அத்திவரதரை காண அலைமோதும் கூட்டம்.. தரிசன நேரம் நீட்டிப்பு

பக்தர் கூட்டம் காரணமாக காஞ்சிபுரத்தில் போக்குவரத்து நெரிசல்

Web Desk | news18
Updated: August 7, 2019, 8:11 AM IST
அத்திவரதரை காண அலைமோதும் கூட்டம்.. தரிசன நேரம் நீட்டிப்பு
அத்திவரதர்
Web Desk | news18
Updated: August 7, 2019, 8:11 AM IST
அத்திவரதரை காண இனி வரும் நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் தரிசன நேரம் 21 மணி நேரமாக நீட்டிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதரை காண நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில், காலை முதலே சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு வரிசையில் நின்ற பக்தர்கள், 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

வழி எங்கும் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டதால் காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனிடையே 37-ம் நாளில் 4 லட்சத்திற்கும் அதிகமாக பக்தர்கள் சாமிதரிசனம் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் பொன்னையா, இனி வரும் நாட்களில் பக்தர்கள் வருகை அதிகரிக்கக் கூடும் என்பதால் தரிசனம் நேரம் காலை 5 மணியில் இருந்து நள்ளிரவு 2 மணி வரை நீட்டிக்க உள்ளதாகக் கூறினார்.

ஆகஸ்ட் 16 மற்றும் 17-ம் தேதிகளில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாகவும், 17-ம் தேதி மாலை 5 மணியுடன் அத்தி வரதர் தரிசனம் நிறைவுக்கு வருவதாகவும் தெரிவித்தார். அதற்கு பின் அனந்தசரஸ் குளத்தில் அத்தி வரதரை சயன கோலத்தில் வைக்கும் பணி தொடங்கும் என்றும் பொன்னையா கூறினார்.

Also see... அத்திவரதர் தரிசனம் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடப்பதே ஐதீகம்

Loading...


அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

 
First published: August 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...