தீராத கஷ்டத்தையும் தீர்த்து வைக்கும் ஆடி கிருத்திகை விரதம்!

முருகன்

வருடத்தின் மற்ற எந்த மாதத்திலும் இல்லாத அளவிற்கு இந்த ஆடி மாதத்தில் தான் அதிகளவு தெய்வங்களை வழிபடுவதற்குரிய சிறப்பான நாட்கள் வருகின்றன. அதில் ஒன்று தான் முருகப்பெருமானின் வழிபாட்டிற்குரிய “ஆடி கிருத்திகை”. அற்புதமான அந்த ஆடி கிருத்திகை சிறப்பு குறித்தும், அந்நாளில் முருகனின் அருளை பெறும் கிருத்திகை அல்லது கார்த்திகை விரதம் இருக்கும் முறை குறித்தும் தெரிந்து கொள்ளலாம்.

  • Share this:
    ஆடி மாதங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த நாள்தான் இந்த ஆடி கிருத்திகை. பொதுவாகவே கார்த்திகை நட்சத்திரத்தில் விரதம் இருப்பது மிகவும் நல்லது. அதிலும் ஆடி கிருத்திகை அன்று விரதம் இருந்தால், நமக்கு இருக்கும் தோஷங்கள் கூட நிவர்த்தி ஆகும் என்று சொல்லப்பட்டுள்ளது. இவ்வளவு சிறப்புமிக்க இந்த ஆடி கிருத்திகையை யாரெல்லாம் அவசியம் இருக்க வேண்டும்? கிருத்திகை விரதத்தை எப்படி கடைபிடிப்பது? என்பதைப்  தெரிந்து கொள்ளலாம் வாங்க.

    சிவபெருமானின் அருளால் தோன்றியவர் முருகன். ஆறு கார்த்திகை பெண்களால் சீராட்டி வளர்க்கப்பட்டார் முருகப்பெருமான். அந்த கார்த்திகை பெண்களை கவுரவிக்கும் வகையில் அவர்கள் ஆறு பேரும் “கார்த்திகை” நட்சத்திரமாக மாறி அன்றைய தினத்தில் முருகப்பெருமான் வழிபடப்படும் வழக்கம் ஏற்பட்டது. வருடத்தில் தை கிருத்திகை, ஆடி கிருத்திகை என்ற இரு கிருத்திகைகள் சிறப்பானதாகும்.

    முருகன்


    மேலும் படிக்க... சாம்பிராணி தரும் பலன்கள் என்னென்ன தெரியுமா?

    பொதுவாக ஆடிக் கிருத்திகை தினத்தன்று அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பான வழிபாடுகள் நடத்தப்பட்டாலும் முருகனின் அறுபடைவீடுகளில் ஒன்றான “திருத்தணி” கோவிலில் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு விழாவாக இருக்கிறது. இந்த தினத்தில் முருக பக்தர்கள் காவடி சுமந்து, திருத்தணி மலை மீது ஏறி தங்களின் நேர்த்தி கடன்களை செலுத்துவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா காரணமாக ஆடி திருவிழாக்கள் ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருத்தணியில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்ரும் தொடர்ந்து 5 நாட்களுக்கு பிரசித்தி பெற்ற கோயில்கள் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் படிக்க... நெற்றியில் ஏன் சந்தனம் இட வேண்டும்?!

    இந்த ஆடி கிருத்திகை தினத்தன்று, கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், திருப்புகழ் இப்படிப்பட்ட பாடல்களை ஒலிக்கச் செய்து உங்களது காதுகளில் கேட்பது புண்ணியத்தை தேடித்தரும். நீங்கள் குறிப்பாக திருமணமாகாதவர்களாக இருந்தால், திருப்புகழில் சொல்லப்பட்டிருக்கும் இந்த பாடலை முருகப் பெருமானை நினைத்து, மனமுருகி ஒரே ஒரு முறையாவது உங்களது வாயால் உச்சரிக்க வேண்டும். அப்படி செய்தால் அடுத்த கார்த்திகைக்குள் கண்டிப்பாக திருமணம் நடைப்பெறும் என்பது நம்பிக்கை.

    மேலும் படிக்க... 27 நட்சத்திரங்களும் வழிபாட்டுக் கோயில்களும்!

    ஆடி கிருத்திகை விரதம் இருப்பது எப்படி?

    இந்த ஆடி கிருத்திகை தினத்தன்று அதிகாலை வேளையில் எழுந்து, குளித்து முடித்து விட்டு, பூஜை அறையை சுத்தம் செய்து முருகனின் படத்திற்கு முன்பு அரிசி மாவில் அறு கோண கோலம் இட வேண்டும். பின்பு முருகனின் படத்திற்கு இருபுறமும் நெய் தீபமேற்றி, பூக்கள் மற்றும் பழங்களை நிவேதனம் வைத்து உணவு மற்றும் நீரேதும் அருந்தாமல் கந்த சஷ்டி கவசம் அல்லது சண்முக கவசத்தை மனமொன்றி படிக்க வேண்டும்.

    முடிந்தவர்கள் இந்த தினம் முழுவதும் உணவேதும் உண்ணாமல் வெறும் நீரை மட்டும் அருந்தி விரதம் இருப்பது சிறந்தது. சாப்பிட்டாக வேண்டிய நிலையில் இருப்பவர்கள் இந்நாள் முழுவதும் உப்பு சேர்க்கப்படாத உணவை உண்டு மாலையில் உங்களுக்கு அருகாமையில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். இதனால் தீராத கஷ்டங்கள் தீர்ந்து நல்வாழ்வு கிடைக்கும் என்பது ஐதீகம்.

    .Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vaijayanthi S
    First published: