Aadi Koozh : ஆடியில் அம்மனுக்கு கூழ்வார்த்து அன்போடு வழங்கும் மக்கள்!

ஆடி கூழ்

ஆடி மாத அம்மன் பிரசாதங்களில் மிக முக்கியமான கூழ். உடலையும் வயிற்றையும் குளிர்விக்கும் பிரசாதம்.

  • Share this:
    தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்றான கூழை காய்ச்சி, ஆடிமாதத்தில் அம்மனுக்குப் (Aadi Koozh) படைத்து, தங்களின் உறவினர்களுக்கும் சுற்றத்தாருக்கும் வழங்கி உண்டு மகிழ்வது வழக்கம். அந்த கூழ் கேழ்வரகு, கம்பு, அரிசி போன்றவற்றால் செய்யப்படுகிறது. அம்மன் அதை அன்போடு உண்டு அருள் புரிவாள் என்பது மக்களின் நம்பிக்கை.

    ஆடி மாதம் வெப்பமும், மழைக் காற்றும் சேர்ந்து இருக்கும். கோடை வெப்பம் குறைந்து காற்றில் குளுமை கலந்திருக்கும். இதனால், உடலில் வெப்பம் அதிகரிப்பதால் ஏற்படும் நோய்கள் தாக்கக் கூடும் எனவே, உடலை குளிர்விக்க கூழ் வார்க்கப்படுகிறது. இந்த ஆடிமாதத்தில் வேப்பிலை, மஞ்சள் நீர், என அனைத்தையும் வைத்து அம்மன் வழிபாடு செய்யப்படுகிறது. அதேபோல், இந்த மாதம் காற்று பலமாக வீசும் என்பதால், வீடு புழுதி, குப்பை ஆகியவை சேரும். “ஆடிக்காற்றில் அம்மியும் நகரும்” என்பது பழமொழி. எனவே, இந்த மாதத்தில் வீட்டை சுத்தமாக வைத்திருப்பதற்கு முன்னோர்கள் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். அது வழிவழியாகத் தொடர்ந்து வருகிறது.

    ஆடி மாதம் ஞாயிறு, செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடிப்பூரம், ஆடிக்கிருத்திகை, ஆடித்தபசு, வரலக்ஷ்மி பூஜை என்றெல்லாம் பூஜைகள் செய்யப்பட்டு அதற்கு ஏற்ற உணவு வகைகளைச் சமைத்து உண்ண, முன்னோர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆடி மாத வழிபாடுகளில், வேப்பிலையும் மஞ்சளும் தவறாமல் இடம்பிடிப்பவை. இவை நோயில் இருந்தும் நோய்க்கிருமியில் இருந்தும் காப்பதற்கு பயன்படுதப்படுகின்றன. அம்மனுக்கு வேப்பிலையும், மஞ்சளும் அதிகம் பிடித்தமான பொருள்கள் என்பது மக்களின் நம்பிக்கை.

    ஆடி மாத வழிபாடு

    ஆடி மாத அம்மன் பிரசாதங்களில் மிக முக்கியமான கூழ். உடலையும் வயிற்றையும் குளிர்விக்கும் பிரசாதம். இந்த கூழ் குடிப்பதினால் பலவிதமான நோய்களில் இருந்து விடுபடலாம் என்பது நம்பிக்கை. இந்நாளில் புதுமுரத்தை மஞ்சளால் மெழுகி. அதில் குங்கும பொட்டுவைத்து, வேப்பிலையுடன் அம்மனுக்கு படையவிட்டு வழிபடுகின்றனர்.


    Must Read : Aadi Velli : ஆடி வெள்ளியும் அம்மன் வழிபாடும்... கோயில்களில் சிறப்பு பூஜை

    வீட்டிலும், வீட்டிற்கு வெளியிலும் வேப்பிலை தேரணம் கட்டியும், வேப்பிலையை கட்டி வைத்தும் அம்மனை வழிபட்டு மகிழ்கின்றனர். அம்மன் வீட்டிற்கே வந்து அந்த கூழைக் குடித்து மகிழ்வாள் என்பது நம்பிக்கை. இந்த ஆண்டு கொரோனா வைரசின் தாக்கம் குறைந்துள்ள நிலையில், மகிழ்ச்சியாக தங்களின் வீட்டி வாசலில் ஆடி கூழை வைத்து, அந்த வழியாகச் செல்பவர்களை அன்போடு அழைத்து கூழ் கொடுத்து மகிழ்கின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

    அந்த வகையில், சென்னையை அடுத்த போரூர் காட்டுப்பாக்கம் மற்றும் ஐயப்பந்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில், பலரும் தங்கள் வீட்டிற்கு அருகில் கூழ்வார்த்து மகிழ்ந்தனர்.
    Published by:Suresh V
    First published: