• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • ஆடி மாத தேய்பிறை பிரதோஷம் இன்று.. ஈசனை வலம் வந்தால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன?

ஆடி மாத தேய்பிறை பிரதோஷம் இன்று.. ஈசனை வலம் வந்தால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன?

சிவன்

சிவன்

ஆடி மாதத்தில் வருகின்ற ஆடி தேய்பிறை பிரதோஷ தினத்தில் சிவபெருமானை வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

  • Share this:
    பிரதோஷ காலம் 

    சிவ பெருமான் ஆலகால விஷத்தை உண்டு. உலகை காத்த காலம் பிரதோஷம். அப்படியான கால கட்டத்தில் நந்தி பகவானையும், சிவபெருமானையும் தரிசனம் செய்தால் சர்வ பாவமும் விலகும். நல்ல மக்கட்பேறு உண்டாகும். இந்தப் பிரதோஷ காலம் என்பது திரயோதசித் திதியில் மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரை உள்ள காலம் ஆகும்.

    சோமசூத்திர பிரதட்சணம்

    இந்தக் காலத்தில் ஈசனின் சந்நிதியை "சோமசூத்திர பிரதட்சணம்" செய்வது என்பது மிகவும் விசேஷம். இதன் அடிப்படையில், நந்தியை தரிசனம் செய்து அங்கு நின்று இடப்புறமாக சென்று சண்டிகேஸ்வரரை தரிசனம் செய்து சென்ற வழியே திருப்பி வரவேண்டும். நந்தியை மீண்டும் தரிசனம் செய்து அங்கு நின்று வலமாக சென்று கோமுகி எனப்படும் சிவபெருனின் அபிஷேக நீர் வரும் துவார வழியே தரிசனம் செய்து சென்ற வழியே திரும்பி வர வேண்டும்.

    நந்தியை மீண்டும் தரிசனம் செய்து அங்கு நின்று இடப்புறமாக சென்று சண்டிகேஸ்வரரை தரிசனம் செய்து சென்ற வழியே திரும்பி வந்து நந்தியை தரிசனம் செய்து வலமாக வர வேண்டும். திரும்பவும் கோமுகியை தரிசனம் செய்து மீண்டும் வந்த வழியே திரும்பி வந்து நந்தியை தரிசனம் செய்து இடப்புறமாக சென்று சண்டிகேஸ்வரரை தரிசனம் செய்து திரும்பி வரவேண்டும். இதற்கு சோமசூத்திர பிரதட்சணம் என்று பெயர்.

    இதனை பிரதோஷ காலத்தில் மட்டுமே செய்ய வேண்டும். அப்படியாகச் செய்வது மிகவும் விசேஷம். பொதுவாகவே, பிரதோஷ காலத்தில் நந்தியை தரிசனம் செய்த பின்னரே சிவபெருமானை தரிசனம் செய்ய வேண்டும். அதுவே விதி. சோமசூத்திர பிரதட்சணம் செய்த பின்னர் தன்னைத்தானே சுற்றிக் கொண்டு 'ஆத்ம பிரதட்சணம்' செய்ய வேண்டும். இதனால் செய்த பாவங்கள் விலகி நற்பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    இப்படியாகப் பிரதோச காலங்களில் கோயில் சுற்றுகையில் முதலில் சண்டிகேஸ்வரர் வரை, பிறகு தீர்த்த தொட்டி வரை என மாறி, மாறி சுற்றுவதன் மூலம் பிறவா வரம் கிடைக்கப்பெறும். மோக்ஷம் சித்திக்கும். நாமும் கூட பிரதோஷ வேளையில் அப்படியே ஈசனை வலம் வருவோம். நலம் பெறுவோம்.

    மேலும் படிக்க... Aadi Velli | ஆடி வெள்ளி அம்மன் வழிபாடு அள்ளி அள்ளிக் கொடுக்கும்...

    ஆடி மாதத்தில் வருகின்ற ஆடி தேய்பிறை பிரதோஷ தினத்தில் சிவபெருமானை எவ்வாறு வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

    ஆடி மாத தேய்பிறை பிரதோஷ தினத்தன்று அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்துவிட்டு சிவனை வணங்கி, உணவேதும் உண்ணாமல் சிவபெருமானுக்கு விரதமிருக்கலாம். ஆடி தேய்பிறை பிரதோஷ தினமான இன்று பிரதோஷ வேளையான மாலை 4 மணி முதல் 6 மணி வரையான நேரத்தில் அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு சென்று சோமாசூக்த பிரதிட்சணம் வந்து வணங்க வேண்டும்.

    பிறகு நந்தி தேவர் மற்றும் சிவப்பெருமானின் அபிஷேகத்திற்கு பால், பன்னீர், தேன், தயிர் போன்ற அபிஷேக பொருட்களை தானம் தருவது சிறந்தது. மேலும் நந்தி தேவருக்கு அருகம்புல் மாலை சாற்றி, வெல்லம் கலந்த அரிசியை நந்தி பகவானுக்கு நைவேத்தியமாக வைக்க வேண்டும். பிரதோஷ வேளையில் பூஜை செய்து நந்தி தேவர் மற்றும் சிவபெருமான், பார்வதி தேவியை வணங்க வேண்டும்.

    மேலும் படிக்க... பிறந்த குழந்தைக்கு முதன்முறையாக திட உணவு கொடுக்க போகிறீர்களா? அதற்கான நல்ல நாள், நேரம் குறித்த விவரங்கள்!

    எவ்வளவு பெரிய தோஷமாக இருந்தாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து வெள்ளை நிற பசுவிடமிருந்து கறந்த பாலைக் கொண்டு ஈசனை அபிஷேகம் செய்து, வில்வ இலை, மல்லிகை பூக்கள் சாற்றி வழிபட்டால் சிறப்பான பலன் கிடைக்கும். .

    ஆடி தேய்பிறை பிரதோஷ பூஜை மேற்கொள்ளும் போது அறிவு வளரும், நினைவாற்றல் பெருகும், அனைத்து விதமான தோஷங்களும் நீங்குகிறது. சித்த பிரம்மை, மன நல குறைபாடுகள் போன்றவை குணமாகும். வேலை கிடைக்காமல் தவிப்பவர்களுக்கு விரைவில் வேலை கிடைக்கும். வீட்டில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடைபெறும்

    மேலும் படிக்க... இன்றைய பஞ்சாங்கம்.. நல்ல நேரம்.. (ஆகஸ்ட் 06, 2021)

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: