முகப்பு /செய்தி /ஆன்மிகம் / ஆடிப்பூரம் 2022 : திருமணம் மற்றும் குழந்தை வரம் அருளும் ஆடிப்பூர அம்பிகை வழிபாடு மகிமைகள்!

ஆடிப்பூரம் 2022 : திருமணம் மற்றும் குழந்தை வரம் அருளும் ஆடிப்பூர அம்பிகை வழிபாடு மகிமைகள்!

ஆடிப்பூரம் 2022

ஆடிப்பூரம் 2022

Aadi Pooram 2022 | ஆடிப்பூர் அன்று கண்ணாடி வளையல்களை மாலையாகக் கட்டி அம்பாளின் படத்திற்கு அணிவிக்க வேண்டும்.

  • Trending Desk
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆடி மாதத்திலேயே அம்பாளுக்கு மிக விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று ஆடிப்பூரம். ஆடிப்பூரம் என்பது அம்மனுக்கு நடத்தப்படும் வளைகாப்பு திருவிழாவாகும். தமிழ் மாதங்களில் நான்காவது மாதமாக வரும் ஆடி மாதத்தில் பூரம் நட்சத்திர நாள் அன்று அம்பாள் அவதரித்தார் என்று புராணங்கள் கூறுகின்றது. இந்த ஆண்டு ஆடிப்பூரம் ஆகஸ்ட் 1 அன்று வருகிறது.

அம்மனுக்கு வளைகாப்பு விழா, ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள், நெல்லையப்பர், அழகர் கோவில், கபாலீஸ்வரர் கோவில், மதுரை மீனாட்சியம்மன், திருவண்ணாமலை உண்ணாமலை அம்மன் உள்ளிட்ட பல கோவில்களில் நடைபெறும். அதோடு சிவன் கோவில்களிலும் அம்மனை அலங்கரித்து சிறப்பு வழிபாட்டு பூஜைகள், வளையல் சார்த்துதல் நிகழ்ச்சி நடைபெறும். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் அவதரித்த நாளாக ஆண்டாள் ஜெயந்தியும் மிக விமரிசையாக இதே நாளில் கொண்டாடப்படுகிறது. அது மட்டுமல்லாமல் தேரோட்டமும் இந்த ஆண்டு நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கோவிலில் அம்மனுக்கு சாற்றப்பட்ட வளையல் மாலைகளில் இருந்து பெறப்பட்ட வளையல்களை பெண்கள் அணிந்தால் அவர்களுக்கு திருமணம் உடனே ஆகும் மற்றும் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது ஐதீகம். அதேபோல கோவில் மட்டுமல்லாமல் நம் இல்லத்திலும் எளிமையாக அம்பாளை வணங்குவது குழந்தை வரம் அருளும். ஆடிப்பூரத்தன்று திருமணம் ஆக வேண்டும் என காத்துக் கொண்டிருப்பவர்கள், குழந்தைக்காக காத்துக் கொண்டிருக்க கூடியவர்கள் வழிபாடு செய்யலாம்.

பூஜையறையில் உள்ள அம்பாளின் படத்தை எடுத்து சுத்தம் செய்து, பெண்களுக்கு நலங்கு வைப்பது, மஞ்சள், சந்தனம் மற்றும் குங்குமம் தடவ வேண்டும். பின்னர், ஒரு மனையை எடுத்து, நன்றாக சுத்தம் செய்து, அதன் மேல் கோலம் போட்டு, சிவப்பு நிறத் துணியை விரித்து, அதன் மேல் அம்பாளின் திருவுருவப் படத்தை வைக்க வேண்டும்.

அம்பாளின் படத்துக்கு வளையல் அலங்காரம்

கண்ணாடி வளையல்களை மாலையாகக் கட்டி அம்பாளின் படத்திற்கு அணிவிக்க வேண்டும். நாம் எப்படி பூமாலையை அம்பாளின் படத்திற்கு அலங்கரிப்போமோ அதேபோல கண்ணாடி வளையல் மாலையை அணிவிக்க வேண்டும்.

கண்ணாடி வளையல் மாலை உங்களுக்கு கட்டத் தெரியவில்லை என்றால் நான்கு வளையல்களாக கட்டி, அம்பாளின் படத்திற்கு முன்பு வைக்கலாம். அப்படி இல்லை என்றால் தற்பொழுது கண்ணாடி வளையல்கள் மாலைகள் கடைகளில் தயாராக கிடைக்கின்றன. அதை வாங்கியும் பயன்படுத்தலாம். கண்ணாடி வளையல் மாலை சூட்டிய பின்பு சிவப்பு நிறப் பூக்களால் அலங்கரிக்கலாம்.

Also Read : திருமண தடை, குழந்தை வரம் உள்ளிட்ட பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் அம்மன் கோயில்கள்

பொதுவாக அம்மன் என்று வரும்போது வெல்லம் சேர்த்த இனிப்புகள் பிரசாதமாக படைப்பது மிகவும் சிறப்பானது. எனவே சர்க்கரைப் பொங்கல் அல்லது வெல்லம் சேர்த்த பருப்பு பாயசம் போன்ற இனிப்புகளை தயார் செய்வது அம்மனுக்கு பிரசாதமாக நைவேத்தியம் செய்யலாம்.

அலங்காரம் நெய்வேதியம் அனைத்தும் தயாரான பின்பு உங்களுக்கு தெரிந்த அம்பாள் ஸ்தோத்திரங்களை, பாடல்களை பாராயணம் செய்யலாம், அல்லது பின்னணியில் ஒலிக்க வைத்து மனமாற பிரார்த்தனை செய்யலாம். அதன் பிறகு கற்பூர ஆராதனை காட்டி உங்கள் வேண்டுதல்களை கூறலாம்.

சிறிது நேரத்திற்கு பிறகு கண்ணாடி வளையல் மாலை கட்டப்பட்ட அம்பாள் திரைப்படத்தை அதன் இடத்தில் வைத்து, அம்பாளின் திருவுருவப் படம் வைத்திருந்த மனையை கிழக்கு மேற்காக வைக்க வேண்டும். அந்த மனையில் திருமணத்திற்கு காத்திருப்பவர் அல்லது குழந்தை பேறு வேண்டி காத்திருப்பவர் கிழக்கு நோக்கி அமர வேண்டும்.

பின்னர் அம்பாளுக்கு செய்ததை போலவே திருமணத்துக்கு காத்திருக்கும் ஆண் அல்லது பெண் அல்லது குழந்தை வேண்டி காத்திருக்கும் பெண் மற்றும் தம்பதிக்கு நலங்கு வைத்து அம்பாளுக்கு சாற்றிய கண்ணாடி வளையல் மாலையில் நான்கு வளையல்களை பெண்களின் கைகளுக்கு போட வேண்டும். அதற்கு பின்னர் வீட்டில் இருக்கும் மூத்த பெண்மணி.. தேங்காய் வெற்றிலை பாக்கு மற்றும் வாழைப்பழம் ஆகியவற்றை வழங்கி ஆசிர்வதிக்க வேண்டும். இந்த வெற்றிலை பாக்கை பெண்கள் தங்களது முந்தானையில் பெற்றுக் கொள்ள வேண்டும். ஆண்கள் தங்களது மேல் துண்டில் பெற்றுக் கொள்ள வேண்டும். நேரடியாக கைகளில் வாங்கிக் கொள்ளக்கூடாது.

இந்த தேங்காயை பெற்றுக்கொண்டு மீண்டும் பூஜை செய்யப்பட்ட அம்பாளின் திருவுருவ படத்திற்கு முன் சென்று இதே போல மடி நிறைய வேண்டும், அதாவது திருமணம் நடக்க வேண்டும் / குழந்தை பிறக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளலாம்.

First published:

Tags: Aadi