இன்று ஆடி முதல் வெள்ளி... வீட்டில் பரவசம் மிகுந்த அம்மன் பாடலை கேட்டால் நல்லது...

அம்பாள்

அம்பாள் நம்மிடம் விரும்பி எதிர்பார்ப்பது, உண்மையான பக்தி, தூய்மையான மனது அடுத்தவர்களுக்கு கெடுதல் செய்யாத சுயநலமில்லாத மனம்.

  • Share this:
    ஆடி மாதத்துடன் சேர்ந்து வரும் வெள்ளிக்கிழமை என்பது சிறப்பு. ஆடி முதல் வெள்ளி உடன் பௌர்ணமியும் சேர்ந்து வருவது மேலும் மேலும் சிறப்பு. முதல் வாரமே ஆடி மாத வெள்ளிக்கிழமை, பௌர்ணமி தினத்தன்று வருவதால் இந்த வெள்ளிக்கிழமையை வீட்டில் இருக்கும் பெண்கள் தவற விடக்கூடாது. இன்று அம்மனின் மனதைக் குளிர வைக்கும் படி வீட்டில் எளிமையான முறையில் பூஜை செய்வது அம்மனுக்கு உகந்த பக்தி பாடல்களை ஒலிக்க செய்வது நல்லது.    அம்பாள் நம்மிடம் விரும்பி எதிர்பார்ப்பது, உண்மையான பக்தி, தூய்மையான மனது அடுத்தவர்களுக்கு கெடுதல் செய்யாத சுயநலமில்லாத மனம். ஆகவே உங்களுடைய கோரிக்கையோடு சேர்த்து, இந்த உலகத்தில் உள்ள அத்தனை ஜீவராசிகளும் நன்றாக இருக்க வேண்டும் என்ற பிரார்த்தனையை அம்பாளிடம் வைத்து மனமுருகி வேண்டி வழிபாடு செய்தால் உங்கள் வீட்டிற்கு அம்பாள் விரும்பி வந்து அருளாசியை மனமார வழங்கி விடுவாள். அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு வெள்ளியும் அம்பாளின் பாடல்களை கேட்பது மன நிம்மதியையும் புத்துணர்வையும் அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Vaijayanthi S
    First published: