ஆடி செவ்வாயில் அம்மாயி கொழுக்கட்டை செய்து வணங்குதல் நல்லது... யார் இந்த அம்மாயி தெரியுமா?

ஆடி செவ்வாயில் அம்மாயி கொழுக்கட்டை செய்து வணங்குதல் நல்லது... .

ஆடி மாதம் வரும் செவ்வாய்க்கிழமைகளில் அவ்வையார் பாட்டிக்கு கொழுக்கட்டை செய்து வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை.

  • Share this:
ஆடி மாதம் வரும் செவ்வாய்க்கிழமை மிகவும் சிறப்பு வாய்ந்தவை. ஆடி செவ்வாயில் ஆடி செவ்வாயில் அம்மாயி கொழுக்கட்டை செய்து வணங்குதல் நல்லது. அம்மாயி என்பது அவ்வை பாட்டியை குறிக்கும். தமிழகத்தின் தென் மாவட்டங்களில்  ஆடி செவ்வாய் அன்று அவ்வை நோன்பு கடைப்பிடிக்கும் வழக்கம் இன்றும் இருக்கிறது.

அம்மாயி சாமி கும்பிடுதல் 

ஆடி மாதம் வரும் செவ்வாய்க்கிழமைகளில் அவ்வையார் பாட்டிக்கு கொழுக்கட்டை செய்து வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை. தென் மாவட்டங்களில் இன்றைக்கும் அவ்வையார் வழிபாடு நடைபெறுகிறது. இந்த வழிபாட்டை அம்மாயி சாமி கும்பிடுதல் என்று கிராமங்களில் கூறுவது வழக்கம். இன்றும் பெண்கள் அம்மாயி சாமி என்றுதான் கூறி வருகிறார்கள். இந்த வழிபாட்டை பெணகள் மட்டுமே செய்ய வேண்டும் என்பதுதான் ஐதீகம். ஆண்கள் இதில் கலந்துக்கொள்ளுதல் கூடாது. அத்துடன் அதன் பிரசாதமான அம்மாயின் கொழுக்கட்டையையும் ஆண்களுக்கு கொடுக்க க்கூடாது. ஆண் குழந்தைகளுக்கு கூடக் கொடுக்க கூடாது என்பது எழுதப்படாத சட்டம்.



அம்மாயிக்கு பூஜை செய்யும் முறை

பெண்களுக்கு சவுகரியமான ஒரு ஆடிச்செவ்வாயில் ஒரு வீட்டில் விரதம் இருக்கும் பெண்கள் கூடுவார்கள். அன்று முழுவதும் கைக்குழந்தைகள் தவிர வேறு எந்த ஆணுக்கும் அந்த வீட்டில் இடம் கிடையாது. இரவு பத்து மணியளவில் பூஜை துவங்கும். வயதில் முதிர்ந்த பெண்மணி அவ்வையின் கதையையும் அம்மனின் கதையையும் மற்றவர்களுக்கு கூறுவார்.

ஆடி மாதத்தில் ஏன் சுப நிகழ்ச்சிகள் செய்யப்படுவதில்லை? காரணம் தெரியுமா?

உப்பில்லாகொழுக்கட்டை செய்யும் முறை

இப்பூஜையில் செய்யப்படும் உப்பில்லாகொழுக்கட்டை மிகவும் விசேஷமானது. இதனை வீட்டில் உள்ள பெண்கள் மட்டுமே சாப்பிட வேண்டும். ஆண்களுக்கு தர கூடாது. இந்த பூஜைக்கு புங்க மர இலைகளை இட்லி தட்டில் வைத்து அதன் மேல் கொழுக்கட்டைகளை செய்து வேக வைக்க வேண்டும். பிடி கொழுக்கட்டையோடு அல்லாமல் கொழுக்கட்டை அடை செய்வது மிக முக்கியமான ஒன்றாகும். ஒரு நுனி இலையில் பசுஞ்சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து புங்க இலைகளையும் புளிய மர இலைகளையும் பரப்பி அதன் மேல் செய்து வைத்த அடை கொழுக்கட்டைகள், மற்றும் வெற்றிலை, பாக்கு, பழங்களோடு தேங்காய் உடைத்து வைத்து விநாயகரையும் ஔவையாரையும் நினைத்து படைக்க வேண்டும்.

மேலும் படிக்க...திருமண வரம் தரும் ஆடி செவ்வாய் வழிபாடு!

பூஜையில் எத்தனை பெண்கள் கலந்து கொள்கின்றனரோ அத்தனை அடை கொழுக்கைடைகளை நெய்வேத்தியம் செய்து அதில் விளக்கு போட்டு பூஜை முடிந்த உடனேயே அதை சாப்பிட வேண்டும். இக்கொழுக்கட்டைகளில் உப்பில்லாவிட்டாலும் தேங்காய் நிறைய சேர்ப்பதினால் ருசியாகவே இருக்கும். அத்தோடு ஒரு தேங்காய் மூடியில் சிறிது தேங்காயை துருவி வைத்து கொழுக்கட்டைகளுடன் சேர்த்து நெய்வேத்தியம் செய்ய வேண்டும். இத்தேங்காய் பூவையும் பெண்கள் மட்டுமே சாப்பிடுவார்கள்.

மேலும் படிக்க... ஆடி செவ்வாய் விரதமும் வழிபாடு பலன்களும்

அம்மாயி வழிபாட்டால் கிடைக்கும் பலன்கள்

அடுத்த நாள் விடியற் காலையிலேயே எழுந்து இந்த பூஜை செய்த இடத்தை சுத்தம் செய்து பிள்ளையார் மற்றும் பயன்படுத்திய இலைகளை யார் கண்ணிலும் படாமல் எடுத்து சென்று நீரில் கரைத்து விட வேண்டும். பூஜை செய்த நாளுக்கு மறுநாள் யாருக்கும் எந்த பொருளையும் கடனாகவோ, தானமாகவோ தருதல் கூடாது. இந்த பூஜையை கடைப்பிடித்தால் தீர்க்க சுமங்கலித்துவம், நீங்காத செல்வம், இணக்கமான கணவன், நல்ல குழந்தைகள் வாய்க்கும் என்பர். பெண்களுக்கு செவ்வாய் தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். மணமாகாத கன்னியர்க்கும் குழந்தையில்லா தம்பதிகளுக்கும் இந்த பூஜை ஒரு வரப்பிரசாதம் ஆகும்.
Published by:Vaijayanthi S
First published: