முகப்பு /செய்தி /ஆன்மிகம் / சதுரகிரி சுந்தர மகாலிங்கத்தை தரிசிக்க 4 நாட்கள் அனுமதி

சதுரகிரி சுந்தர மகாலிங்கத்தை தரிசிக்க 4 நாட்கள் அனுமதி

சதுரகிரி மகாலிங்கம் கோயில்

சதுரகிரி மகாலிங்கம் கோயில்

Sadhuragiri Sundaramahalingam Temple | விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Virudhunagar, India

வத்திராயிருப்பு மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் திருக்கோவிலுக்கு தை மாத பிரதோஷம் , பெளர்ணமியை முன்னிட்டு நாளை 03.02.23 முதல் 06.03.23 வரை 4 நாட்கள் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் மழை பெய்தால் அனுமதி இல்லை எனவும் வனத்துறை அறிவித்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பிரதோஷம் மற்றும் மகாளய பெளர்ணமியை முன்னிட்டு நாளை 03-ம் தேதி முதல் (வெள்ளிக்கிழமை) முதல் 06-ம் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

பக்தர்கள் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிரதோஷம் மற்றும் பெளர்ணமி நாளில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.

பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை, கோவில் நிர்வாகம் செய்து வருகிறது. வனப்பகுதியில் எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இரவு நேரங்களில் மலைப்பகுதியில் தங்குவதற்கு கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.

மேலும் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் பக்தர்கள் இறங்கி குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அனுமதி நாட்களில் மழை பெய்தால் பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை எனவும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Virudhunagar