெயர்ச்சி ஆகும் நாள், ஆவணி மாதம் தொடக்கம் என்று கூறப்படுகிறது. இந்த கிரகத்தின் பெயர்ச்சி, அனைத்து ராசிகளையும் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கிறது. அதனால் தான், பஞ்சாங்கம் இதனை மிகவும் விசேஷமான மாதமாகக் கருதுகிறது.

முடிவு:

ஆவணி மாதம் சிவபெருமானை வழிபடுவதற்கு மிகவும் உகந்த மாதமாகும். இது, வாழ்க்கையை புதிய கண்ணோட்டத்தில் பார்க்கவும், முக்தி அடையவும் உதவி செய்கிறது. சிவ ஆலயங்களிலும், ஆவணி மாதம் வரும் அனைத்து திங்கட் கிழமைகளிலும், நாள் முழுவதும் சிறப்பான பூஜைகள் நடைபெறுகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: