முகப்பு /செய்தி /ஆன்மிகம் / ஆடிப்பெருக்கு திருவிழாவின் போது பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கப்படுவது ஏன்?

ஆடிப்பெருக்கு திருவிழாவின் போது பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கப்படுவது ஏன்?

ஆடிப்பெருக்கு திருவிழாவின் போது பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கப்படுவது ஏன்?

ஆடிப்பெருக்கு திருவிழாவின் போது பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கப்படுவது ஏன்?

பக்தர்களின் தலையில் தேங்காய் உடைப்பது ஒருவரின் கடந்த காலத்திலிருந்து விடுபட்டு கடவுளிடம் சரணடைவதைக் குறிக்கிறது.

  • Last Updated :

இந்தியாவின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் பல வகையான திருவிழாக்கள் மற்றும் அந்தந்த திருவிழாக்கள் தொடர்பான பல பாரம்பரியங்கள் மற்றும் காரியங்கள் இங்கே நடைமுறையில் உள்ளன. அதில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் ஒரு தமிழக திருவிழாவான ஆடிப்பெருக்கும் அடக்கம்!

தமிழ்நாடு மட்டுமல்ல கிட்டத்தட்ட ஒவ்வொரு மாநிலமும் அதற்கே உரிய கலாச்சார மரபுகள் மற்றும் பண்டிகைகளைக் கொண்டுள்ளது. குறிப்பிட்ட சடங்குகளின் பன்முகத்தன்மையைப் பற்றி... ஏன்? எதற்கு? என்று அறிந்து கொள்வது புதிர்கள் மிக்கதாகவும், அதே சமயம் மிகவும் சுவாரஸ்யமானதாகவும் இருக்கும் என்பதும் இங்கே வெளிப்படை. அப்படியாக, ஏன் ஆடிப்பெருக்கு திருவிழாவின் போது பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கப்படுகிறது என்பதை பற்றித்தான் நாம் இங்கே அலசப்போகிறோம்.

தமிழ்நாடு - கலாச்சாரம் நிறைந்த மாநிலமாகும். ஒவ்வொரு பருவமழையின் போதும், ஆடிப்பெருக்கு விழாவின் வழியாக நீரினால் ஏற்படும் வாழ்வாதாரத்தை தமிழ்நாடு நினைவுகூர்கிறது. இந்த கொண்டாட்டத்தின் போது ஒவ்வொரு தமிழர் குடும்பமும் அவர்களின் நல்வாழ்வு, அமைதி மற்றும் செழுமைக்காக இயற்கையை நோக்கிய தங்களது வழிபாடுகளை முன்வைக்கிறார்கள். அப்படியான ஆடிப்பெருக்கு கொண்டாட்டங்களில் சில வழமையான சடங்குகளும் ஒரு பகுதியாகும். அதில் ஒன்றுதான் - பக்தரின் தலையில் தேங்காய் உடைக்கும் பழக்கம்!

பக்தர்களின் தலையில் தேங்காய் உடைப்பது ஒருவரின் கடந்த காலத்திலிருந்து விடுபட்டு கடவுளிடம் சரணடைவதைக் குறிக்கிறது. இதற்காக தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் உள்ள மகாலட்சுமி கோயிலின் வாசல்களுக்கு வெளியே ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடுவர். தேங்காய் உடைக்கும் இந்த சடங்கின் விளைவாக சிலர் தத்தம் தலையில் காயங்களையும் அடைகிறார்கள். ஆனாலும் பல பக்தர்கள் தெய்வத்தின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்கிற நோக்கத்தின் கீழ் மருத்துவ சிகிச்சையை பெற மறுக்கிறார்கள்.

Also see...  சிவலிங்கத்தின் மீது வைக்கப்படும் மலர்கள் வாடாமல் துளிர்விடும் அதிசயம்...

இந்த விசித்திரமான சடங்கின் தோற்றம் பற்றி இரண்டு வெவ்வேறு கதைகள் உள்ளன. மிகவும் பழைய கதையின்படி, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, பக்தர்கள் இந்த இடத்தில் சிவனை வழிபட்டனர், ஆனால் வழிபாட்டிற்குப் பிறகும் இறைவன் அவர்களுக்கு காட்சி தரவில்லை. எனவே தேங்காயை சிவபெருமானின் மூன்று கண்கள் கொண்ட முகத்துடன் ஒப்பிட்டு, அவர்கள் சிவபெருமானை மகிழ்விக்க தங்கள் தலையில் தேங்காய் உடைக்கத் தொடங்கினர், அதன் பிறகு அவர் அவர்கள் முன் தோன்றியதாகக் கூறப்படுகிறது. அன்றிலிருந்து இந்த சடங்கு தொடர்கிறது.

Also see... நோய் நீக்கி, இழந்த பதவியை பெற்றுத்தரும் ஊட்டத்தூர் சிவன் கோயில்...

top videos

    இரண்டாவது கதையை பொறுத்தவரை, இந்தியா டைம்ஸ் வழியாக வெளியான ஒரு அறிக்கையின்படி, பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின் போது, ​​இந்த கோவிலை இடித்து, இங்கு ரயில் பாதை அமைக்கப்பட இருந்தது. ஆனால் கிராம மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் விளைவாக ஆங்கிலேயர்கள், கோயிலின் அருகே உள்ள ஆற்றில் இருந்து சுமார் 187 "தேங்காய் அளவிலான" கற்கள் சேகரித்து வந்து, இந்த கற்களை கிராம மக்கள் தங்கள் தலையால் உடைத்தால் இந்த கோயிலை இடிக்க மாட்டோம் என்கிற நிபந்தனையை முன்வைத்ததாக கூறப்படுகிறது. அதை அந்த கிராம மக்கள் நிறைவேற்றியதாகவும் கூறப்படுகிறது. அன்று முதலே தலையில் தேங்காய் உடைக்கும் இவ்வழக்கம் குறிப்பிட்ட கோயிலில் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.

    First published:

    Tags: Coconut, Religion