Home /News /spiritual /

MahaShivRatri2022 : பிரம்மா, விஷ்ணு, சிவன் - மூவரும் ஒருவரா? - சத்குரு விளக்கம்

MahaShivRatri2022 : பிரம்மா, விஷ்ணு, சிவன் - மூவரும் ஒருவரா? - சத்குரு விளக்கம்

சத்குரு

சத்குரு

MahaShivRatri2022 : பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூவரும் படைப்பின் வெவ்வேறு அம்சங்களை குறிப்பதை பற்றி பேசும் சத்குரு அவர்கள், பிரம்மன் படைத்தலுக்கும், விஷ்ணு காத்தலுக்கும், சிவன் அழித்தலுக்கும் உரியவர்கள் என்பதை விஞ்ஞானத்தை துணைக்கு அழைத்து அழகுடன் விளக்குகிறார்.

மேலும் படிக்கவும் ...
பிரம்மா , விஷ்ணு , மகேஷ்வரானு சொல்லுறப்ப யாரோ 3 பேருனு நினைச்சுக்க வேணாம். ஒருத்தர் மேகத்துல பறக்குற மாதிரி , இன்னொருத்தர் மலை மேல உட்கார்ந்து இருக்குற மாதிரியும், இன்னொருத்தர் வேறு ஏதோ செஞ்சுட்டு இருக்குற மாதிரியும் நினைச்சுக்க வேண்டாம். நாம 3 பேரை பத்தி பேசல. இந்த படைப்போட 3 அடிப்படை பரிணாமங்களை பத்தி பேசுறோம்.

அது இல்லாமல் இந்த படைப்பில் எதுவுமே நடக்காது. இந்த கதைகளை எல்லாம் நீங்க கொஞ்சம் நுட்பமாக பார்த்தால் பிரம்மன் தான் படைத்தலின் சக்தி. இந்த பிரபஞ்சத்துல படைப்பு நடக்குதா? நிச்சயமாக நடக்குது. விஷ்ணு பராமரிப்பு. பராமரிப்பு வேலைகள் நடக்குதா? நடக்குது.

எது நடக்குதோ இல்லையோ அழித்தல் நிச்சயமாக நடக்குது. உங்க உடம்புலேயே இப்ப கோடிக்கணக்கான செல்கள் இறக்குது. கோடிக்கணக்கான புது செல்கள் உருவாகிக் கிட்டே இருக்குது. கோடிக்கணக்கில் பாதுகாத்து வைக்கப்படுகின்றது. இல்லையா? இந்த சக்திகளின் விளைவாக தான் நீங்கள் பிறந்திருக்கீங்க.

இந்த பூமியும் அப்படித் தான். சூரிய மண்டலமும், மொத்த படைப்பும் , படைப்போடு இந்த 3 அம்சங்களும் அப்படித் தான். படைத்தல் , காத்தல், அழித்தல் . நீங்க சிவனோட கொஞ்சம் நெருக்கம் ஆனதுனால அழித்தல் சக்தி கொஞ்சம் அதிகமாக நெருக்கமா இருக்கலாம். ஆனா மூணுமே ஒரே அளவுல தான் செயல்படுது இல்லையா?



இது தான் இந்த மொத்த அண்டத்துக்குமான அடிப்படை. பிண்டமும் அதே அடிப்படையில் தான் இயங்குது. பிண்டமும் அதே மூணு சக்தி தான். அணுவுலையும் அதே மூணு சக்தி தான். அண்டத்துலயும் அதே மூணு சக்தி தான். ரொம்ப ரொம்ப எளிமையான ஒரு படைப்பு இது. வெறும் 3 சக்திகள். 3 அடிப்படை சக்திகள் தான் இவ்ளோ பெரிய ஆட்டத்தை ஆடுது. பெரிய விளையாட்டு இல்லையா? ரொம்ப பெரிய ஆட்டம். வெறும் மூணு சக்திகள் தான். எல்லா இடத்துலயும் திரிசூலத்தை பார்த்திருப்பீங்க. அது ஒரு ஆயுதம்னு நினச்சுக்க வேண்டாம். அத மக்கள் ஆயுதமாக பயன்படுத்திக்கிறாங்க. யாரையோ கொல்றதுக்கு திரிசூலம் சிறப்பான ஆயுதம் கிடையாது. சண்டை போடுறது பத்தி தெரியாத ஒரு நபர் தான் திரிசூலத்தை தூக்கிக்கொண்டு சண்டைக்கு போவாங்க. திரிசூலத்தை வச்சு யாரையாவது இப்டி குத்த முடியுமா ? திரிசூலம் ஒரு ஆயுதம் கிடையாது. அது ஒரு அடையாளச் சின்னம். சிவன் திரிசூலத்தை வச்சிருக்கிறது உங்க கூட சண்டை போடுவதற்காக இல்லை.

இதையும் படியுங்கள் : விழிப்புணர்வு’ என்று நாம் சொல்வது எது? - சத்குரு விளக்கம்

அவரோட மகன் வேல் வச்சிருக்காரு. அது போருக்கான ஆயுதம். அவர் போருக்கு மேல் போர் செய்து கொண்டே இருந்தார். கார்த்திகேயன் தொடர்ந்து போர் புரிந்தார். சிவன் போர் புரியவே இல்லை. திரிசூலம் ஒரு அடையாளச் சின்னம். 3 அம்சமும் ஒன்னு தாணு காட்டுறதுக்காக மேலோட்டமாக சொல்லுறாங்க. மத்தவங்களை குத்த நினச்சா அது ஒன்னும் நல்ல ஆயுதம் கிடையாது . மத்தவங்களை முன்னேற தள்ளி விட வேணா அதனை பயன்படுத்தலாம். அடுத்தவங்களை குத்த நினச்சா அது ஒரு ஆயுதம் கிடையாது. இந்த மூணும் ஆழமாக பார்த்தால் ஒன்று தான். இந்த மூன்றும் படைப்பின் எல்லா அம்சங்களையும் தெள்ளத்தெளிவாக வெளிப்படுத்துகின்றது. புரோட்டான்ல இருந்து நியூட்ரான், எலக்ரான் வரைக்கும் இந்த மூணும் தெள்ளத் தெளிவாக வெளிப்படுத்துது. அப்ப மஹாதேவன் உடைய முக்கியத்துவம் என்ன? இந்த மூணும் ஒண்ணா செயல்படுறது தான் மஹாதேவன்.



எல்லாரும் சேர்ந்து ஒன்றாக செயல்பட்டால் அவர் மஹாதேவன்.அதனால் தான் அழிப்பவரை மஹாதேவன் என கூறினோம். ஏனென்றால் பிரம்மன் படைத்தலுக்கானவர். விஷ்ணு அந்த படைத்தலை காப்பவர். சிவன் அழிப்பவர். படைத்தலும், காத்தலும் , அளித்தலோட மடியில தான் வாழுது. பிரபஞ்சத்தின் வெற்றிடம் தான் அதிகமாக விரிவடையக்கூடிய பொருள். எல்லையில்லா பொருள்.

இதையும் படியுங்கள் : சிவனின் பெற்றோர்கள் யார்? சத்குரு விளக்கம்

அதோட மடியில தான் இந்த படைப்பு நடக்குது. அப்புறம் அழியுது. இல்லையா? நடக்குது. முழுசா செயல்பட்டு அழிந்தும் போகுது. இது எல்லாமே சிவனின் மடியில தான் நடக்குது. ஏன்னா அவரு அழித்தலுக்குரியவர். சிவன்னா எது இல்லையோ அது. சிவா என்றால் எது இல்லையோ அது எனப் பொருள். நாம அதனை வணங்க காரணம் அது தான் எல்லாத்துக்கும் அடிப்படை என்பதால் தான். இன்றைக்கு நவீன அறிவியல் மெல்ல இதனை நோக்கி நகருது. கொஞ்ச காலத்துக்கு முன்னாடி எலக்ட்ரோ மேக்னடிக் சக்தி, அணு சக்தி , புவி ஈர்ப்பு சக்தி இது எல்லாம் தான் பெரிசுனு நம்பிகிட்டு இருந்தாங்க. ஆனால் இப்ப ஆழமாக போக போக நவீன அறிவியல்ல புவி ஈர்ப்பு விசைக்கு போதுமான விளக்கம் இன்னைக்கு வரைக்கும் இல்லைனு உங்களுக்குத் தெரியுமா? ஐசக் நியூட்டன் ஆப்பிள் கீழ விழுதுனு மட்டும் தான் சொல்லிருக்காரு. ஆப்பிள் கீழ தான் விழும்னு இங்க இருக்குற ஒவ்வொரு கிராமத்துப் பையனுக்கும் தெரியும் இல்லையா. அவர் விளக்கம் எதுவும் கொடுக்கல. அதுக்கு கணிதப் பின்னணியும் இல்லை. வெறுமனே ஆப்பிள் கீழ விழுதுனு மட்டும் சொன்னாரு.



அப்பத்துல இருந்து அது என்னனு கண்டு பிடிக்க முயற்சி செஞ்சுக்கிட்டே இருக்குறாங்க. மற்ற சக்தி பற்றி கூட கண்டு பிடிக்கிறாங்க. ஆனால் புவி ஈர்ப்பு விசை நவீன அறிவியலை ஒரு குழப்பத்தில் வைத்திருக்கின்றது. புவி ஈர்ப்பு விசை ஏன் இப்படி வேலை செய்கின்றது என இவர்களால் கண்டுபிடிக்கவே முடியல.

அதனால இன்னைக்கு அவங்க பேசுற ஒரு விளக்கம் என்னென்னா? ஒரு காலத்துல சூரியனோட ஈர்ப்பு விசை தான் எல்லா கிரகத்துலயும் அதோட இடத்துல அது வச்சுருக்குதுனும், ஏதோ ஒன்னோட ஈர்ப்பு விசை தான் எல்லா பால்வழியையும் பிடிச்சு வச்சுருக்குனும் பேசினாங்க. இப்ப ஏதோ ஒரு இருண்ட சக்தி (Dark Force) தான் எல்லா இடத்துலயும் நிரம்பி இருக்குனு சொல்லுறாங்க.

இதையும் படியுங்கள் : மண்வளம் காக்க நோபல் பரிசு பெற்ற ஐ.நா அமைப்புடன் ஈஷா புரிந்துணர்வு ஒப்பந்தம்

விவரிக்க வார்த்தை இல்லாததுனால அதோட தரத்தை அவர்களால் நிர்ணயிக்க முடியல. அதனால அதனை இருண்ட சக்தினு சொல்லுறாங்க. அந்த இருண்ட சக்தி தான் எல்லாத்தையும் அது அதோட இடத்துல தக்க வச்சிருக்குதுனு சொல்றாங்க. அந்த சக்தியோட இயல்பு என்னண்னு அவங்களுக்குத் தெரியல. அத இருண்ட சக்தி (Dark Force) னு சொல்றாங்க. சிவனை நாம் எப்போதுமே கறுப்பானவரு. கருமையான தோற்றம் கொண்டவர் அப்டீன்னு சொல்லி வந்துருக்கோம். அவரோட இரவு தான் மாசத்தோட இருட்டான ராத்திரி.



நவீன விஞ்ஞானிகள் அவங்களோட பாஷையில சிவன் தான் எல்லாத்தையும் ஒன்றாக பிடிச்சு வச்சிருக்காருனு சொல்லுறாங்க. இத சொல்லிட்டதுனால யாரோ ஒரு ஆளு எங்கயோ மலை மேல உட்கார்ந்து கிட்டு எல்லாத்தையும் பிடிச்சு வச்சுருக்காருனு நீங்க கற்பனை பண்ண வேண்டாம். அது அப்படி நடக்கல.
சிவா அப்டினா எது இல்லையோ அது. இருக்கிறதுலேயே உயர்வானதாக பார்க்கப்படுகின்றது. எது இல்லையோ அது இந்த படைப்புலயே ரொம்ப பெரிய வெளிப்பாடு அது தான். நீங்க வானத்தை பாருங்க. நீங்க வானத்தை பார்ப்பது உண்டா? சரி உங்களை நம்புறேன். நீங்க வானத்தை பார்த்தால் உங்கள் பார்வை எப்படி அமைக்கப்பட்டிருக்கும்னா வானம் முழுக்க நட்சத்திரம் நிறைஞ்சு இருக்கிறத நீங்க பார்ப்பீங்க. அது உண்மை இல்ல. அது வெறும் இருள் தான் இல்லையா? நீங்க பார்க்குற பால்வெளி எல்லாமே ஒரு சின்ன துகள் தான்.

இதையும் படியுங்கள் :   ஏன் கெட்டவர்கள் நன்றாக வாழ்கிறார்கள்? - சத்குரு விளக்கம்

அங்க பறந்து விரிஞ்சு இருக்கிறது வெறுமை தான் இல்லையா? அதத் தான் நாம சிவானு சொல்லுறோம். ஆனால் அதுல பல அம்சம் இருக்குது. நாம சொல்மரபு சார்ந்த கலாச்சாரமாக இருக்கிறதுனால பிரபஞ்சத்துக்கு எல்லை இல்லை என்பது அடுத்தடுத்த தலைமுறைக்கு போய் சேர்ந்திருக்கு. சூரிய மண்டலத்துக்கும் , பால்வழி மண்டலத்துக்கும் இடையில எல்லைக் கோடு இருக்கா என்ன? கிடையாது. ஒரு பால்வழி மண்டலத்துக்கும், இன்னோனுக்கும் இடையில எல்லைக் கோடு கிடையாது.

அப்படி ஒண்ணுமே இல்லையே இது எல்லை இல்லா பறந்து விரிந்த பிரபஞ்சம். நம்ம கலாச்சாரம் சொல் மரபு கலாச்சாரமா இருக்கிறதுனால எல்லாமே இடைவெளி இல்லாமல் அடுத்தடுத்த தலைமுறைக்கு போய் இருக்கு. அதனால நான் சிவன் பத்தி பேசுறேன். நான் எந்த சிவன் பத்தி பேசுறேன்னு நீங்க தான் புரிஞ்சுக்கணும். சிவன்னு சொல்லுறப்ப அந்த எல்லை இல்லாத வெறுமையை சொல்வேன். சிவன் சொல்றப்ப ஆதி யோகி சொல்வோம். சிவன் சொல்றப்ப இங்க வேலை செய்யுற தொழிலாளி அவர் பெயர் சிவனா இருக்கலாம். இது எல்லாத்தயும் நாம ஒரு சேர சொல்லுவோம். இந்த காரணத்துனால தான் நாம எல்லையற்ற தன்மையை ஒன்னும் இல்லாத தன்மையை உயர்வாக பார்க்குறோம். வணங்குறோம். ஆதியோகியை உயர்வாக பார்க்குறோம். வணங்குறோம்.

நீங்கள் குறிப்பிடும் இருண்ட சக்தி (Dark Force) இது எல்லாத்தையும் பிடிச்சு வைக்காம இந்த உடலோடு ஒன்றாக இருக்காது. வெடித்து சிதறி விடும். அதனால உங்களை பார்க்கும் போதும் அதனைத் தான் செய்வேன். வணங்குவேன். இத நீங்க புரிஞ்சுக்கணும்.



இந்த ஒரு இடத்துல தான் இந்த வழக்கம் எல்லாமே இருக்குது. நீங்க விழிப்புணர்வு இல்லாமல் இது எல்லாமே செய்யுறீங்க. அதனால அர்த்தம் இல்லாதது போல உங்களுக்குத் தெரியுது. உங்க கடவுளை எப்படி வணங்குவீங்களோ அப்படியே தான் எல்லாரையும் வணங்குவீங்க. இல்லையா? ஏன்னா அந்த நபருக்கு தன்னோட மூலம் என்னனு தெரியாமல் இருக்கலாம். ஆனால் நான் அதனை அடையாளம் காண விரும்புறேன். தனக்குள்ள துடிப்போடு இருக்குற படைத்தவரை பத்தி அவருக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் நான் அதனை அடையாளம் காண விரும்புகின்றேன். நான் அதனை பார்த்தால் எனக்குள்ளே மாற்றங்கள் நடக்கலாம். அவரு அதனை பார்த்தால் அவருக்கு அற்புதம் நடக்கலாம். இப்ப நான் பார்க்க விரும்புறேன். நான் கடவுளுக்கு என்ன செய்ய விரும்புறேனோ அதையே என்னோட பக்கத்துல இருக்குறவருக்கும் செய்ய விரும்புறேன். என்னோட வேலை காரருக்கும் செய்ய விரும்புறேன். ஒரு பசுவோ, கல்லோ , யானையோ அதையும் வணங்குவேன்.

ஏன்னா எந்த ஒரு வாய்ப்பையும் தவற விட விரும்புறது இல்லை. நீங்க எங்க இருந்தாலும் படைப்பின் மூலம் ஒவ்வொரு படைப்புலயும் உயிர் துடிப்போடு இருக்குறத பாக்க முயற்சி எடுக்குறீங்க. யாராலயும் இதனை மறுக்க முடியாது. நவீன அறிவியலால் கூட இதனை மறுக்க முடியாது. படைப்பின் மூலம் எதுவோ அது ஒவ்வொரு சின்ன அணுவுலையும் இயங்கிட்டு இருக்குது.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Sadhguru

அடுத்த செய்தி