Aadi Perukku 2021 | ஆடி பெருக்கு ஸ்பெஷல் நாவல்பழம்! சர்க்கரை நோயை கண்ட்ரோல் செய்யும் இந்த பழத்தை பற்றி தெரிஞ்சுக்கோங்க...

நாவல் பழம்

நாட்டு பழம் மட்டுமே துவர்ப்புடன், இனிப்பு கலந்த சுவையாக இருக்கும். இம்மாதத்தில் விளையும் நாவல் பழம், சர்க்கரை நோயாளிகள் அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். காரணம் இது ரத்த ஓட்டம் சீராக வைக்கும்.

  • Share this:
    தலை தீபாவளிக்கு செல்லும் புதுமண தம்பதி, இனிப்புடன் பட்டாசு வெடித்து கொண்டாடுவர். அதுபோல் பொங்கலுக்கும் கரும்பு சாப்பிட்டு சாமி கும்பிடுவர்.  இந்த பண்டிகைகள் போலவே தலை ஆடியும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆடி மாதம் என்றாலே சிறப்புதான். அதிலும் தலை ஆடிக்கு செல்லும் மாப்பிளைக்கு ஆடிக்கு "ஸ்பெஷல்' என்று நாவல்பழம்தான் முதலில் கொடுப்பார்கள். படையலிலும் நாவல்பழம்தான் முக்கியமாக வைத்து படைப்பார்கள்.

    ஆனியில் நாவல் மரத்தில் பூக்கள் பூத்து குலுங்கும். ஆடியில் "நாவல் பழம்' விளைச்சல் நன்றாக இருக்கும். தலை ஆடிக்கு செல்லும் புதுமண தம்பதிகள் "நாவல்பழத்தை' விரும்பி சாப்பிடுவர். தற்போது வீரிய ரகமான நாவல் பழம் பெரிய அளவில் இருக்கும். நாட்டு பழம் மட்டுமே துவர்ப்புடன், இனிப்பு கலந்த சுவையாக இருக்கும். இம்மாதத்தில் விளையும் நாவல் பழம், சர்க்கரை நோயாளிகள் அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். காரணம் இது ரத்த ஓட்டம் சீராக வைக்கும். நாவல் பழ கொட்டையை காயவைத்து அரைத்து பொடி செய்து சாப்பிட்டு வர சர்க்கரை நோய் விலகும். இந்த பழம் கிலோ ரூ.200க்கு விற்கப்படுகிறது.

    இதனை ஆடி மாதத்தில் நம் முன்னோர்கள் கண்டிப்பாக வாங்கி சாபிட்டு வந்தனர். அது மட்டுமல்லாமல் தங்கள் வீட்டில் திருமணம் ஆன புதுமண தம்பதியருக்கும் குழந்தைகளுக்கும் கொடுத்து மகிழ்ந்தனர். இன்ரும் தென் மாவட்டங்களில் நாவல்பழம் மக்களால் விரும்பி சாப்பிடப்படுகிறது.

    மேலும் படிக்க... இன்றைய பஞ்சாங்கம் (ஆகஸ்ட் 03, 2021)

    மாப்பிளைக்கு பரிமாறப்படும் உணவில் நாவல் பழம்


    நாவல்பழம் சாப்பிடுவதால் கிடைக்கு நன்மைகள்:

    1. நாவல்பழம் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து போன்றவற்றை உடல் உறிஞ்சுக்கொள்ள உதவுகிறது. இதிலிருக்கும் இரும்புச்சத்து உடலில் இரத்தத்தை சுத்திகரிக்கும் சுத்திகரிப்பாளராக செயல்படுகிறது.உடலில் எல்லா உறுப்புகளுக்கும் தடையில்லாமல் ஆக்ஸிஜனை எடுத்து செல்ல உதவுகிறது.

    2. பெண்கள் அதிக இரத்த இழப்பை எதிர்கொள்ளும் காலங்களில் இது நன்மை பயக்ககூடிய பழமாக இருக்கும். இரத்த சோகை அல்லது மஞ்சள் காமாலை போன்ற நோய் தாக்கத்துக்கு பிறகு ஹீமோகுளோபின் அளவை மீட்டெடுக்க இந்த பழம் உதவுகிறது.

    3. அளவான வடிவில் நாவல் பழம் சேர்க்கும் போது அது இதய நோய்கள், உயர் இரத்த அழுத்தம் மற்றும் பக்கவாதம் உண்டாக்கும் அபாயங்களிலிருந்து பாதுகாக்க செய்கிறது. 100 கிராம் நாவல் பழத்தில் 55 மில்லி கிராம் அளவு பொட்டாசியம் உள்ளது. இது இரத்த தமனிகளை ஆரோக்கியமாக வைத்திருக்க செய்கிறது. இதனால் இதய நோய்கள், உயர் இரத்த அழுத்தம் மற்றும் பக்கவாதம் உண்டாக்கும் அபாயங்களிலிருந்து பாதுகாக்கிறது.

    மேலும் படிக்க... நாளை ஆடிப்பெருக்கு: வீட்டிலேயே கொண்டாடுவது

    4. தினமும் கால் கப் அளவு உப்பு தூவிய நாவல் பழத்தை சாப்பிட்டு வந்தால் பித்தப்பை அழற்சி மற்றும் வீக்கத்தை குறைத்து உள்ளுறுப்புகளின் செயல்பாட்டை காக்கிறது.

    மேலும் படிக்க... சூரியனும் தமிழ் மாதங்களும்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vaijayanthi S
    First published: