ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

ஆடிப்பூரம்: மடிசார் சேலை கட்டி பக்தர்களுக்கு காட்சியளித்த அகிலாண்டேஸ்வரி அம்மன் 

ஆடிப்பூரம்: மடிசார் சேலை கட்டி பக்தர்களுக்கு காட்சியளித்த அகிலாண்டேஸ்வரி அம்மன் 

மடிசார் சேலை கட்டி பக்தர்களுக்கு காட்சியளித்த அகிலாண்டேஸ்வரி அம்மன்

மடிசார் சேலை கட்டி பக்தர்களுக்கு காட்சியளித்த அகிலாண்டேஸ்வரி அம்மன்

Thiruvanaikoil | ஆடிப்பூரத்தையொட்டி, நேற்று திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மன் மடிசார் புடவை கட்டி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாக விளங்குவது திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேசுவரர்- அகிலாண்டேஸ்வரி கோயில். இங்குள்ள மூலவர் சிவலிங்கத்தை சுற்றி எப்போதும் நீர் ஊற்று எடுத்துக் கொண்டே இருப்பதால் நீர் ஸ்தலமாக போற்றப்படுகிறது.

அதேபோல, தமிழகத்தில் உள்ள சக்தி ஸ்தலங்களில் பிரசித்திப் பெற்ற அகிலாண்டேஸ்வரி அம்மன் இங்கு அருள்பாலிக்கிறார்.

காலையில் மகாலட்சுமியாகவும், மதியத்தில் துர்க்கையாகவும், மாலையில் சரஸ்வதி தேவியாகவும் காட்சியளிப்பதாக ஐதீகம்.

மேலும் இந்த கோயில் ஆண்டுதோறும் ஆடி மாதம் வரும் வெள்ளிக்கிழமை அம்மனுக்கு உகந்ததாக கருதப்படுகிறது.

குறிப்பாக, ஆடிப்பூரத்தன்று மூலவர் மற்றும் உற்சவ அம்மனுக்கு சிறப்பு அலங்காரமாக, மடிசார் புடவை அணிவிக்கப்படுகிறது.

அகிலாண்டேஸ்வரி அம்மனை தரிக்க காத்திருந்த பெண்கள்

மேலும் படிக்க... கனமழை எச்சரிக்கை: நீலகிரிக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்பு

ஆண்டுக்கொரு முறை மட்டுமே இந்த அலங்காரத்தில் அம்மனை தரிசனம் செய்ய முடியும் என்பதால், நூற்றுக்கணக்கான பக்தர்கள் குறிப்பாக பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Aadi, Trichy