ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

திருப்பதி உண்டியலில் வரலாறு காணாத வசூல்! - ஒரே நாளில் இவ்வளவா?

திருப்பதி உண்டியலில் வரலாறு காணாத வசூல்! - ஒரே நாளில் இவ்வளவா?

திருப்பதி

திருப்பதி

Tirupati | திருப்பதியில் இதுவரை ஒரே நாளில் அதிகபட்சமாக ரூ.6 கோடிக்கு மேல் உண்டியல் வசூலாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் நேற்று ஒரே நாளில் 7  கோடியே 68 லட்ச ரூபாயை உண்டியலில் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். இதற்கு முன் கடந்த ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி 6 கோடி 31 லட்ச ரூபாய் ஏழுமலையானுக்கு காணிக்கையாக கிடைத்திருந்தது. அதுவே நேற்று முன்தினம் வரை ஏழுமலையானுக்கு ஒரே நாளில் காணிக்கையாக கிடைத்த அதிக தொகையாக இருந்து வந்தது.

வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதியில் நேற்று நள்ளிரவு 12.05 மணி அளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதற்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த அமைச்சர்கள், முதல்வர்கள், மற்ற விஐபிக்கள் சொர்க்கவாசல் வழியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். காலை 5 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீ வாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 7 கோடியே 68 லட்ச ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். எனவே இது ஏழுமலையான் கோவில் உண்டியல் வரலாற்றில் ஒரே நாளில் பக்தர்களிடம் இருந்து பெறப்பட்ட அதிக தொகை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர்: புஷ்பராஜ், திருப்பதி

First published:

Tags: Tirumala Tirupati, Tirupati