நெருங்கும் மக்களவைத் தேர்தல்... ஸ்டைலை மாற்றுவாரா ஸ்டாலின்?

Sigamani Thirupathi | news18
Updated: July 2, 2018, 5:42 PM IST
நெருங்கும் மக்களவைத் தேர்தல்... ஸ்டைலை மாற்றுவாரா ஸ்டாலின்?
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்
Sigamani Thirupathi | news18
Updated: July 2, 2018, 5:42 PM IST
அஇஅதிமுக பிளவுபட்டுள்ள சூழலில் திமுக தனது வலிமையை அதிகரித்திருக்க வேண்டும். அதற்கான அறிகுறிகள் தெரியவில்லை. ஆனால் காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, மதிமுக என ஒரு வலிமையான அணியை உருவாக்கும் முயற்சியில் திமுக ஈடுபட்டு வருகிறது. இந்த அணியை சிந்தாமல் சிதறாமல் மக்களவைத் தேர்தல் வரை வெற்றிகரமாக கொண்டு செலுத்தி கூட்டணியாக மாற்ற அவரால் முடியுமா?

சமீபத்தில் மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவர் கமல்ஹாசன், காங்கிரஸ் தலைமையைச் சந்தித்துப் பேசியதன் விளைவாக திமுகவிலும் சலசலப்பு ஏற்பட்டது. எனினும் காங்கிரசுடன்தான் கூட்டணி, மாநில கட்சிகளின் ஒருங்கிணைப்பிலோ, மூன்றாவது அணியிலோ திமுக சேராது என்ற வலியுறுத்தல் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காங்கிரசுக்கு உள்ளாட்சித் தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தலில் திமுக அதிக இடங்களை விட்டுத் தராது என்ற சந்தேகம் உருவாகியுள்ளது. இந்த நிலையில்தான், தேவைப்பட்டால் மாற்று அணியை உருவாக்கத் தயங்கக் கூடாது என்று கமல்ஹாசனுடன் உறவாடலை காங்கிரஸ் துவக்கியுள்ளது. இருந்தபோதிலும் நிரூபிக்கப்பட்ட வாக்கு வங்கி உள்ள திமுகதான் பலன் தரக்கூடிய கூட்டணி என காங்கிரஸ் தலைமை இன்னமும் கருதுகிறது. இந்நிலையில் திமுகவின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் முன்கூட்டியே தனது உறுதிப்பாட்டை காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.

சோனியா காந்தியை சந்தித்து பேசும் கமல்ஹாசன்.


2014, 2016 தேர்தல்களில் அணி சேர்க்கையிலும், தேர்தல் நெளிவு சுளிவுகளிலும் கூடுதல் கவனத்தை செலுத்த திமுக தவறிவிட்டது. இப்போது ஸ்டாலினுக்கு அரவணைத்துச் செல்லும் முதிர்ச்சி தேவை என்று திமுகவின் சில மூத்த தலைவர்கள் கருதுகின்றனர். திமுக எத்தனை இடங்களில் வெற்றி பெறும் என்பதை விட, திமுக அணி அனைத்து இடங்களிலும் வெற்றி என்ற இலக்கை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர்கள் கூறுகின்றனர்.

கமல்ஹாசன்,  ரஜினிகாந்த் போன்றோர் சினிமா புகழ் மூலம் மக்களை ஈர்க்கும் வாய்ப்புகள் அதிகம். இவர்கள் தனியாகவோ ஒரு கூட்டணி மூலமோ தேர்தல் களத்தில் குதிப்பதற்கு முன்பு தனது தேர்தல் வியூகத்தை திமுக முடிவு செய்ய வேண்டும். அமமுக-வின் டிடிவி தினகரன், கட்சியை வலுப்படுத்துவதில் அக்கறை செலுத்தி வருகிறார். கமல் இல்லாவிட்டால் தினகரன் பக்கம் சாய்ந்துவிடவும் காங்கிரஸ் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் திட்டமிடுகிறார்.

பாமக, தேமுதிக போன்ற கட்சிகளும் மக்களவைத் தேர்தலில் தனித்து களம் காண தயங்கும். இவர்களை ஈர்க்கவும் காங்கிரஸ் முயற்சிக்கக் கூடும். இந்த நிலைமைகளை திமுக கணித்து செயல்படவில்லை என்று கட்சிக்குள் விமர்சனம் எழுந்துள்ளது. திமுக-வில் உள்ள அனைத்துத் தரப்பு நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்பதைத் தவிர்த்து சிலரது யோசனைகளை மட்டும் ஸ்டாலின் கேட்பது அதீத நம்பிக்கையை வளர்த்துவிடும் என பேசப்படுகிறது.
Loading...
குறிப்பாக ஆர்.கே.நகர் தேர்தல் கட்சியின் செல்வாக்கை எடைபோடக் கூடிய தேர்தல் என்று சொல்ல முடியாவிட்டாலும் அங்கு ஏற்பட்ட சூழலை திமுக கணிக்கத் தவறியதால் டெபாசிட் இழக்க நேரிட்டது. அத்தொகுதி நிர்வாகிகள் மாற்றம் என காலம் கடந்த நடவடிக்கையில் திமுக ஈடுபட்டது.

குமாரசாமி பதவியேற்பு விழாவில் கலந்துகொண்ட அரசியல் கட்சித் தலைவர்கள்.


ஆர்.கே.நகர் தேர்தலுக்கு முன்பு பிரதமர் மோடி திமுக தலைவர் கருணாநிதியைச் சந்திக்க வந்ததால் சிறுபான்மையினர் மத்தியில் சந்தேகம் ஏற்பட்டது. பாஜக எதிர்ப்பில் உறுதியாக இருப்பதாக திமுக தெளிவுபடுத்தி வருகிறது. எனினும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு காரணமாக கர்நாடக முதல்வர் குமாரசாமியின் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு ஸ்டாலின் செல்ல முடியாததை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், திமுகவின் பிரதிநிதியாக யாரையாவது அனுப்பி வைக்காதது யூகங்களுக்கு இடம் தர உதவியது. பாஜக-வை எதிர்க்கும் மதச்சார்பற்ற சக்திகள் பெங்களூரில் தங்கள் உறவை மேம்படுத்திக் கொண்டதை பார்க்க முடிந்தது. இந்த அணி திரட்டலின் பகுதியாக திமுக நின்றிருக்க வேண்டும்.

மாநிலங்கள் இழந்த பல உரிமைகளை மீட்க வேண்டும் என்றால் அகில இந்திய அரசியலில் திமுக பங்களிப்பு செய்வது அவசியம். மத்தியில் அமைச்சர்களை பெறுவதன் மூலம் இது சாத்தியமாகாது.  ஆட்சி அதிகாரத்தைப் பங்கிடும் வகையில் மத்தியில் கூட்டாட்சி என்ற நோக்கத்தை உண்மையான அர்த்தத்தில் நிறைவேற்றும் வகையில் திமுக தன் செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும். இந்த நோக்கம் நிறைவேற வேண்டுமென்றால் ஸ்டாலின், தனது கூட்டணி கட்சிகளுக்கு உரிய மதிப்பளிக்க வேண்டும்.

பெரிய அண்ணனாக நினைத்துக் கொண்டிருந்த காங்கிரஸ் கர்நாடகத்தில் குமாரசாமிக்கு வாய்ப்பை விட்டுக் கொடுத்ததையும் 2006-இல் பெரும்பான்மைக்கு சற்று குறைவாக 95 இடங்களைப் பெற்ற திமுகவை தனித்து ஆள்வதற்கு கூட்டணிக் கட்சிகள் விட்டுக் கொடுத்து சகித்துக் கொண்டதையும் மனதில் கொள்ள வேண்டும். தேர்தல் நெருங்கும் வரை காத்திருந்து முடிவு எடுக்க நினைப்பது நல்ல அணுகுமுறையல்ல என்கிறார்கள் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள்.

- மூத்த பத்திரிகையாளர் சிகாமணி
First published: July 2, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
  • I agree to receive emails from NW18

  • I promise to vote in this year's elections no matter what the odds are.

    Please check above checkbox.

  • SUBMIT

Thank you for
taking the pledge

But the job is not done yet!
vote for the deserving condidate
this year

Click your email to know more

Disclaimer:

Issued in public interest by HDFC Life. HDFC Life Insurance Company Limited (Formerly HDFC Standard Life Insurance Company Limited) (“HDFC Life”). CIN: L65110MH2000PLC128245, IRDAI Reg. No. 101 . The name/letters "HDFC" in the name/logo of the company belongs to Housing Development Finance Corporation Limited ("HDFC Limited") and is used by HDFC Life under an agreement entered into with HDFC Limited. ARN EU/04/19/13618
T&C Apply. ARN EU/04/19/13626