ஆடி வெள்ளியில் அம்மனுக்கு மாவிளக்கு தீபம் ஏற்றுவது ஏன்?

மாவிளக்கு

ஆடி வெள்ளி அன்று அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றினால் மிகவும் நல்லது. இது பல காலமாக நமது முன்னோர்களால் கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரு பிரார்த்தனை.

 • Share this:
  பலவிதமான தீபங்களில் மாவிளக்கு தீபமும் ஒன்று. ஆடி வெள்ளியன்று அம்மனுக்கு மாவிளக்கேற்றினால் அம்மன் மனம் குளிர்ந்து அருள்புரிவாள் என்பது ஐதீகம். இந்த மாவிளக்கை பச்சரிசி மாவையும், வெள்ளை சர்க்கரை, ஏலக்காய் போன்ற வாசனைப் பொருட்களையும் சேர்த்து சிறிது நெய் விட்டு மாவாக பிசைந்து அதை வாழை இலையின் நடுவே விளக்கு போல் அமைக்க வேண்டும். பின்னர் அதில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி, அம்மன் சன்னதியில் வைத்து வழிபாடு செய்தால் மாவிளக்கு போடுதல் என்று கூறப்படுகிறது.

  இவ்வாறு செய்யும் போது குடும்பத்தில் திருமணம், கிரகப்பிரவேசம் போன்ற மங்கள நிகழ்ச்சிகள் எந்தவித தடங்கலுமின்றி நடைபெறும் என்று நம்பப்படுகிறது. அதிலும் குல தெய்வத்தை வழிப்பட செல்லும் போது மாவிளக்கு ஏற்றி வழிபாட்டால் மிகவும் சிறப்பு. குடும்பம் மென்மேலும் செழிக்கும் என்று நம்பப்படுகிறது. மாவிளக்கில் ஜோதியாக நின்று ஒளிரும் ஜோதி ஸ்வரூபமாக அம்பிகை, நம் இல்லங்கள் தோறும் அருள்புரிவதற்காகவே மாவிளக்கு ஏற்றப்படுவதாக நம்பிக்கையுள்ளது.

  மேலும் படிக்க... ஆடி மாதத்தில் அம்மனை வணங்குவதால் என்னென்ன மகிமைகள் கிடைக்கும்..?  மாவிளக்கு செய்முறை:

  ஒரு கிலோ பச்சரிசியில் தண்ணீர் விட்டு களைந்து, ஒரு துணியில் பரப்பி காயவைக்கவும். பிறகு லேசான ஈரப்பதத்துடன் இருக்கும்போது, அந்த அரிசியை வீட்டில் இருக்கும் மிக்ஸியிலேயே அரைத்து எடுத்துக் கொள்ளலாம். மாவு அரைக்கும் போது நான்கு, ஐந்து ஏலக்காயை சேர்த்து அரைக்கவும். ஒரு கிலோ அரிசிக்கு முக்கால் கிலோ வெல்லம் போட வேண்டும். வெல்லத்தை துருவி அரிசி மாவுடன் கலந்து வைக்கவும். பின்னர் அதனை நன்றாக பிசைந்து உருண்டையாக உருட்டவும். அதில் நெய் ஊற்ற ஏதுவாக சிறிய குழிபோல் அமைக்க வேண்டும்.

  மேலும் படிக்க... நன்மை தரும் கால பைரவ வழிபாடு...

  அந்த குழியின் ஓரத்தில் மூன்று இடத்தில் குங்குமம் கொண்டு பொட்டு வைத்து, குழியில் நெய் ஊற்றி, திரி போட்டு விளக்கேற்ற வேண்டும். வீட்டில் மாவிளக்கு ஏற்றும்போது, பூஜை அறையில் கோலம் போட்டு, அதன் மீது வாழை இலை விரித்து, அதில் மாவிளக்கை வைக்க வேண்டும். சுற்றிலும் பூக்களால் அலங்கரித்து வைத்தால் மிகவும் நல்லது.

  மேலும் படிக்க... திருமணத் தடை நீங்கவும், கடன் தொல்லை தீரவும் வணங்க வேண்டிய அற்புத ஆலயம் எது தெரியுமா?

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vaijayanthi S
  First published: