ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

சபரிமலையில் குவியும் பக்தர்கள் : இதுவரை 10 லட்சம் பேர் சாமி தரிசனம்..!

சபரிமலையில் குவியும் பக்தர்கள் : இதுவரை 10 லட்சம் பேர் சாமி தரிசனம்..!

சபரிமலையில் பக்தர்கள் தரிசனம்

சபரிமலையில் பக்தர்கள் தரிசனம்

சபரிமலையில் இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி கடந்த 16-ந்தேதி நடை திறக்கப்பட்டது. 17-ந்தேதி முதல் வழக்கமான பூஜைகள், வழிபாடுகள் நடந்து வருகிறது. பக்தர்களும் தரிசனம் செய்து வருகின்றனர். இன்று நடை திறக்கப்பட்டு 18 வது நாள், கார்த்திகை 17 வது  நாள்.

இன்று 71,515  பேர் ஆன்லைன் மூலம் முன் பதிவு செய்துள்ளனர். ஒரு நாளைக்கு அதிக பட்சமாக 1,20,000 பேருக்கு ஆன்லைன் மூலம் முன் பதிவு செய்ய முடியும். இதில் நேற்று மட்டும்  73, 297 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Also see... மீண்டும் குறைந்தது தங்கம் விலை... இன்றைய விலை நிலவரம் என்ன?

இன்று அதி காலையில் 3 மணிக்கு பள்ளி உணர்த்தல் தொடர்ந்து நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜை மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. அதி காலை 4 மணி முதல் மதியம் 1 மணிக்கு நடை சாத்தும் வரையிலும் மாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 11 மணிக்கு நடை சாத்தும் வரைக்கும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

Also see...திருப்பதி ஏழுமலையான் கோவில் கோபுரத்திற்கு தங்க முலாம் பூச தேவஸ்தானம் முடிவு

இன்று காலை  7 மணி வரை 22  ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர். சபரிமலையில் இதுவரை பத்தரை லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Sabarimalai, Sabarimalai Ayyappan temple