Home /News /spiritual /

ஆனி மாத ராசி பலன்கள் மற்றும் வழிபட வேண்டிய தெய்வங்கள் – மேஷம் முதல் கடகம் வரை

ஆனி மாத ராசி பலன்கள் மற்றும் வழிபட வேண்டிய தெய்வங்கள் – மேஷம் முதல் கடகம் வரை

Rasipalan

Rasipalan

Horoscope | சுக்கிரனின் வீடான ரிஷபத்தில் இருந்து சூரியன் புதனின் வீடான மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறது.

    வேற ஜோதிட அடிப்படையில், மாதப் பிறப்பு என்பது சூரியன் எந்த ராசிக்குச் செல்கிறது என்ற அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது. மேஷத்தில் சூரியன் உச்சம் பெற்று பெயர்ச்சி ஆவது சித்திரை மாதப் பிறப்பாகவும், தமிழ் வருடப்பிறப்பு என்றும் கொண்டாடப்படுகிறது. இரண்டாவது ராசியான ரிஷபத்தில் இருந்து மூன்றாவது ராசியான, மிதுன ராசிக்கு சூரியன் பெயர்ச்சி ஆவது ஆனி மாதப் பிறப்பை குறிக்கும். ஜாதக கட்டத்தில், பெரும்பாலும் சூரியன் மற்றும் புதன் அருகருகில் அல்லது அடுத்த ராசிகளில் அமர்ந்திருப்பார்கள். இதன் மூலம் ஜாதகத்தில் புத ஆதித்ய யோகம் தோன்றும். சுக்கிரனின் வீடான ரிஷபத்தில் இருந்து சூரியன் புதனின் வீடான மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறது. ஆனி மாதம் முழுவதும், அதாவது ஜூன் 15 ஆம் தேதி முதல் ஜூலை 15 ஆம் தேதி வரை சூரியன் மிதுன ராசியில் சஞ்சரிப்பார்.

    மேஷ ராசிக்கு பொருளாதார நெருக்கடி

    ஆனி மாதம் மேஷ ராசியினருக்கு இரண்டாம் வீட்டில் இருந்த சூரியன் மூன்றாம் வீட்டிற்கு பெயர்ச்சி ஆகிறார். ஆனால் இந்த மாதம் முழுவதும் உங்கள் ராசியின் பன்னிரெண்டாம் வீடு அதாவது விரைய ஸ்தானத்தில் குரு மற்றும் செவ்வாய் சஞ்சரிப்பதால் செலவுகளில் கவனத்துடன் இருக்க வேண்டும். பணம் மற்றும் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் அவசரமாக எந்த முடிவுகளையும் எடுக்க வேண்டாம். பொருளாதார ரீதியாக ஏற்ற இறக்கங்கள் இருக்கும் இருப்பதால் ஜிம் தேவையில்லாத செலவுகளை குறைப்பது நல்லது. குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும். மருத்துவ செலவுகள் ஏற்படக்கூடும் என்பதால் உடல் நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும். தொழில் வேலை வியாபாரம் ஆகியவற்றில் சிறு சிறு நெருக்கடிகள் தோன்றும். ஆனால் பெரிய பிரச்சினைகள் எதுவும் ஏற்படாது. வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும்.

    வழிபட வேண்டிய தெய்வம்: செவ்வாய்கிழமையில் முருகன் வழிபாடும் வியாழக்கிழமையில் தட்சிணாமூர்த்தி வழிபாடும் பொருளாதார உயர்வைத் தரும்.

    ரிஷப ராசிக்கு நினைத்ததெல்லாம் நிறைவேறும்

    கடந்த ஒரு மாதமாக ராசியிலேயே இருந்த சூரியன் தற்போது இரண்டாம் வீட்டுக்கு செல்வது மற்றும் 11 ல் குரு மற்றும் செவ்வாய் சேர்க்கை 6 ல் கேது ஆகிய அனைத்துமே உங்களுக்கு சாதகமான பலன்களை குடுக்கும். இந்த மாதம் நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும் மாதமாக இருக்கும். புதிய முயற்சிகளை தயக்கமின்றி தொடங்கலாம். கடந்த காலத்தில் இருந்த பிரச்சனைகளும் படிப்படியாகக் குறையும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை ஏற்படும். பொருளாதார ரீதியாக முன்னேற்றம் காணப்படும். தன வரவுகள் லாபம் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த குறைபாடுகள் நீங்கும். தொழில் மற்றும் வேலையில் போட்டி காணப்படும் இருப்பினும் எதையும் சமாளிக்கும் ஆற்றலும் உங்களிடம் இருக்கிறது.

    வழிபட வேண்டிய தெய்வம்: வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி ஆலயத்திற்கு வணங்கி வெள்ளை நிற வஸ்திரம் வழங்கி மற்றும் தாமரை பூக்களால் அர்ச்சனை செய்து வருவது மேன்மையைத் தரும்.

    மிதுன ராசிக்கு வேலை வணிகத்தில் கவனம் தேவை

    மிதுன ராசியினருக்கு ராசியிலேயே சூரியன் அமர்ந்திருப்பதால், உங்களுடைய சொல்லுக்கு மற்றவர்கள் கட்டுப்படுவார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த மாதம் முதல் பகுதி வரை ராகு செவ்வாய் மற்றும் சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களும் சாதகமான இடங்களில் சஞ்சரிக்கின்றன. எனவே எல்லா முயற்சிகளிலும் எதிர்நீச்சல் போட்டாவது நீங்கள் வெற்றி பெறுவீர்கள். பண வரவு திருப்திகரமாக இருக்கும். ஆனாலும் ஆடம்பர செலவுகளைத் தவிர்க்க வேண்டும். கண் மற்றும் உஷ்ண சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகலாம். எனவே ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில்ரீதியாக உங்கள் ஆளுமையைக் கண்டு போட்டி மற்றும் பொறாமை ஏற்படலாம்.

    வழிபட வேண்டிய தெய்வம்: விஷ்ணு கோவிலுக்கு சென்று விஷ்ணு பகவானை தரிசித்து துளசி மாலை சாற்றலாம்

    Also Read : கும்ப ராசியில் வக்கிரமாகும் சனி - எந்த ராசியினருக்கு எந்த விளைவுகளை ஏற்படுத்தும்..!

    கடக ராசிக்கு ஏற்றமான காலம்

    உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் ஆட்சி பெற்ற குருவுடன் செவ்வாய் சஞ்சரிப்பது மிகமிக ஏற்றமான காலத்தை உணர்த்துகிறது. குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடி வரும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் மற்றும் நிகழ்வுகள் ஏற்படும். பூர்வீக சொத்துகள் வழக்குகளில் இருந்த பிரச்சினைகள் விலகும். ஆரோக்கியமான உணவு பழக்கத்தை கடைப்பிடிப்பது உடல் நலக் கோளாறுகளை தவிர்ப்பதற்கு உதவும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் புதிய முயற்சிகள் மட்டும் கூட்டுத் தொழில் ஆகியவற்றில் தைரியமாக ஈடுபடலாம்.

    வழிபட வேண்டிய தெய்வம்: சனிபகவான், ஆஞ்சநேயர் மற்றும் விநாயகரை வழிபடுவதன் மூலம் தடங்கல்கள் விலகி மேன்மை உண்டாகும்
    Published by:Selvi M
    First published:

    Tags: Astrology, Rasi Palan

    அடுத்த செய்தி