Aadi Velli | ஆடி வெள்ளி அம்மன் வழிபாடு அள்ளி அள்ளிக் கொடுக்கும்...

Aadi Velli | ஆடி வெள்ளி அம்மன் வழிபாடு அள்ளி அள்ளிக் கொடுக்கும்...

ஆடி வெள்ளியன்று மாலை நேரத்தில் அம்பிகையை, ஆதிபராசக்தியை, அகிலாண்டேஸ்வரியை, புவனேஸ்வரியை அலங்கரித்துப் பார்த்து வழிபாடு செய்தால் வளங்கள் அனைத்தும் வந்து சேரும்.

  • Share this:
    ஆடி மாதத்தின் வெள்ளிக்கிழமையான இன்று அம்பாளை வணங்கி முக்தியைப் பெற உகந்த நாள். அன்னையின் தாள் பணிந்து அடைக்கலம் புகுந்தால் குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் நீடித்து நிலைக்கும். எத்தனை வெள்ளிக்கிழமைகள் வந்தாலும் ஆடி வெள்ளிக்கு  என்று ஒரு தனிப்பெருமை உண்டு. அன்றைய தினம் விரதம் இருந்து அம்பிகையை வழிபட்டால் இன்பங்கள் இல்லம் தேடி வந்து கொண்டேயிருக்கும் என்பது நம்பிக்கை.

    வாரக்கிழமைகளில் சுக்ர வாரம் என்றழைக்கப்படுவது வெள்ளிக்கிழமையாகும். துள்ளித் திரியும் சிங்கத்தில் பவனி வரும்  அம்பிகையை வெள்ளிக்கிழமை அன்று வழிபட்டால் நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெற வழிபிறக்கும் என்பதும் நம்பிக்கை.

    மேலும் படிக்க... இன்று ஆடி முதல் வெள்ளி... வீட்டில் பரவசம் மிகுந்த அம்மன் பாடலை கேட்டால் நல்லது...

    ஆடி வெள்ளியன்று மாலை நேரத்தில் அம்பிகையை, ஆதிபராசக்தியை, அகிலாண்டேஸ்வரியை, புவனேஸ்வரியை அலங்கரித்துப் பார்த்து வழிபாடு செய்தால் வளங்கள் அனைத்தும் வந்து சேரும். இதன் மூலம் குடும்ப முன்னேற்றமும், மாங்கல்ய பாக்கியமும், கணவருக்குத் தொழில் மேன்மையும் ஏற்படும்.

    மேலும் இந்த ஆடி வெள்ளியன்று குத்துவிளக்கு பூஜை செய்து சுமங்கலிப் பெண்களுக்கு ரவிக்கைத்துணி, தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, மஞ்சள், குங்குமம் வைத்துக் கொடுத்தால் நற்பலன்கள் வந்து சேரும். இல்லத்தில் மங்கலம் உண்டாகும்.

    மேலும் படிக்க... Aadi Velli : ஆடி வெள்ளியும் அம்மன் வழிபாடும்... கோயில்களில் சிறப்பு பூஜை

    மேலும் கிராமங்களில் ஆடி வெள்ளியன்று வேப்ப இலையை கொண்டு வந்து வீட்டின் நிலை வாசலில் கட்டி வைப்பார்கள். அத்துடன் ஒரு சிறிய பித்தளை சொம்பு நிறைய தண்ணீரை ஊற்றி அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், ஒரு சிட்டிகை குங்குமம், இரண்டு வேப்ப இலை போட்டு, இந்த தீர்த்தத்தில் உங்களுடைய குலதெய்வமும் அம்மனும் வந்து அமர வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்வது நல்லது.

    மேலும் படிக்க... ஆடி முதல் நாள் குலதெய்வத்தையும் அம்மனையும் பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்தால் நல்லது...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: