2020 புத்தாண்டு பலன் : ரிஷப ராசி நேயர்களுக்கு இந்த ஆண்டு எப்படி இருக்கும்..?

2020 ஆண்டு ராசிபலன் | கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

2020 புத்தாண்டு பலன் :  ரிஷப ராசி நேயர்களுக்கு இந்த ஆண்டு எப்படி இருக்கும்..?
2020 ஆண்டு ராசிபலன் | கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)
  • Share this:
ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்)

உடல் நிலையில் முன்னேற்றத்தை காண விரும்பும் ரிஷப ராசியினரே நீங்கள் கொடுத்த வாக்கை காப்பாற்ற பாடுபடுவீர்கள். இந்த வருடம்  எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். கடுமையான முயற்சிகள் மேற்கொள்வது குறையும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத செலவு உண்டாகும். உடற்சோர்வு உண்டாகலாம். பூர்வீக சொத்துக்கள் மூலம் வரும் வருமானம் தாமதப்படும். திருமணம் தொடர்பான முயற்சிகளில் சாதகமான நிலை இருக்கும்.

குடும்பத்தில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டு சரியாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன், மனைவிக்குள் கருத்து வேற்றுமை ஏற்படலாம். உங்கள் செயல்களை வீட்டில் உள்ளவர்கள் குற்றம் சொல்லலாம். எனவே வாக்குவாதத்தில் ஈடுபடாமல் கண்டும் காணாமல் செல்வது நன்மை தரும். பிள்ளைகளின் எதிர்கால நலனில் ஆர்வம் காட்டுவீர்கள்.


தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் தங்களது தொழில் விரிவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். அதற்கு தேவையான பண உதவியும் கிடைக்க பெறுவீர்கள். ஆனால் போட்டிகள் பற்றிய கவலைகள் தோன்றும். சமாளிக்க முயல்வீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஒரு சின்ன விஷயத்திற்காக கூட அலைய வேண்டி இருக்கும். பணி சுமை காரணமாக திடீர் கோபம் உண்டாகலாம். கவனமாக செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த பணம் கிடைக்கலாம்.

கலைத்துறையினருக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும். தூக்கமில்லாமல் வேலை செய்ய வேண்டி வரும்.அரசியல்வாதிகள் தொகுதி பிரச்சனைகளைத் தீர்ப்பதில் அக்கறை காட்டுவீர்கள். இதனால் தொகுதி மக்களிடம் நற்பெயர் கிட்டும்.

பெண்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற பாடுபடுவீர்கள். மற்றவர்கள் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. கோபத்தை தவிர்ப்பது நன்மை தரும்.

மாணவர்களுக்கு போட்டிகள் விலகும். பாடங்களில் கவனம் செலுத்துவீர்கள். சக மாணவர் நலனில்  அக்கறை காட்டுவீர்கள்.

கார்த்திகை:

இந்த வருடம்  அடுத்தவரை  நம்பி காரியத்தில் இறங்கும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான சிறிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். தடைகளை  தாண்டி முன்னேறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்தபணியை முதலில் முடிப்பது போன்ற குழப்பத்திற்கு ஆளாக வேண்டி இருக்கும்.

ரோகிணி :

இந்த வருடம்  குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் பிரச்சனை குழப்பம் போன்றவை ஏற்பட்டு  பின்னர் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை தோன்றலாம். பிள்ளைகளிடம் பேசும் போது எச்சரிக்கை தேவை. உறவினர்களிடம் எந்த உறுதியையும் தராமல் இருப்பது நல்லது.

மிருகசீரிஷம்:

இந்த வருடம்  அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதில் சங்கடமான சூழ்நிலை உண்டாகும். சமாளித்து முன்னேறும் திறமை இருக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற வேண்டும் என்று பாடுபடுவீர்கள். போட்டிகள் சாதகமான பலன் தரும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை தீபம் ஏற்றி வழிபட்டு வர செல்வம் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் - வெள்ளி

**********************************************************************

Also Read : மேஷ ராசி நேயர்களுக்கு இந்த ஆண்டு எப்படி இருக்கும்..?

Also Read :  மிதுன ராசி நேயர்களுக்கு இந்த ஆண்டு எப்படி இருக்கும்..?

Also Read : கடக ராசி நேயர்களுக்கு இந்த ஆண்டு எப்படி இருக்கும்..?

Also Read : சிம்ம ராசி நேயர்களுக்கு இந்த ஆண்டு எப்படி இருக்கும்..?

Also Read : கன்னி ராசி நேயர்களுக்கு இந்த ஆண்டு எப்படி இருக்கும்..?

Also Read : துலாம் ராசி நேயர்களுக்கு இந்த ஆண்டு எப்படி இருக்கும்..?

Also Read :  விருச்சிக ராசி நேயர்களுக்கு இந்த ஆண்டு எப்படி இருக்கும்..?

Also Read :தனுசு ராசி நேயர்களுக்கு இந்த ஆண்டு எப்படி இருக்கும்..?

Also Read : மகர ராசி நேயர்களுக்கு இந்த ஆண்டு எப்படி இருக்கும்..?

Also Read: கும்ப ராசி நேயர்களுக்கு இந்த ஆண்டு எப்படி இருக்கும்..?

Also Read : மீன ராசி நேயர்களுக்கு இந்த ஆண்டு எப்படி இருக்கும்..?

First published: December 31, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்