ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

வாழ்க்கையில் முன்னேற இந்த சிவ கர்மா விதிகளை பின்பற்றவும்..!

வாழ்க்கையில் முன்னேற இந்த சிவ கர்மா விதிகளை பின்பற்றவும்..!

சிவ பெருமானின் 7 கர்மா விதிகள்

சிவ பெருமானின் 7 கர்மா விதிகள்

law of karma: கர்மா என்பது அனைவராலும் நம்பப்படும் ஒரு விஷயம். நாம் மற்றவர்களுக்கு செய்யும் ஒவ்வொரு விஷயமும், நமக்கு திரும்ப கிடைக்கும் என புராணங்களில் கூறப்பட்டுள்ளது. அது நல்லதாகவும் இருக்கலாம், கெட்டதாகவும் இருக்கலாம். உங்கள் வாழ்க்கையில் நிம்மதியை பெற 7 சிவ கர்மா விதிகளைப் பற்றி இங்கே காணலாம்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

"கர்மா என்பது பூமராங்" என்பதை நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். இதன் அர்த்தம் நாம் மற்றவர்களுக்கு என்ன செய்தாலும் அது நம்மை திரும்ப வந்து சேரும் என்பது தான். நம்மில் பலருக்கு கர்மா குறித்த 12 விதிகள் தெரிந்திருக்கும். ஆனால், சிவ பக்தர்களைத் தவிர மிகச் சிலரே சிவ கர்மா குறித்த 7 விதிகளைப் பற்றி அறிந்திருப்பார்கள். இந்த விதிகளை பின்பற்றுவதன் மூலம், உங்கள் வாழ்க்கையில் அமைதி நிலவும், குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும், இல்லற வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். 7 சிவ கர்மா குறித்த விதிகளை பற்றி தெரிந்து கொள்வோம்.

உண்மை

"உண்மை" சிவகர்மாவின் முதல் விதி. இதன் படி, சிவ பெருமானின் பக்தர்கள் சத்தியம் மற்றும் நீதியின் வழியைப் பின்பற்ற வேண்டும். அதுமட்டும் அல்ல, சிவனின் பக்தன் தங்களைச் சுற்றியுள்ள மக்களுக்கும், தங்களுக்கும் உண்மையாக இருக்க வேண்டும். எல்லா மதமும் கடவுளும் உண்மையை மற்றும் நீதியை ஆதரிக்கிறது. எனவே தான் சிவ பக்தர்களும் சத்தியம் வெல்லும் என்ற தாயகத்தை கொண்டள்ளனர்.

அறிவே கடவுள்

வாழ்க்கையில் வெற்றிகரமாக வாழ அறிவு மிகவும் முக்கியமானது. மனிதனாய் பிறந்த அனைவரும் சிறந்த அறிவுடன் இருப்பார்கள் என்பதில் எந்த நிச்சயமும் இல்லை. ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விஷயங்களைப் பற்றிய அறிவு இருக்கும். எனவே, உங்களுக்கான திறனை நீங்கள் கண்டறிய வேண்டியது மிகவும் அவசியம். நமது திறனை கண்டறிந்து சிறப்பாக செயல்பட்டால் வாழ்க்கையில் கண்டிப்பாக முன்னேறலாம். எனவே, நமது ஞானத்திற்கும் கர்மாவுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

எல்லாம் மாயை

சிவ கர்மாவின் மூன்றாவது விதி "மாயை". நீங்கள் இப்போது எப்படி வாழ்கிறீர்கள், எங்கிருந்து வந்தீர்கள், என்னவாக இருக்கிறீர்கள் என அனைத்தையும் நியாபகம் வைப்பது நல்லது. ஆனால், உங்களின் சந்தோசம் பொருள் சார்ந்த விஷயங்களைச் சார்ந்து இருக்கக்கூடாது என்பதில் கவனமாக இருக்கவும். ஏனென்றால், பொருள் எப்போதும் நிரந்தரமானது அல்லது. எனவே, பொருட்களின் மீது உங்களுக்கு அதீத ஈர்ப்பு இருந்தால் அது கானல் நீரைப்போல உங்கள் மகிழ்ச்சியை கெடுத்துவிடும். நம் கண்முன் தோற்றும் அனைத்தும் பூமிக்கு சொந்தமானவை என பூரணகள் கூறுகின்றனர். சிவ கர்மா விதிப்படி, பொருட்களுடன் மகிழ்ச்சியை இணைக்காமல், உங்கள் வாழ்க்கையை வாழ பழகிக்கொள்ளுங்கள்.

மகிழ்ச்சிக்கு அப்பாற்பட்டது

இந்த உலகம் மிகவும் சுயநலமானது. நாம் அனைவரும் அவரவர் சொந்த வாழ்க்கை மற்றும் மகிழ்ச்சியைப் பற்றி மட்டுமே யோசிக்கிறோம். நம்மைச் சுற்றியுள்ளவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா இல்லையா என்பதைப் பற்றி எப்போதும் கவலைப்படுவதில்லை. ஒருவரின் உண்மையான மகிழ்ச்சி எல்லைக்கு அப்பாற்பட்டது. மற்றவர்களுக்கு நாம் நேர்மையாக இருக்கும் போது மட்டுமே நாம் உண்மையான மகிழ்ச்சியை அனுபவிக்க முடியும். மகிழ்ச்சி வெளியில் இருந்து வருவதில்லை, அது ஒவ்வொரு மனிதனுக்குள்ளேயும் இருக்கிறது.

உருவமில்லாமல் இருப்பது

சிவ கர்மாவின் ஐந்தாவது விதி, தண்ணீரைப் போல "உருவமற்றதாக இருப்பது". உங்களைச் சுற்றி மகிழ்ச்சியாக இருக்கும் நபரை கவனிக்கவும். அது, பொருட்கள் அல்லது உடைமையைச் சுற்றி இருக்காது. உண்மையான சந்தோசம் எந்த விதமான விஷயங்களையும் கட்டுப்படுத்தாது. நீங்கள் நீங்கலாக இருங்கள். நான் இப்படி இருந்தால் மற்றவர்கள் என்னை இப்படி நினைப்பார்கள் என்று ஒருபோதும் நினைக்க வேண்டாம். எல்லா சூழ்நிலைக்கும் ஒத்துப்போவது போல உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். இப்படி இருப்பது உங்களை மகிழ்ச்சியாகவும், வாழ்க்கையில் முன்னேறவும் உதவும்.

எல்லா புலன்களைப் பயன்படுத்துங்கள்

உங்கள் இதயம் அமைதியாக இருந்தால், உங்கள் மனம் சமநிலையாக உணரும். வாழ்க்கையில் மகிழ்ச்சியாகவும் வெற்றிபெறவும் உங்களிடம் இருக்கும் அனைத்து புலன்களையும் பயன்படுத்த வேண்டும். இவற்றை பயன்படுத்துவதன் மூலம் உங்களின் முடிவுகளை நீங்கள் தீர்க்கமாகவும் உறுதியுடனும் எடுக்க முடியும். அத்துடன் நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு வெற்றியையும், மன நிறைவையும் கொடுக்கும்.

அறிவொளி (ஞானம்)

சிவ கர்மாவின் கடைசி விதி அறிவொளி. இதன் மூலம் நீங்கள் யதார்த்தத்தைப் பற்றிய சரியான புரிதலைப் பெறுவீர்கள். உங்களின் இல்லறவாழ்க்கையும் சிறப்பாக இருக்கும். ஞானம் என்பது ஒரு மனிதனின் வாழ்க்கையின் இறுதி நிலை. உங்களுக்குள் இருக்கும் ஞானத்தை தட்டியெழுப்புங்கள். மேலே குறிப்போட்டுள்ள 7 விதிகளையும் பின்பற்றினால் சிறந்த பலன்களை அடைவீர்கள். ​

First published:

Tags: Sivan