ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

ஆடி மாத அம்மன் தரிசனம்: சர்வ ரோக நிவாரணி புன்னை நல்லூர் மாரியம்மன்.!

ஆடி மாத அம்மன் தரிசனம்: சர்வ ரோக நிவாரணி புன்னை நல்லூர் மாரியம்மன்.!

புன்னை நல்லூர் மாரியம்மன்

புன்னை நல்லூர் மாரியம்மன்

Punnainallur Mariamman Temple | ஆதி பராசக்தியின் மற்றொரு அவதாரமாக வழிபடப்படும் சமயபுரத்தாள், புன்னை நல்லூர் மாரியம்மன், பக்தர்களின் அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றுவார் என்பது காலம்காலமாக இருந்து வரும் நம்பிக்கை.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

லிங்க வடிவில் சுயம்புவாக தோன்றிய சிவபெருமானின் ஆலயங்கள் ஏராளம். சுயம்பு லிங்கங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை என்பது ஐதீகம். அதே போல, அம்பிகையும், சுயம்புவாக தோன்றிய புனித ஸ்தலங்கள் உள்ளன. அதில் முக்கியமானது, புற்று வடிவில் சுயம்புவாக தோன்றி, ஆதி பராசக்தியின் மற்றொரு அவதாரமாக வழிபடப்படும் சமயபுரத்தாள், புன்னை நல்லூர் மாரியம்மன், பக்தர்களின் அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றுவார் என்பது காலம்காலமாக இருந்து வரும் நம்பிக்கை.

புன்னை நல்லூர் மாரியம்மன் ஆலயம் உருவான கதை

17ம் இறுதி வரை, புற்று வடிவமாகவே வணங்கப்பட்ட மாரியம்மனுக்கு, 1680ம் ஆண்டில் வெங்கோஜி மகாராஜா சக்ரபதி திருக்கோவில் கட்டியதாக கூறபபடுகிறது.

சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு யாத்திரை சென்ற போது, மகாராஜாவின் கனவில், அம்மன் தோன்றி தான் ஒரு புன்னை காட்டில் வசிப்பதாகவும், அது தஞ்சையில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதாகவும் கூறினார். அடுத்த நொடியே, அம்மன் வசிப்பிடம் தேடி ஓடிய வெங்கோஜி மகாராஜா, அம்மன் குறிப்பிட்ட இடத்தில் வெள்ளை நிறத்தில் ஒரு புற்று இருப்பதைக் கண்டார். உடனடியாக அதை சுற்றி, ஒரு கோவிலை எழுப்பி, தினசரி பூஜைகளும் வழிபாடுகளும் செய்து வந்தார்.

அடுத்த சில ஆண்டுகளில், ஸ்ரீ சதாசிவ பிரம்மமேந்தர் அந்த எறும்புப் புற்றில் இருந்து, மாரியம்மனை செதுக்கி, சக்திவாய்ந்த ஒரு மர்மச் சக்கரத்தையும் வைத்தார்.சக்கரத்தை வைத்த பிறகுதான் சமயபுரம் தேவிக்கு அசாத்திய சக்திகள் கிடைத்தன என்பது ஐதீகம்.

புற்று மண்ணே அம்பிகையாக வழிபடுவதால், தினசரி அபிஷேகம் செய்யப்படுவதில்லை. மாறாக, ஆலயத்தில் வெற்றிருக்கும் விஷ்ணு துர்க்கை அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. அதே போல, ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில், அம்மனுக்கு வேர்க்கும். தற்போது வரை, ஏன் இவ்வாறு ஏற்படுகிறது என்பதற்கான காரணம் கிடைக்கவில்லை.

ஐந்த ஆண்டுகளுக்கு ஒரு முறை என்று, 48 நாட்களுக்கு புற்று அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த 48 நாட்களும் சிறப்பு பூஜைகளும் ஆராதனைகளும் நடைபெறும். பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

Also Read : திருமண யோகங்கள்: யாருக்கெல்லாம் இளம் வயதிலேயே திருமணம் நடக்கும்?

நோய் தீர்க்கும் புற்று மண்

புற்று மண்ணுக்கு உள்ள விசேஷ சக்திகள் எந்த நோயையும் குணப்படும் ஆற்றல் கொண்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் நோய் தீரவும், உடல் உபாதைகளில் இருந்து நிவாரணம் பெறவும் அம்மனை தரிசிக்க வருகிறார்கள்.

தங்கள் உடலின் எந்த பகுதி அல்லது பாகத்தில் நோய் உள்ளதோ, மண்ணில் அந்த உருவம் செய்து மாரியம்மன் காலடியில் வைத்து வேண்டுவது வழக்கமாக உள்ளது.

நோய் தீர்ப்பதோடு மட்டுமல்லாமல், நீண்ட கால வறுமை மற்றும் துன்பத்தால் பாதிக்கப்பட்டவர்கள், மாரியம்மனின் தரிசனம் பெற்றால், துன்மபெல்லாம் காற்றில் கரைந்து போகும்.

சர்க்கரை பொங்கல், சிவப்பு நிறப் புடவை மற்றும் சிவப்பு நிறப்பூக்களை படைப்பவர்களும் உண்டு.

Also Read : பால் கொட்டுவது முதல் தயிர் சாப்பிடுவது வரை... இந்தியாவில் பின்பற்றப்படும் உணவு சார்ந்த 10 நம்பிக்கைகள்...

தினசரி நாலு கால பூஜை நடைபெற்றாலும், ஒவ்வொரு வெள்ளியும் ஞாயிறும் சிறப்புப் பூஜைகள் நடைபெறும். அதே போல, ராகு கால பூஜைகளும் உண்டு.

புன்னை நல்லூர் மாரியம்மனும் சோழ வரலாறும்:

தமிழ்நாட்டு வரலாற்றில், சோழர்கள் ஆண்ட காலம் நாடு மிகவும் செழிப்பாக இருந்ததாக வரலாறு கூற்றுகள் உள்ளன. சோழர்கள் தஞ்சையை ஆண்ட காலத்தில், எட்டுத்திக்கிலும் எட்டு வெவ்வேறு சக்தி தேவியரை, எல்லை தெய்வமாக பிரதிஷ்டை செய்தனர் என்றும் கூறப்படுகிறது. தஞ்சைக்கு கிழக்கில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சக்தி தேவியின் அம்சம் தான், புன்னை நல்லூர் மாரியம்மன். சர்வ ரோக நிவாரணத்துக்கு, ஒரு பிடி மண் போதும்! அத்தனை பிணிகளையும் தீர்த்து நிவாரணம் அளிக்கும் புன்னை நல்லூர் மாரியம்மன் பற்றி இங்கே பார்க்கலாம்.

Also Read : ஸ்ரீராமர் தர்ப்பணம் செய்த நித்ய அமாவாசை திருக்கோயில்.!

ஆடி மாதம் முழுவதும் அம்மனுக்கு திருவிழா கொண்டாடும் மாதமாக உள்ளது. மகத்துவம் நிறைந்த ஆடி மாதத்தில் புன்னை நல்லூர் மாரியம்மனை தரிசித்து, வாழ்வில் மேன்மை அடையலாம்.

First published:

Tags: Aadi, Thanjavur