• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • Aadi | ஆடி மாதத்தில் ஆண்டியும் அரசானாகலாம்... எப்படி?

Aadi | ஆடி மாதத்தில் ஆண்டியும் அரசானாகலாம்... எப்படி?

அம்பாள்

அம்பாள்

தெய்வீகம் கமலும் இந்த மாதத்தில் சில சிறப்பான விசேஷ நாட்களில் சரியான முறையில் கடவுளை வழிபாடு செய்தால் பூரண நலனும், செல்வமும் வீட்டில் பெருகி வளம் தரும் என்பது மக்களின் நம்பிக்கை எழுதப்படாத உண்மை.

  • Share this:
    ஆடி மாதம் தெய்வங்களை வழிபட வேண்டிய முக்கியமான மாதமாகும். சில தமிழ் மாதங்கள் சைவ வழிபாட்டுக்கு ஏற்றதாகவும், சில மாதங்கள் வைணவ வழிபாட்டுக்கு ஏற்றதாகவும் இருக்கும். ஆனால் இரண்டு சமய தெய்வங்களுக்குமே உகந்த மாதம் என்றால் அது ஆடி மாதம்தான். தெய்வீகம் கமலும் இந்த மாதத்தில் சில சிறப்பான விசேஷ நாட்களில் சரியான முறையில் கடவுளை வழிபாடு செய்தால் பூரண நலனும், செல்வமும் வீட்டில் பெருகி வளம் தரும் என்பது மக்களின் நம்பிக்கை எழுதப்படாத உண்மை.

    ஆடி மாதத்தில் வரும் முக்கியமான நாட்களையும் முக்கிய வழிபாடுகளையும் பற்றி பார்க்கலாம்...

    ஆடி வெள்ளி:

    ஆடி மாதத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அம்மனுக்கு உகந்த நாளாகும். பார்வதி தேவியின் அவதாரமான 108 அம்மன்களுக்கும் இந்த நாள் சிறப்பு தரும் நாள். ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் அம்மனுக்கு விரதம் இருந்து கோவிலுக்கு சென்று நெய் விளக்கேற்றி வேண்டினால் பெண்களுக்கு மாங்கல்ய ஆயுள் நீடிக்கும் என்பது ஐதீகம். அதிலும் இந்த வருடம் ஆடி முதல் வெள்ளியான நேற்று பெளர்ணமியும் சேர்ந்து வந்ததால் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது.

    ஆடி கிருத்திகை:

    ஆடி மாதத்தின் கிருத்திகை நாள் முருகனுக்கு உகந்த நாள். இந்த நாட்களில் அறுபடை கோவில்களிலும் முருக பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும். கிருத்திகையின் போது முருகன் கோவிலுக்கு சென்று வேண்டி வருவது சிறந்த பலனை தரும்.

    ஆடி பூரம்:

    பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாளுக்கு உகந்த நாள். இந்நாளில் பெருமாள் கோவில்களில் கன்னி பெண்கள் ஆண்டாள் பாசுரம் பாடினால் விரைவில்திருமணம் கைக்கூடும் என்பது ஐதீகம்.

    ஆடி அமாவாசை:

    ஆடியில் வரும் ஒரே அமாவாசை நாள். இது இறந்த முன்னோர்களுக்கு உகந்த நாள். முன்னோர்களை இந்த அமாவாசை நாளில் வழிப்படுவதன் மூலம் அவர்கள் மோச்சமடைவர். மேலும் அவர்களது பரிபூரண ஆசீர்வாதங்களை பிள்ளைகள் பெற முடியும்.

    ஆடி பெருக்கு:

    ஆடி மாதம் தமிழகத்தில் உள்ள ஆறுகளில் வெள்ளம் நுரை பொங்க ஓடும் நாள். இந்நாளில் நீர்நிலைகளில் விளக்கேற்றி மக்கள் வழிப்படுவர். இதன்மூலம் வீட்டில் இன்பமும், செல்வமும் ஆண்டுதோறும் நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை.

    ஸ்ரீ வரலட்சுமி விரதம்:

    பிரம்மரின் துணைவியும், அஷ்ட லட்சுமிகளின் மூலமுமான மகாலட்சுமிக்கு விரதம் இருக்கும் நாள் வரலட்சுமி விரதம். இந்த நாளில் விரதம் இருந்து மகாலட்சுமியை வழிபட்டால் சகல் ஐஸ்வர்யங்களும் கிட்டும்.

    இப்படி ஆடி மாதத்தில் வரும் அனைத்து விஷேச நாட்களிலும் தெய்வங்களை மனதார வணங்கி வழிபட்டு வந்தால் அனைத்து செல்வங்களையும் பெற்று சிறப்பாக வாழலாம். இதைதான் கேலியாக நமது முன்னோர்கள் ஆண்டியையும் அரசானாக்கும் ஆடி மாதம் என்று சொல்லி வைத்துள்ளார்கள்.

    இந்த வருடத்திற்கான ஆடி மாதத்தில் வரும் விரதங்கள்

    1 . ஆடி 1ஆம் தேதி சனிக்கிழமை ஆடி மாதப் பிறப்பு. ஆடிப்பண்டிகை கொண்டாட்டம்

    2. ஆடி 04 ஆம் தேதி செவ்வாய்கிழமை விஷ்ணு சயன ஏகாதசி கோபத்ம விரதம்

    3. ஆடி 07 ஆம் தேதி வெள்ளிக்கிழமை குரு பூர்ணிமா. பவுர்ணமி பூஜை

    4. ஆடி 11ஆம் தேதி செவ்வாய்கிழமை அங்காரக சதுர்த்தி, வீடு கட்ட வாஸ்து பூஜை செய்ய நல்ல நாள்

    5. ஆடி 15 சனிக்கிழமை நீலகண்ட அஷ்டமி

    6. ஆடி 17 திங்கட்கிழமை ஆடிக்கிருத்திகை

    7. ஆடி 18 செவ்வாய்கிழமை ஆடி 18ஆம் பெருக்கு

    8. ஆடி 19 புதன்கிழமை ஏகாதசி யோகினி ஏகாதசி

    9. ஆடி 21 வெள்ளிக்கிழமை பிரதோஷம்

    10. ஆடி 23 ஞாயிற்றுக்கிழமை ஆடி அமாவாசை சர்வ அமாவாசை

    11. ஆடி 26 புதன்கிழமை ஸ்வர்ண கவுரி விரதம் ஸ்ரீ ஆண்டாள் திருவாடிப்பூரம்

    12. ஆடி 27 வியாழக்கிழமை நாக சதுர்த்தி விரதம்

    13ஆடி 28 வெள்ளிக்கிழமை நாக பஞ்சமி, கருட பஞ்சமி விரதம்

    14ஆடி 29 சனிக்கிழமை சஷ்டி விரதம், கருடாழ்வார் ஜெயந்தி

    15. ஆடி 30 ஞாயிற்றுக்கிழமை பானு சப்தமி சூரிய வழிபாடு செய்ய ஏற்ற நாள்

    16. ஆடி 31 திங்கட்கிழமை கடைசி ஆடிப்பண்டிகை

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: