நாளை அத்திவரதர் தரிசனத்திற்கு மதியம் 12 மணிவரை மட்டுமே அனுமதி

அத்திவரதர்

ஆகஸ்ட் 1-ம் தேதி வழக்கம் போல் காலை 5 மணியிலிருந்து அத்திவரதர் நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஜூலை 31-ம் தேதி காலை 12 மணிக்கே கோவிலில் ராஜகோபுரம் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 1 முதல் அத்திவரதர் நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிப்பதற்கு உண்டான ஏற்பாடுகள் செய்வதற்காக இந்த முறை கடைப்பிடிக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் வரும் 17-ம் தேதி வரை அத்திவரதர் நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிப்பார் என மாவட்ட நிர்வாகம் சார்பாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதனால் ஜூலை 31-ம் தேதியான நாளை பொது தரிசனத்தில் நுழைவுவாயில் நண்பகல் 12 மணி அளவில் மூடப்படும். அதன்பின்னர் கோயில் வளாகத்திற்குள் இருக்கக்கூடிய பக்தர்கள் மட்டும் மாலை 5 மணிவரை தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் விஐபி வரிசையில் வரக்கூடிய பக்தர்கள் மாலை 3 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் இந்து அறநிலையத் துறை சார்பாக ஏற்படுத்தப்பட்டு இருக்கக்கூடிய ஆன்லைன் பாஸ் வைத்திருப்பவர்கள் நண்பகல் 12 மணியிலிருந்து மதியம் 3 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 31-ம் தேதி மாலை 5 மணியுடன் அத்திவரதர் தரிசனம் நிறுத்தப்பட்டு அவரை நின்ற கோலத்தில் வைப்பதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 1-ம் தேதி வழக்கம் போல் காலை 5 மணியிலிருந்து அத்திவரதர் நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க... அத்திவரதர் கோயிலில் 1 கோடியே 95 ஆயிரம் ரூபாய்!

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.Published by:Vaijayanthi S
First published: