கும்பம் (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்)
பிறரிடம் பேசும் போது வார்த்தைகளை கவனமாக பிரயோகிக்கும் ஆற்றல் பெற்ற கும்ப ராசியினரே இந்த வருடம் பணம் வரும் வாய்ப்பு உள்ளது. எதிர்த்து செயல்பட்டவர்கள் ஒதுங்கி விடுவார்கள். நீண்ட நாள் கஷ்டங்கள் நீங்கும். பல விதத்திலும் நன்மை செய்யும். மற்றவர்களுக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள். புத்தி கூர்மையுடன் செயல்படுவீர்கள். தைரியம் உண்டாகும். சுபச்செலவுகள் அதிகரிக்கச் செய்யும். வேண்டியவர்களுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும்.
குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். வாழ்க்கை துணையின் உடல் நலனில் அக்கறை தேவை. சிறிய விஷயங்களுக்கு கூட கோபம் வரலாம். அதனால் உறவினர்கள், நண்பர்களிடம் கவனமாக பேசுவது நல்லது. விபரீத ஆசைகள் ஏற்படலாம். கவனம் தேவை.
தொழில், வியாபாரம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். தேவையான பண உதவி கிடைப்பதிலும், புதிய ஆர்டர்கள் கிடைப்பதிலும் தாமதம் ஏற்படும். தொழில் தொடர்பாக அமைய வேண்டி இருக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. அலுவலகம் தொடர்பான பணிகள் தாமதப்படும். எதிலும் கவனம் தேவை.
கலைத்துறையினருக்கு புகழ் சேர்க்கும் விதமாக வேலைகள் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் பணத்தை எதிர்பார்த்ததை விட புகழ் சேர்க்கும் விதமாக அமையும்.
அரசியல்துறையினருக்கு நிம்மதியான காலமாக இருக்கும். வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். உல்லாச பயணமாகவும் அது அமையும். பேசும் போது மட்டும் கவனமுடன் இருப்பது நல்லது.
பெண்களுக்கு எந்த ஒரு விவகாரத்தையும் எதிர் கொள்ளும் மன வலிமை உண்டாகும். எதிலும் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது.
மாணவர்களுக்கு பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களை அவ்வப்போது போக்கிக் கொள்வது நல்லது. திட்டமிட்டு செயலாற்றுவது முன்னேற்றத்திற்கு உதவும்.
அவிட்டம்:
இந்த வருடம் எதிர்பார்த்த நல்ல செயல்கள் நடக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். கடன் பிரச்சனைகள் தொல்லை தராமல் இருக்கும். எதிர்பார்த்த பணவசதி கிடைக்கும். உங்களது செயல்களுக்கு இருந்த எதிர்ப்புகள் நீங்கும். வழக்கு விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும்.
சதயம்:
இந்த வருடம் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு இருந்து வந்த நோய் நீங்கும். அவர்களது நலனில் அக்கறை காட்டுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். பிள்ளைகளிடம் கவனமாக எதையும் எடுத்து சொல்வது நல்லது. பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனை தீரும்.
பூரட்டாதி:
இந்த வருடம் சுபகாரியங்களில் கலந்து கொள்ள நேரலாம். பணம் வரவு நன்றாக இருக்கும். இழுபறியாக இருந்தவை சாதகமாக முடியக்கூடும். தேவையற்ற கவலைகள் நீங்கும்.
பரிகாரம்: வியாழக்கிழமையில் ஆஞ்சநேயருக்கு வெண்ணை சாற்றி வழிபடுவது மனோபலத்தை அதிகரிக்கச் செய்யும். எதிர்ப்புகள் அகலும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - புதன்
Also Read : மேஷ ராசி நேயர்களுக்கு இந்த ஆண்டு எப்படி இருக்கும்..?
Also Read : ரிஷப ராசி நேயர்களுக்கு இந்த ஆண்டு எப்படி இருக்கும்..?
Also Read : மிதுன ராசி நேயர்களுக்கு இந்த ஆண்டு எப்படி இருக்கும்..?
Also Read : கடக ராசி நேயர்களுக்கு இந்த ஆண்டு எப்படி இருக்கும்..?
Also Read : சிம்ம ராசி நேயர்களுக்கு இந்த ஆண்டு எப்படி இருக்கும்..?
Also Read : கன்னி ராசி நேயர்களுக்கு இந்த ஆண்டு எப்படி இருக்கும்..?
Also Read : துலாம் ராசி நேயர்களுக்கு இந்த ஆண்டு எப்படி இருக்கும்..?
Also Read : விருச்சிக ராசி நேயர்களுக்கு இந்த ஆண்டு எப்படி இருக்கும்..?
Also Read :தனுசு ராசி நேயர்களுக்கு இந்த ஆண்டு எப்படி இருக்கும்..?
Also Read : மகர ராசி நேயர்களுக்கு இந்த ஆண்டு எப்படி இருக்கும்..?
Also Read : மீன ராசி நேயர்களுக்கு இந்த ஆண்டு எப்படி இருக்கும்..?
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.