2020 புத்தாண்டு பலன் : கன்னி ராசி நேயர்களுக்கு இந்த ஆண்டு எப்படி இருக்கும்..?

2020 ஆண்டு ராசிபலன் | கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

2020 புத்தாண்டு பலன் : கன்னி ராசி நேயர்களுக்கு இந்த ஆண்டு எப்படி இருக்கும்..?
கன்னி ராசி
  • Share this:
கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்)

துரிதமாக வேலைகளை முடிக்கக் கூடிய கன்னி ராசியினரே இந்த வருடம்  எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை கூடும். துணிச்சலாக எதிலும் ஈடுபடுவீர்கள். உங்களது எண்ணப்படியே எதையும் செய்து முடிக்கும் சூழ்நிலை ஏற்படும். மற்றவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் நாட்டம் செல்லும். கவுரவம் அந்தஸ்து உயரும். வீண் செலவுகள் உண்டாகும்.

குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும் எதை பற்றியும் கவலைப்படாமல் நினைத்த காரியத்தை செய்வதில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகளுக்காக பாடுபடுவீர்கள். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் கவுரவம் கூடும்.


தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் மெத்தன போக்கு காணப்படும். வாடிக்கையாளர்களிடம்  கோபமான வார்த்தைகளை பேசாமல்  சாந்தமாக உரையாடுவது வியாபார விருத்திக்கு வழி செய்யும். பணவரத்து திருப்தியாக இருக்கும். செலவும் கூடும்.

கலைத்துறையினருக்கு சற்று மந்தமான சூழ்நிலை காணப்படும், இந்த காலகட்டத்தை ஓய்வெடுக்க பயன்படுத்திக்கொள்ளுங்கள். வேலைகள் சற்று தாமதமாக வந்து சேரும். கவலை வேண்டாம்.

அரசியல்வாதிகளுக்கு லாபம் அதிகரிக்கும்.  எதிர்பார்த்த பணவிஷயங்கள் நல்ல முறையில் நடந்து முடியும். மேலிடத்திலிருந்தும் பணம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் உங்களை வந்தடையும்.பெண்களுக்கு பேச்சின் இனிமை சாதுரியம் இவற்றால் எடுத்த காரியங்களில் சாதகமான பலன் பெறுவீர்கள். உங்களது பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது.

மாணவர்களுக்கு கல்வி தொடர்பான சிக்கல்கள் குறையும். எதிர்பார்த்த மதிப்பெண் பெற அதிக நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது நல்லது.

உத்திரம்:

இந்த வருடம்  தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். ஏற்றுமதி சிறக்கும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். பழைய பாக்கி வசூலாகும். உத்தியோகத்தில்  இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். மேல் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.

ஹஸ்தம்:

இந்த வருடம்  குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களுடன் அனுசரித்து செல்வார்கள்.  விசேஷ நிகழ்ச்சிகளில்  குடும்பத்தினருடன்  கலந்து கொள்ள நேரிடும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகளின் உடல்நிலையில் கவனம் தேவை.

சித்திரை:

இந்த வருடம்  திறமையாக செயல்பட்டு காரிய வெற்றி காண்பீர்கள். மதிப்பும், மரியாதையும் கூடும். மாணவர்கள் கல்வியில் சிரமபட்டு முன்னேற்றம் காண வேண்டி இருக்கும். மனோதைரியம் கூடும்.

பரிகாரம்: புதன்கிழமையில் நவகிரகத்தில் புதனுக்கு பால் அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி வணங்கி வருவது புத்தி சாதுரியத்தை தரும். சிக்கலான பிரச்சனைகளையும் எளிதாக தீர்ப்பீர்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - புதன்

Also Read : மேஷ ராசி நேயர்களுக்கு இந்த ஆண்டு எப்படி இருக்கும்..?

Also Read :  ரிஷப ராசி நேயர்களுக்கு இந்த ஆண்டு எப்படி இருக்கும்..?

Also Read :  மிதுன ராசி நேயர்களுக்கு இந்த ஆண்டு எப்படி இருக்கும்..?

Also Read : கடக ராசி நேயர்களுக்கு இந்த ஆண்டு எப்படி இருக்கும்..?

Also Read : சிம்ம ராசி நேயர்களுக்கு இந்த ஆண்டு எப்படி இருக்கும்..?

Also Read : துலாம் ராசி நேயர்களுக்கு இந்த ஆண்டு எப்படி இருக்கும்..?

Also Read :  விருச்சிக ராசி நேயர்களுக்கு இந்த ஆண்டு எப்படி இருக்கும்..?

Also Read :தனுசு ராசி நேயர்களுக்கு இந்த ஆண்டு எப்படி இருக்கும்..?

Also Read : மகர ராசி நேயர்களுக்கு இந்த ஆண்டு எப்படி இருக்கும்..?

Also Read: கும்ப ராசி நேயர்களுக்கு இந்த ஆண்டு எப்படி இருக்கும்..?

Also Read : மீன ராசி நேயர்களுக்கு இந்த ஆண்டு எப்படி இருக்கும்..?

First published: December 31, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading