கோவிலுக்கு செல்லும்போது தெரிந்துக் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்!

கோயில்

பூஜை அறையில் தெய்வங்களை வடக்குப் பார்த்து வைக்கக் கூடாது.

 • Share this:
  இந்துகள் கோவிலுக்கு செல்லும் போது சில விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும்.

  1. மகாலட்சுமி உள்ளபடம் அல்லது விக்கிரகம் ஆகியவற்றையே வீட்டில் வைக்க வேண்டும். நிற்கின்ற நிலையில் உள்ள எந்த தெய்வமும் உடனுக்குடன் பலன் தரும் என்பது ஐதீகம். அமர்ந்து இருக்கும் நிலையில் மகாலட்சுமி படத்தை வைத்து பூஜை செய்தால் நல்ல பலன்கள் கிடைக்க தாமதம் ஆகும். ஆனால் நற்பலன்கள் கிடைக்காமல் போகாது.

  2. கோயில் மூடியிருக்கும் போதும், திருமஞ்சன பூஜையின் போதும், திரையிட்டிருக்கும் போதும் வழிபடக்கூடாது.

  3. குங்குமத்தை வலது கை மோதிர விரலில் எடுத்து இட்டுக் கொள்வதே நல்லது.

  4. விக்கிரகத்திற்கு தீபாராதனை நடக்கும் போது கண்களை மூடிக் கொண்டு வணங்கக் கூடாது.

  5. செவ்வாய்க் கிழமை, புதன் கிழமைகளில் பகலிலும் வெள்ளிக்கிழமை முழு நாளுமே குத்து விளக்கைத் துலக்கக் கூடாது.

  6. சுவாமிக்கு எடுக்கும் ஆரத்தியில் சுண்ணாம்பு சேர்க்கக் கூடாது.

  Srirangam Ranganathaswamy Temple
  ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயில்


  7. திருப்பதி, திருத்தணி, பழநி, திருச்செந்தூர் போன்ற கோவில் ஸ்தலத்திற்குச் சென்றால் அங்கிருந்து நேராக அவரவர் வீட்டிற்குத் தான் செல்ல வேண்டும்.

  8. 9. ருத்ராட்சம் அணிவோர் இறுதிச் சடங்குகளுக்குச் செல்லும் பொழுது அதைக் கழற்றி வைத்து விட்டுத் தான் செல்ல வேண்டும்.

  10. சனி பகவானுக்கு வீட்டில் எள் விளக்கு ஏற்றக் கூடாது.

  11. கோவிலிலிருந்து வீட்டிற்கு வந்ததும் சிறிது நேரம் கழித்துக் கை,கால்கள் கழுவலாம். ஆனால் குளிக்கக் கூடாது.

  12. இறந்த முன்னோர்களின் படங்களை (அவர்கள் தெய்வமாகி விட்டிருந்தாலும்) சாமி படங்களுடன் வைத்து வணங்குதல் கூடாது. தனியாக வீட்டில் வேறொரு இடத்தில் வைத்து வணங்கலாம்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

  13. பூஜை அறையில் தெய்வங்களை வடக்குப் பார்த்து வைக்கக் கூடாது.

  14. கர்ப்பிணிப் பெண்களோ அல்லது அவர் கணவரோ சிதறு தேங்காய் உடைக்கக்கூடாது.

  15. புல்லாங்குழல் ஊதும் தனி கிருஷ்ணன் படம், விக்கிரகம், காலண்டர் ஆகியவற்றை வீட்டில் வைக்கக் கூடாது. பசுக்களோடு உள்ள மற்றும் ராதையுடன் கூடிய புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைத்துக் கொள்ளலாம்.

   

   

   
  Published by:Vaijayanthi S
  First published: