Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (செப்டம்பர் 21, 2022) புதிய ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளது.!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (செப்டம்பர் 21, 2022) புதிய ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளது.!

Deiviga Vakku

Deiviga Vakku

Rasi Palan | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
மேஷம்:

நிலுவையில் கிடக்கும் வேலைகளை முடிக்கவும், விஷயங்களை செய்து முடிக்கவும் நல்ல நாள். வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களில் உள்ளுணர்வு சொல்வதை பின்பற்றுங்கள். யாராவது வாக்குவாதம் செய்தால் அமைதியாக இருக்க முயற்சிக்கவும்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - தேயிலை தோட்டம்

ரிஷபம்:

இன்றைய தினம் ரிஷப ராசிக்காரர்களுக்கு சாதமாக உள்ளதால், புதிய வேலைகள் மற்றும் வாய்ப்புகளை தொடங்க ஏற்றது. யாராவது உதவி கேட்டால், நீங்கள் பணிவுடன் மறுக்கலாம்.விரைவில் வெளியூர் செல்ல திட்டமிடுங்கள்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - இரண்டு படகுகள்

மிதுனம்:

இன்று உங்களுடைய பலவீனத்தை சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தலாம், அதனை உங்களால் பாதுகாக்க முடியாது. சில முன்னேற்றம் அடைய சில பேச்சுவார்த்தை உத்திகள் தேவைப்படலாம். ஒரு சக ஊழியர் உதவி கேட்கலாம், அது சுயநலமாகத் தோன்றலாம்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - கூழாங்கற்கள்

கடகம்:

பழைய நட்பு அல்லது உறவுகள் ஒன்று சேர வாய்ப்புள்ளது. வானிலை ஒத்துக்கழைக்காத காரணத்தால் வெளிப்புற சந்திப்புகளை நிறைவேற்ற முடியாது. உங்கள் சப்போர்ட்டை சரியான விஷயத்திற்கு தெரிவிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - கேமரா

சிம்மம்:

இன்றைய தினம் உங்களுக்கு பிடித்த உணவுகள் மற்றும் உபசரிப்புகளுடன் மனநிறைவான நாள். நிலுவையில் உள்ள சில பணிகள் வேகம் கூடும். உங்கள் ஆதரவு ஊழியர்கள் தீர்க்கப்பட வேண்டிய ஒரு சிக்கலைக் கொண்டு வரலாம்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - முத்துக்கள்

கன்னி

அலுவலகம் சூழ்நிலை இப்போது உங்களுக்கு சாதகமாக இருக்கலாம். நண்பர்களுடன் நீண்ட நாட்களாக பேச நினைத்த உரையாடலை இன்று பேசலாம். வீட்டிலும் அலுவலகத்திலும் ஆவணங்களை பத்திரமாக வைத்திருங்கள். தூக்க நொந்தரவு ஏற்படலாம்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - வீட்டு வாசல்

துலாம்:

அக்கறை காட்டுவது பலவீனம் அல்ல, எனவே உங்களுடைய வலுவான புள்ளிகளை முன்வையுங்கள். புதிய செய்முறையை முயற்சிக்க இது ஒரு சிறந்த நாள். உங்கள் உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - சிவப்பு ஸ்கிராஃப்

விருச்சிகம் :

கனவுகள் எப்போதும் ஆழ் மனதின் பய உணர்வு மட்டுமே என்பதால் கெட்ட கனவு பற்றிய அச்சத்தை கைவிடுங்கள். எதிர் பாலினத்தைச் சேர்ந்த ஒருவர் உங்கள் கவனத்தை ஈர்க்கலாம். பழைய நண்பருடன் நாளை செலவிட திட்டமிடலாம்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - செங்கல் சுவர்

தனுசு:

உங்களை நேசிக்கும் ஒருவர் நீங்கள் உடன் இல்லாததை நினைத்து வருத்தப்படலாம். எனவே அன்புக்குரியவர்களுடன் இன்றைய தினத்தை செலவிட திட்டமிடுங்கள். மாலையில் திடீரென வெளியூர் பயணம் செல்ல வேண்டி வரலாம். ரெகுலர் ஹெல்த் செக்அப் செய்து கொள்வது உடல் நலத்திற்கு நல்லது.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - நியான் ஹைலைட்டர்

மகரம்:

இன்றைய நாளை பழைய நினைவுகள் ஆக்கிரமிக்கக்கூடும். பெற்றோர் உங்களுடன் கூடுதலாக நேரம் செலவிட விரும்பலாம். பழைய அணுகுமுறைக்கு பதிலாக புதிய திட்டத்தை உருவாக்கவும்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் -கண்ணாடி பாட்டில்

கும்பம்:

கெட்ட கனவுகள் பற்றிய பயத்தை பின்னுக்குத் தள்ளுங்கள். கூடுதல் பொறுப்பு கிடைக்க வாய்ப்புள்ளது. கடந்த சில மாதங்களாக வாழ்க்கையில் அரங்கேறிய நல்ல விஷயங்களை எண்ணி கடவுளுக்கு நன்றி சொல்வீர்கள்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - வேப்ப மரம்

மீனம்

உங்கள் குடும்பத்தினர் உங்களுடன் கூடுதலாக நேரம் செலவிட நினைக்கிறார்கள். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளது. மருத்துவ நிபுணர்களுக்கு வழக்கத்தை விட பணிச்சுமை கூடுதலாக இருக்கும். அரசு அதிகாரிகளுக்கு வேலையில் சில இடையூறுகள் ஏற்பட வாய்ப்புண்டு.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - வெளிநாட்டு பறவைகள்
Published by:Selvi M
First published:

Tags: Oracle Speaks

அடுத்த செய்தி