Home /News /spiritual /

பிரம்மோற்சவம் 4வது நாள்: சர்வ பூபால வாகன சேவை!

பிரம்மோற்சவம் 4வது நாள்: சர்வ பூபால வாகன சேவை!

சர்வ பூபால வாகன சேவை

சர்வ பூபால வாகன சேவை

சர்வ பூபால சேவையை முன்னிட்டு ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி சர்வ பூபால வாகனத்தில் எழுந்தருளி கோவில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் நான்காம் நாள் இரவில்  சர்வ பூபால வாகன சேவை நடைபெற்றது. உற்சவர் மலையப்ப சாமி ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாக எழுந்தருளினார்.

    திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 7ஆம் தேதி துவங்கி கோவிலுக்கு உள்ளேயே ஏகாந்தமாக நடைபெற்று வருகிறது.9 நாட்கள் இந்த வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெறவுள்ளது. பிரம்மோற்சவ நாட்களில் தினமும் 3 முதல் 3.5 லட்சம் லட்டு பிரசாதங்கள் நிலுவையில் இருக்கும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

    பிரம்மோற்சவத்தின் நான்காவது நாளான நேற்று காலை கல்ப விருட்ச வாகனத்தில் மலையப்பசாமி ராஜமன்னர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  அதை தொடர்ந்து இரவு சர்வ பூபால வாகன சேவையும் நடைபெற்றன.

    மேலும் பார்க்க: திருப்பதி பிரம்மோற்சவ விழா: 4வது நாளில் கல்ப விருட்ச வாகன சேவை..


    சர்வ பூபால சேவையை முன்னிட்டு ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி சர்வ பூபால வாகனத்தில் எழுந்தருளி கோவில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிகழ்ச்சியில் ஜீயர்கள், தேவஸ்தான அறங்காவலர் குழுவினர், நிர்வாக அதிகாரி மற்றும் தேவஸ்தான அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Tirupathi, Tirupati brahmotsavam

    அடுத்த செய்தி