திருப்பதி மலையில் கடந்த இரண்டு நாட்களாக பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. அதனால் இலவச தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு செல்கின்றனர். இதனால் இலவச தரிசனத்தில் சுமார் 30 மணி நேரத்திற்கு மேல் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை தற்போது நிலவுகிறது.
இந்த நிலையில் அவ்வப்போது கொட்டும் மழை, குளிர் காற்று ஆகியவற்றின் காரணமாக குழந்தைகள், மூத்த குடிமக்கள் ஆகியோருடன் வரிசையில் மிக நீண்ட நேரம் காத்திருக்கும் பக்தர்கள் தங்களை விரைவாக கோவிலுக்குள் அனுமதிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டு வருகின்றனர்.
ஆனால் அவர்களுடைய கோரிக்கையை தேவஸ்தான நிர்வாகம் ஏற்றுக்கொள்ளாத காரணத்தால் அதிருப்தி அடைந்த பக்தர்கள் ஏழுமலையான் கோவில் பின்பகுதியில் தேவஸ்தான அருங்காட்சியகம் அருகே சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
திருப்பதி மலையை பொறுத்த வரை பக்தர்கள் போராட்டம் நடத்துவது எப்போதாவது ஒருமுறை மட்டுமே நடைபெறும். இன்று பக்தர்கள் நடத்திய போராட்டம் காரணமாக தேவஸ்தான நிர்வாகத்தில் அதிர்ச்சி ஏற்பட்டது. விஜிலென்ஸ் துறையினர், போலீசார் ஆகியோர் விரைந்து சென்று பக்தர்களை சமாதானம் செய்து அனுப்பி வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விரைவாக தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி பக்தர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருப்பதி மலையில் கடந்த இரு நாட்களாக பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. ஏழுமலையான் கோயிலில் அதிகரித்த கூட்டம் காரணமாக, கட்டணமில்லா தரிசனம் மேற்கொள்வோர் 30 மணி நேரத்திற்கும் மேல் வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால், குழந்தைகள் மற்றும் பெண்கள் அதிகளவு பாதிக்கப்படுவதாகக் கூறியுள்ள பக்தர்கள், விரைந்து தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Tirumala Tirupati, Tirupati