Aadi Velli : ஆடி வெள்ளியும் அம்மன் வழிபாடும்... கோயில்களில் சிறப்பு பூஜை

அம்மன்

சிவனுடைய சக்தியைவிட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும் என்பது ஐதீகம்.

  • Share this:
    இன்று ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை என்பதால் அதிகாலையிலேயே அம்மன் கோயில்களுக்குச் சென்று மக்கள் வழிபட்டு வருகின்றனர். இந்த நாள் ஆடி வெள்ளிக் கிழமையுடன் பௌர்ணமியும் சேர்ந்து வருவது இந்த ஆண்டின் கூடுதல் சிறப்பு.

    ஆடி வெள்ளியில் அம்மைனை வணங்கி, நிம்மதியை வேண்டி வழிபடுவது மக்களின் வழக்கம். எத்தனை வெள்ளிகள் வந்தாலும் ஆடி வெள்ளிக்கு (Aadi Velli) என்று ஒரு தனிச்சிறப்பு உண்டு. இந்நாளில், விரதம் இருந்து அம்மனை வழிபட்டால் இன்பங்கள் இல்லம் தேடி வந்து கொண்டேயிருக்கும் என்பது நம்பிக்கை.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளி கிழமையும் புற்றுள்ள அம்மன் கோயிலுக்குச் சென்று நாகருக்குப் பால் வார்த்து, குலம் தழைக்க வேண்டி வழிபடுவர். ஆடி முதல் வெள்ளியன்று இனிப்பு தேங்காய் கொழுக்கட்டை, உப்பு, எள்ளுக் கொழுக்கட்டை ஆகியவற்றை செய்து அம்மனுக்கு படையலிட்டு வழிபட்டு மகிழ்வது தமிழக மக்களின் வழக்கம்.

    அதேபோல, ஆடி வெள்ளியன்று மாலை நேரத்தில் அம்மனை அலங்கரித்து வழிபட்டால் வளங்கள் அனைத்தும் வந்து சேரும். குடும்பம் முன்னேற்றம் அடையும், மாங்கல்ய பாக்கியமும், தொழில் மேன்மையும் ஏற்படும். ஆடி வெள்ளியன்று குத்துவிளக்கு பூஜை செய்து சுமங்கலிப் பெண்களுக்கு மங்கலதுணி, தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, மஞ்சள் மற்றும் குங்குமம் வைத்துக் கொடுத்தால் நற்பலன்கள் நம்மை வந்து சேரும், இல்லத்தில் மங்கலம் உண்டாகும் என்பது ஐதீகம்.

    Must Read : இன்று ஆடி முதல் வெள்ளி... வீட்டில் பரவசம் மிகுந்த அம்மன் பாடலை கேட்டால் நல்லது...

    அம்மனுக்கு உகந்த இந்த ஆடி மாத வெள்ளி கிழமைகளில் அம்மன் கோவில்களில் பாலபிஷேகம் செய்து வழிபடுவது சிறப்பு. சுக்கிரனுக்கு உகந்த வெள்ளி கிழமையில் பாலபிஷேகம் செய்து வழிபட்டால் சுக்கிரன் அருள் கிடைக்கும். அதன்படி, அம்மனை வழிபட்டு அம்மன் அருளுடன் சுக்கிரனின் அருளையும் பெறலாம்.

    Read More : ஆடி வெள்ளி: அம்மன் அருளை அள்ளித்தரும் பக்திப் பாடல்கள்

    இந்நிலையில், சிறப்பான இந்த நன்நாளில் அம்மனின் அருளைப் பெற, பல்வேறு கோயில்களில் மக்கள் வழிபட்டு வருகின்றனர். பல்வேறு கோயில்களில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

    இந்த ஆடி மாதம் முழுவதும் அம்மனின் ஆலயங்களில் திருவிழாக்கோலம்தான். சிவனுடைய சக்தியைவிட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும். எனவே, ‘ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார்’ என்பது ஐதீகம்.
    Published by:Suresh V
    First published: