முகப்பு /செய்தி /ஆன்மிகம் / தியாகராஜரின் 175வது ஆராதனை விழா: பந்தல்கால் நடப்பட்டது...

தியாகராஜரின் 175வது ஆராதனை விழா: பந்தல்கால் நடப்பட்டது...

தியாகராஜரின் 175வது ஆராதனை விழா முன்னிட்டு திருவையாறில் பந்தல்கால் நடும் விழா நடைபெற்றது.

தியாகராஜரின் 175வது ஆராதனை விழா முன்னிட்டு திருவையாறில் பந்தல்கால் நடும் விழா நடைபெற்றது.

தியாகராஜரின் 175வது ஆராதனை விழா முன்னிட்டு திருவையாறில் பந்தல்கால் நடும் விழா நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சத்குரு ஸ்ரீ தியாகராஜர் திருவாரூரில் பிறந்து, திருவையாற்றில் வாழ்ந்து வந்தார், இவர் கர்நாடக இசையில் பல்வேறு கீர்த்தனைகளை இயற்றி பாடியுள்ளார். அவர் முக்தி அடைந்த பகுள பஞ்சமி அன்று ஜீவசமாதி அடைந்த திருவையாற்றில் ஆண்டு தோறும் ஆராதனை விழா 5 நாட்கள் நடைபெறும். அதேபோல இந்த ஆண்டு வரும் ஜனவரி மாதம் 18ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த ஐந்து நாட்களும் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த கர்நாடக இசைக் கலைஞர்கள் மற்றும் இசைப் பிரியர்கள் கலந்து கொண்டு தியாகராஜருக்கு அஞ்சலி செலுத்துவர்.

இதனை முன்னிட்டு இன்று பந்தல்கால் நடும் நிகழ்வு நடைபெற்றது, முன்னதாக சத்குரு ஸ்ரீ தியாகராஜரின் திருவுருவச் சிலைக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. இதில் தியாக பிரம்ம மகோட்சவ சபைகளின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க... சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா

விழாவின் முக்கிய நிகழ்வான பஞ்சரத்ன கீர்த்தனைகள் வரும் ஜனவரி 22ஆம் தேதி நடைபெறுகிறது. அந்நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள், தியாகராஜனின் ஐந்து கீர்த்தனைகளை, ஒரே ராகத்தில், ஒரு சேர பாடி அஞ்சலி செலுத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க... சகல சங்கடங்களையும் நீக்கும் சங்கடஹர சதுர்த்தி விரதம் இன்று...

First published:

Tags: Tanjore