மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
நீண்ட நாட்களுக்குப் பிறகு வெற்றியடையப் போகும் மீன ராசியினரே நீங்கள் அவசரமாக எதையும் செய்யும் தயங்காத குணமும் உடையர்கள். இந்த வருடம் பணவரத்து கூடும். உடல் சோர்வு உண்டாகலாம். வீண் கவலை, வீண் வாக்குவாதங்கள் ஆகியவை ஏற்படும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்.
குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். மனைவி குழந்தைகளுடன் சந்தோஷமாக பொழுதை கழிப்பீர்கள். ஆன்மீக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வாகன லாபம் ஏற்படும். தகப்பனாருடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வெளிதொடர்புகளில் எச்சரிக்கை தேவை.
தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரம் விரிவாக்கம் செய்ய தேவையான பண உதவியும் கிடைக்க பெறுவீர்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். சக ஊழியர்களுடன் கடுமையாக பேசாமல் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.
கலைத்துறையினருக்கு அதிக ஆர்டர்கள் கைக்கு வரும். புதிய ஒப்பந்தங்கள் பலவற்றில் கையெழுத்திடுவீர்கள். ரசிகர்களின் விருப்பத்திற்கேற்ற விஷயங்களைச் செய்து ரசிகர்களை கவர்வீர்கள்.
அரசியல்வாதிகள் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. அதற்கு பதிலாக யோசித்து செயல்பட்டால் காரியங்களை சாதித்துக் கொள்ளலாம். உங்கள் கட்சி பிரச்சனைகள் குடும்ப சந்தோஷத்தை கெடுக்காமல் பார்த்துக் கொள்வது அவசியம்.
பெண்களுக்கு இழுபறியாக இருந்த பிரச்சனைகள் சாதகமான முடிவு பெறும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும்.
மாணவர்களுக்கு பாடங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் அவ்வப்போது பாடத்தில் உள்ள சந்தேகங்களை போக்கிக் கொள்வது நல்லது. திட்டமிட்டு செயலாற்றுவது முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.
பூரட்டாதி:
இந்த வருடம் ஆயுதங்கள் கையாளும் போதும் வாகனங்களை ஓட்டும்போதும் எச்சரிக்கை அவசியம். அடுத்தவர்களுக்கு உதவ போய் வீண் பழி ஏற்படலாம் கவனம் தேவை. இதுவரை நிலுவையிலிருந்த பணத்தொகை கைக்கு கிடைக்கும்.
உத்திரட்டாதி:
இந்த வருடம் எதிலும் முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்த்த பணவரத்து இருக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். உழைப்பு வீணாகும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். திடீர் செலவு உண்டாகும். அடுத்தவருக்கு எவ்வளவு நல்லது செய்தாலும் அது எடுபடாமல் போகலாம். அதே நேரத்தில் பொருள் வரத்து அதிகரிக்கும். வாகனம், பூமி மூலம் லாபம் கிடைக்கும்.
ரேவதி:
இந்த வருடம் எல்லாவற்றிலும் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். பணவரத்து கூடும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனை தீரும். நீண்ட நாளாக இருந்த கஷ்டம் நீங்கும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். அரசாங்கம் மூலம் லாபம் ஏற்படும்.
பரிகாரம்: செவ்வாய்கிழமைதோறும் முருகனை வணங்கி வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும். பணவரத்து கூடும். கடன் பிரச்சனை தீரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் - வியாழன்
Also Read : மேஷ ராசி நேயர்களுக்கு இந்த ஆண்டு எப்படி இருக்கும்..?
Also Read : ரிஷப ராசி நேயர்களுக்கு இந்த ஆண்டு எப்படி இருக்கும்..?
Also Read : மிதுன ராசி நேயர்களுக்கு இந்த ஆண்டு எப்படி இருக்கும்..?
Also Read : கடக ராசி நேயர்களுக்கு இந்த ஆண்டு எப்படி இருக்கும்..?
Also Read : சிம்ம ராசி நேயர்களுக்கு இந்த ஆண்டு எப்படி இருக்கும்..?
Also Read : கன்னி ராசி நேயர்களுக்கு இந்த ஆண்டு எப்படி இருக்கும்..?
Also Read : துலாம் ராசி நேயர்களுக்கு இந்த ஆண்டு எப்படி இருக்கும்..?
Also Read : விருச்சிக ராசி நேயர்களுக்கு இந்த ஆண்டு எப்படி இருக்கும்..?
Also Read :தனுசு ராசி நேயர்களுக்கு இந்த ஆண்டு எப்படி இருக்கும்..?
Also Read : மகர ராசி நேயர்களுக்கு இந்த ஆண்டு எப்படி இருக்கும்..?
Also Read: கும்ப ராசி நேயர்களுக்கு இந்த ஆண்டு எப்படி இருக்கும்..?
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.