முகப்பு /செய்தி /ஆன்மிகம் / ஆடி முதல் வெள்ளியும், அள்ளிக் கொடுக்கும் குலதெய்வ வழிபாடும்.!

ஆடி முதல் வெள்ளியும், அள்ளிக் கொடுக்கும் குலதெய்வ வழிபாடும்.!

அம்மன் வழிபாடு

அம்மன் வழிபாடு

Aadi Velli | எல்லா வெள்ளிக்கிழமையும் எல்லா தெய்வங்களுக்கும் உகந்தது தான் என்றாலும் ஆடி வெள்ளி குலதெய்வத்திற்கு மிகவும் ஏற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ஆண்டுக்கு ஒருமுறையாவது அவரவர் குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டியது அவசியம். பலரும் ஆடி மாதத்தில், தங்களின் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வார்கள். வழிபாடு செய்யும் எந்த தெய்வத்தைதுடைய அனுக்கிரகமும் கிடைக்க வேண்டுமென்றால், அதற்கு குலதெய்வ வழிபாடு மிகவும் அவசியம். பொதுவாக, ஆடி மாத அமாவாசை அன்று தான் குழந்தைகள் பலரும் குலதெய்வம் கோவிலுக்கு சென்று வழிபடுவார்கள்.

ஆனால், ஆடிமாத முதல் வெள்ளிக்கிழமை அன்று, குலதெய்வ வழிபாடு மிகவும் விசேஷமானது. ஆனால், குலதெய்வம் கோவில் வேறு ஊரில் இருக்கிறது, நினைத்தவுடன் சென்று வர முடியாது, அல்லது சமீபத்தில் தான் குலதெய்வ வழிபாட்டை மேற்கொண்டீர்கள் என்றால், வீட்டிலேயே ஆடி முதல் வெள்ளி அன்று வழிபடலாம். உங்கள் குலதெய்வத்தை எவ்வாறு வழிபாடு செய்யலாம் என்று பார்க்கலாம்.

ஆடி வெள்ளி குலதெய்வ வழிபாட்டுக்கு தயார் செய்வது எப்படி.?

எல்லா வெள்ளிக்கிழமையும் எல்லா தெய்வங்களுக்கும் உகந்தது தான் என்றாலும் ஆடி வெள்ளி குலதெய்வத்திற்கு மிகவும் ஏற்றது. வழக்கம் போல வெள்ளிக் கிழமைகளில் வீட்டை சுத்தம் செய்து, பூஜை அறையில் சந்தனம் குங்குமம் பூக்கள் ஆகியவற்றால் அலங்கரிக்கலாம்.

குலதெய்வத்தின் புகைப்படம் இருப்பவர்கள், புகைப்படத்திற்கு மஞ்சள், குங்குமம், சந்தனம் வைத்து தங்களுக்கு பிடித்த மலர்களின் மாலையை சாற்றலாம்.

புகைப்படம் இல்லாதவர்கள், அதாவது சிலருக்கு கைப்பிடி மண் தான் குல தெய்வம், சிலருக்கு தங்கள் குலதெய்வத்தை புகைப்படம் எடுக்க அனுமதி இருக்காது, சிலருக்கு கண்கள் மட்டுமே இருக்கும் அம்மன் தான் குலதெய்வமாக இருக்கும்; இவ்வாறு புகைப்படம் இல்லாதவர்கள், தனியே ஒரு அகல் விளக்கை ஏற்றி வழிபடலாம்.

மேலும், குலதெய்வ புகைப்படம் இல்லாதவர்கள், தெய்வத்தை வேண்டும், ஒரு திருவிளக்கை தனியே வைத்து இது போல விசேஷ நாட்களின் போது பூஜை செய்யலாம். குல தெய்வ திருவிளக்கில் நெய் விளக்கு ஏற்ற வேண்டும்.

நைவேத்தியம் என்று வரும் போது, எந்த தெய்வம் உங்கள் குலதெய்வமாக இருந்தாலும் சரி, சர்க்கரை பொங்கலை படைப்பது மிக மிக விசேஷமானது.

Also Read : ஆடி மாதத்தின் சிறப்புகளும் ஆன்மீக அறிவியலும்.!

சர்க்கரை பொங்கல், வெற்றிலைப் பாக்கு ஆகிய இரண்டு மட்டுமே கூட போதுமானது.

கொழுக்கட்டை, சுண்டல், பாயசம் என்று இதர உணவுகளையும் செய்து பிரசாதமாக வைக்கலாம். ராகு காலத்துக்கு முன்பே பூஜையை முடிப்பது சிறந்தது.

பூ, பழம், வெற்றிலைபாக்கு, நைவேத்தியம் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் தயாராக வைத்த பின்பு, அம்மன் பாடல்கள் அல்லது பாசுரங்களை பாராயணம் செய்யலாம். உங்கள் குலதெய்வத்துக்குரிய ஸ்லோகங்களை / பாடல்களை பாடி / ஒலிக்கச் செய்து பூஜை செய்யலாம். குலதெய்வத்துக்கான சுலோகம் எதுவென்று தெரியவில்லை என்றால், அபிராமி அந்தாதி பாசுரங்களை வாசித்து பூஜை செய்யலாம் அல்லது பாடலாக ஒலிக்கச் செய்யலாம்.

பின்னர், கற்பூரம், தீபாராதனை செய்து, மனதார உங்கள் வேண்டுதல்களை செலுத்தி, ஒரு ரூபாய் மஞ்சள் துண்டில் முடிந்து வைத்து பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். குலதெய்வ கோவிலுக்கு செல்லும் போது, அந்த ரூபாயை செலுத்தி விட வேண்டும்.

Also Read : ஆடி மாத பண்டிகைகள் – ஆடி மாத சிறப்புகள் மற்றும் கொண்டாடப்படும் பண்டிகைகளின் பட்டியல்.!

வீட்டில் இருப்பவர்கள் மட்டுமல்லாமல், அனைவருக்கும் பிரசாதங்களை விநியோகம் செய்யலாம். காலை மாலை இரண்டு வேலையும் நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள்.

அதேபோல, ஆடி வெள்ளியன்று அம்மனை அலங்கரித்து பூஜித்து வழிபட்டால் வளங்கள் அனைத்தும் வந்து சேரும். குடும்பம் முன்னேற்றம் அடையும், மாங்கல்ய பாக்கியமும், தொழில் மேன்மையும் ஏற்படும்.

First published:

Tags: Aadi