ஆடி அமாவாசை - தங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர்

தங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர்

ஆடி அமாவாசை தினமான நேற்று தங்க கருட வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளினார்.

  • Share this:
    ஆடி அமாவாசை தினமான நேற்று தங்க கருட வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளினார். பதினெட்டாம்படி கருப்பணசாமிக்கு சந்தனசாத்து படி மலர் அலங்காரம் நடைபெற்றது. ஆடி அமாவாசையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அழகர்கோவில் மலை அடிவாரத்தில் அமைந்து கள்ளழகர் திருக்கோவிலில் நடைபெற்ற ஆடி கருட சேவை நிகழ்வில் சுந்தராஜபெருமாள் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளினார்.

    இதனையடுத்து பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்ட பின்னர் சுந்தராஜபெருமாள் அணிந்த மாலையானது கோவில் வளாகத்தில் அமைந்துள்ள காவல் தெய்வமான பதினெட்டாம்படி கருப்பணசாமிக்கு சாத்தப்பட்டது.

    மேலும் படிக்க... மீனாட்சியம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழா தொடங்கியது

    கருப்பணசாமி கோவில் கதவுகள் முழுவதிலும் பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சந்தன சாத்துபடி நடத்தப்பட்டது.


    பின்னர் கருப்பணசாமி கோவில் கதவுகள் முழுவதிலும் பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சந்தன சாத்துபடி நடத்தப்பட்டு தீபாரதனை நடைபெற்றது. இந்நிகழ்வில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பக்தர்கள் இல்லாத நிலையில் அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பட்டர்கள் உரிய சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் படிக்க... இன்று உங்கள் ராசிபலன் எப்படி இருக்கு? (ஆகஸ்ட் 09, 2021)

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    செய்தியாளர்: வெங்கடேஷ், மதுரை
    Published by:Vaijayanthi S
    First published: