ஆடிக்கிருத்திகை, ஆடி பதினெட்டாம் தேதி, ஆடி அமாவாசை என்பதெல்லாம் எவ்வளவு சிறப்பு வாய்ந்ததோ, அதே போல ஆடி மாதம் வரும் பௌர்ணமியும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஜோதிட ரீதியாக சூரியனும் சந்திரனும் ஒரே ராசியில் அமர்வது அமாவாசை என்றும், எதிரெதிராக சூரியனுக்கு நேர்கோட்டில் அமர்வது பௌர்ணமி என்றும் அறிந்து கொள்ளலாம். அதன்படி ஆடி மாதத்தில் கடக ராசியில் சூரியன் அமர்ந்து இருக்கும் பொழுது கடக ராசிக்கு ஏழாவது ராசியான மகர ராசியில் உத்திராட நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சரிப்பது ஆடிப் பௌர்ணமி ஆகும்.
ஆடி பௌர்ணமி என்றாலே நினைவுக்கு வருவது ஆடித்தபசு தான். சிவபெருமானா, பெருமாளா என்று உலகம் இரண்டாகப் பிரிந்து போகாமல் இருப்பதற்காக உலகைக் காக்க ஊசி முனையில் அம்மன் தவம் செய்த கதை ஒன்று உள்ளது! திருநெல்வேலிக்கு அருகில் உள்ள சங்கரன் கோவில் என்ற ஊரில், மிகவும் பிரசித்தி பெற்ற ஆடித்தபசுக்கு மிகப்பெரிய பின்னணி இருக்கிறது. உலகை ரட்சிக்க ஊசியில் தவமிருந்த ஆதிபராசக்தி, கோமதி அம்மனாக இந்த கோவிலில் ஆட்சி அளிக்கிறார்.
ஊசிமுனையில் அம்மன் தவம் செய்த கதைப் பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்.
சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயண ஆலயத்தில் தர்ப்துள்ள அம்மன் சன்னதி முன்பு நாகச்சுனை இருந்தது.
அந்த நாகச்சுனையில் சங்கன் மற்றும் பதுமன் என்ற இரண்டு நாகர்கள் வாழ்ந்து வந்தனர் சங்கன் என்ற நாகர் சிவபெருமான் மீது தீராத பக்தியும், பதுமன் என்ற நாகர் மகாவிஷ்ணுவின் மீது தீராத பக்தியும் கொண்டுருந்தனர். இருவருக்கும் அவ்வப்போது சண்டை ஏற்படுவதுண்டு. சிவபெருமான் தான் உயர்ந்தவர் என்று சங்கனும், மகாவிஷ்ணு தான் உயர்ந்த கடவுள் என்று பதிவனும் அவ்வப்போது வாக்குவாதத்தில் ஈடுபடுவார்கள். இவர்களுடைய வாக்குவாதம் மற்றும் வேறுபாடு ஒரு கட்டத்தில் தீவிரமான சண்டையாகி பிரளயமாக வெடிக்கும் அளவுக்கு ஆனது. உடனடியாக இவர்கள் இருவருமே ஆதி பராசக்தியான பார்வதி தேவியிடம் இதற்கு ஒரு தீர்வு தேவை என்று முடிவு செய்து கைலாயத்திற்கு சென்றனர்.
பார்வதி தேவியிடம் சங்கன் சிவபெருமான்தான் உலகின் மிக உயர்ந்த கடவுள் என்றும் பதுமன் மகாவிஷ்ணு தான் உயர்ந்த கடவுள் என்றும் மீண்டும் விவாதித்தனர். இருவர் சொல்வதில் எது சரி என்பதை அன்னை சக்தி தான் முடிவு செய்ய வேண்டும் என்று தேவியிடம் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். தன் உடலின் ஒரு பாதியில் சிவபெருமான் இருக்கிறார் மற்றும் அதே நேரத்தில் மகாவிஷ்ணு தன்னுடைய சகோதரர்; இருவரில் யார் உயர்ந்தவர் என்று எப்படி கூற முடியும் என்று பார்வதி தேவி மிகவும் பரிதவித்து போனார். எனவே, இவர்கள் இருவரும் ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் என்று அவர்களிடமே சிவபெருமான் மற்றும் மகாவிஷ்ணு இருவரும் ஒருவர்தான்; உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்பதெல்லாம் உங்களுடைய அறியாமை என்று எடுத்துரைத்தும் அவர்கள் கேட்கவில்லை. இருவரும் ஒன்றுதான் என்று எங்களுக்கு நிரூபியுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தனர். சிவபெருமானையும் மகாவிஷ்ணுவையும் ஒன்றாக காட்சியளிப்பார்கள் என்று இரு நகர்களுக்கும் சக்திதேவி உறுதி அளித்தார். உடனடியாக இதைப் பற்றி தன் கணவரான சிவபெருமானிடம் கூறினார்.
Also Read : இலங்கையில் இந்து மதக்கோவில்களுக்கு பெருமளவில் செல்லும் சிங்களவர்கள்.!
வைகுண்டத்தில் வாழும் பெருமாளும், கைலாயத்தில் வாழும் சிவபெருமானும் அவ்வளவு எளிதாக ஒன்று சேர்ந்து காட்சியளிக்க மாட்டார்களே, அது அவ்வளவு சுலபமில்லை என்று சிவபெருமான் மறுத்துவிட்டார்.
இது சிவபெருமானின் மற்றுமொரு திருவிளையாடல் என்று உணர்ந்த சக்தி அந்த நாகர்கள் வசிக்கும் அந்த இடத்திலேயே ஊசியின் மேல் நின்று ஒற்றைக்காலில் தவம் புரியத் துவங்கினார்.
பார்வதிதேவியின் தவத்தால் நெகிழ்ந்த சிவபெருமான், சங்கரநாராயணனாக அதாவது ஒரு பாதி சிவனாகவும், ஒரு பத்தி பெருமாளாகவும் காட்சியளித்தார். சங்கனும் பதுமனும் இந்த தரிசனத்தால் முக்தி அடைந்தனர். பார்வதி தேவியும், தான் தவம் செய்த அந்த தலத்தில், கோமதி அம்பாளாக காட்சி தருகிறார்.
Also Read : வரலட்சுமி பூஜை செய்வது எப்படி.? அம்பாளை அழைப்பது முதல் நோன்பு கயிறு கட்டுவது வரை.!
தன் பக்தர்களின் வேண்டுகோளையும் நிறைவேற்றி, உலகை ரக்ஷித்த கோமதி அம்பாள் மீண்டும் தவக்கோலம் பூண்டாள். மீண்டும் ஒற்றைக்காலில் தவம் செய்யத் தொடங்கினாள். அர்த்தநாரீஸ்வரர் ஆக தன் உடலின் ஒருபாகத்தை சிவபெருமானுடன் பகிர்ந்த பார்வதி தேவி, சங்கரநாராயணராக சிவபெருமான் காட்சி அளித்த போது ஒரு பாதி தன் கணவனாகவும் மறுபாதி தன்னுடைய சகோதரன் மகாவிஷ்ணுமாகவும் காட்சி அளித்திருக்கிறார். எனவே தன் சகோதரன் தன் கணவரின் உடலின் ஒரு பாகத்தில் இருக்கும் பொழுது எப்படி தன் கணவனுக்கு மாலை இடுவது என்று எண்ணி, சிவபெருமான் மீண்டும் தன்னுடைய முழு உருவத்தில் காட்சி அளிக்க வேண்டும் என்று மீண்டும் தவம் புரிந்தார். அதன் பிறகு, சங்கர லிங்கமாக காட்சியளித்தார் சிவபெருமான்.
சங்கரநாராயணனாக காட்சியளித்து, ஆடித்தபசு என்று அம்மன் ஊசி முனையில் தவம் செய்வது, அதற்கு பிறகு மீண்டும் அம்மன் மீண்டும் தவம் செய்து சிவபெருமா ஈசனாக காட்சியளித்து, கோமதி அம்பாளுக்கு மாலையிட்டு மணம் முடிப்பது ஆகிய அனைத்துமே சங்கர நாராயணன் கோவில் மிக விசேஷமாக ஆடி பவுர்ணமி அன்று நடைபெறும். இந்த மாதம் ஆடி பெவுர்ணமி ஆகஸ்ட் 10 ம் யான இன்று நடைபெற இருக்கிறது.
ஆடித்தபசு அன்று அம்மனை தரிசித்து, வேண்டினால் எல்லா வரமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Aadi