ஆடிப் பட்டம் தேடி விதை... விவசாயிகளுக்கும் ஆடி மாதத்திற்கும் என்ன சம்பந்தம் தெரியுமா?

ஆடிப் பட்டம் தேடி விதை... விவசாயிகளுக்கும் ஆடி மாதத்திற்கும் என்ன சம்பந்தம் தெரியுமா?

விளைநிலங்களுக்கான முதல் மழையைக் கொண்டுவரும் மாதம் ஆடி. ஆறுகளில் புது வெள்ளம் பாயும்.

  • Share this:
    விளைநிலங்களுக்கான முதல் மழையைக் கொண்டுவரும் மாதம் ஆடி. ஆறுகளில் புது வெள்ளம் பாயும். இது புதிய விளைச்சலுக்குக் ஏதுவாக இருக்கும். விவசாயிகள் புதுவெள்ள நீரைத் தொழுது தங்கள் உழவுப் பணிகளைத் தொடங்குவர். இதனால்தான் நம் முன்னோர்கள் ஆடிப் பட்டம் தேடி விதை என்னும் பழமொழியை கூறியுள்ளார்கள்.

    மேலும் ஆடி மாதத்தில் ஓரிரு முறை வயலுக்கு தண்ணீர் பாய்ச்சினால் போதும், புரட்டாசியில் இருந்து தொடர்ச்சியாக கிடைக்கும் மழையின் உதவியால் பயிர் வளர்ந்துவிடும். மேலும் இந்த மாதத்தில்தான்  மண்ணில் விழும் விதைகள் முழுமையாக முளைக்கத் தேவையான அருமையான தட்பவெப்ப சூழ்நிலை நிலவும். ஆடி 18-ம் தேதியும், அதற்குப் பிறகு விதைக்கும் விதைகள் நன்றாக முளைக்கும். தண்ணீர் பாய்ச்சி பயிர் செய்வதென்றால்  குறுவை சாகுபடியில் நெல் விதைக்க தொடங்குவார்கள். ஆனால், மானாவாரி பயிர்களுக்கு ஆடிப்பட்டம் மிகவும் சிறந்த பட்டமாகும்.

    மேலும் படிக்க... AAdi Koozh | ஆடி மாத ஸ்பெஷல் கூழ்.. இதோ ரெசிபி..

    ஆடியில் நடவுக்கு ஏற்ற பயிர்கள் :

    உளுந்து, சோளம், கம்பு, குதிரைவாலி உள்ளிட்ட தானியங்கள் விதைக்கலாம். குறிப்பாக, சாமை விதைப்புக்கு ஏற்ற அருமையான பட்டம். அவரை, கத்திரி, தக்காளி போன்ற காய்கறி பயிர்களைச் சாகுபடி செய்யலாம். “வாழை” நடவுக்கு ஏற்ற மாதம். ஆனி மற்றும் ஆடிப்பட்டங்கள் “செம்பருத்தி” சாகுபடிக்கு ஏற்றவை.

    மேலும் படிக்க...  அன்றாட உணவில் மஞ்சள் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்!

    விவசாயிகள்


    பூச்சி நோய் மேலாண்மை:

    ஆனி மாதம் விதைத்த பயிர்கள் இளம் பயிராக இருக்கும் என்பதால், அதில் சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதல் தற்போது இருக்கும். அவற்றை இலைகளை உண்ண முடியாமல் செய்து விட்டால் போதும். பூச்சிவிரட்டி, வேப்பெண்ணெய் கரைசல் போன்றவற்றை பயன்படுத்தும்போது இலைகளில் அமரும் பூச்சிகளுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு ஓடிவிடும். இயற்கை விவசாயத்தைப் பொறுத்தவரை “வரும்முன் காப்போம்” என்ற கோட்பாட்டின்படி, மாதத்தின் தொடக்கத்தில் இருந்து பூச்சி விரட்டிகளை தெளித்து வந்தால் பூச்சி தாக்குதலை குறைக்கலாம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vaijayanthi S
    First published: