Home /News /special-articles /

மின் திருத்த சட்ட மசோதா 2021: மின்சார துறையில் மோடி அரசின் புரட்சி

மின் திருத்த சட்ட மசோதா 2021: மின்சார துறையில் மோடி அரசின் புரட்சி

மின் திருத்த சட்ட மசோதா 2021

மின் திருத்த சட்ட மசோதா 2021

மின் நிறுவனம் அறிவிக்காமலும், நியாயமான காரணம் ஏதும் இல்லாமல் மின்சாரத்தை தடை செய்தால், இந்த புதிய சட்டத்திருத்தத்தின்படி அந்நிறுவனம் நுகர்வோருக்கு இழப்பீடு செலுத்த வேண்டியிருக்கும்

  2021 ஆம் ஆண்டில் மின்சார (திருத்த) மசோதாவை செயல்படுத்த உள்ளது மோடி அரசு. இந்த மசோதாவின் கீழ், அரசாங்கம் பல முக்கிய சீர்திருத்தங்களை மின் துறையில் அறிமுகப்படுத்த இருக்கிறது. 21ஆம் நூற்றாண்டின் தேவைகளை எதிர்கொள்ளும் வகையில் நாட்டின் மின்சார துறை பல மாற்றங்களை மின்சார (திருத்தச்) சட்டத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது

  மின்சார உற்பத்தியில் சிறப்பாக செயல்படும் இந்தியாவில் பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஒரு யூனிட் மின்சாரத்தின் உற்பத்தி செலவு மிகக் குறைவு. அனைவருக்கும் மின்சாரம் கிடைப்பதை எளிதாக்கும் வகையிலும், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் விநியோகிக்கும் திறனை மேம்படுத்த அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

  அந்த வகையில் 2021ஆம் ஆண்டின் மின்சார திருத்தச் சட்டத்தின் கீழ் மின்சாரத் துறையில் பல முக்கிய சீர்த்திருங்களை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அவை மோடி அரசால் செயல்படுத்தப்பட உள்ளன. இது ஒரு முக்கியமான சீர்திருத்தம் என்பதால் எதிர்கட்சிகளான காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் ஆகியவை அரசாங்கத்தின் ஒவ்வொரு அசைவையும் அதன் நலன்களை எல்லாம் புறம் தள்ளிவிட்டு, மக்களுக்கு எதிரானவர்கள் என பெயர் சூட்டி விமர்சிக்க தொடங்கிவிட்டனர்.

  புதுப்பிக்கத்தக்க கொள்முதல் வேண்டுகோள் தொடங்கி குறுக்கு மானியம் வரை (இதுவே மின் விநியோக கட்டமைப்புகளின் லாபமின்மைக்கு பின்னிருக்கும் முக்கிய காரணி), மின்சார விநியோகத்தில் ஒப்பந்தங்களை வழங்குவதில் வெளிப்படைத்தன்மை என்று பல ஆண்டுகளாக இந்தத் துறையை உலுக்கி வரும் பிரச்சினைகளை சரி செய்யும் வகையில் பல முக்கியமான அம்சங்களை இந்த சீர்திருத்தம் கொண்டுள்ளது.

  Also read:  மிளிரப்போகும் இந்திய பொருளாதாரம் – ஜெப்ரீஸ் நிறுவனம் கணிப்பு

  மின்சார உற்பத்தியில் இந்தியா மிகச் சிறப்பாக செயல்பட்ட போதும், உலகிலேயே குறைவான விலையில் ஒரு யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யும் நிலையிலும், விநியோகம் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருப்பதால் நிலைமை மோசமாக உள்ளது. ஒருபுறம் சூரிய ஒளி, நிலக்கரி மற்றும் இதர வளங்களை கொண்டு அதிகமான உபரி மின்சாரத்தை, வளர்ந்த நாடுகளே வெட்கப்படும் அளவிற்கு உற்பத்தி செய்கிறது இந்தியா. ஆனால் மறுபுறம், விநியோகத்தில் தொழில்நுட்ப மற்றும் வணிக (AT&C) நஷ்டம் 21.7% எனும் மோசமான நிலையில் இருக்கிறது. எனவே, விநியோகத்தின் போது AT&C நஷ்டத்தால் மட்டுமே ஐந்தில் ஒரு பங்கு மதிப்பை நாம் இழக்கிறோம் என்பதோடு இந்த இழப்பும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

  உலக வங்கியின் அறிக்கையின் படி, மின்சார துறையில் ஏற்பட்டுள்ள செயல்திறன் குறைபாட்டால், மொத்த உற்பத்தி செலவில்(GDP) 4% செலவை ஒவ்வொரு ஆண்டும் இந்திய பொருளாதாரம் சந்திக்கிறது. இது 2016ஆம் நிதியாண்டில் $86 பில்லியனுக்கு நிகரானதாகும்.

  மக்களவையில் வழங்கப்பட்ட தரவுகளின் படி, விநியோக துறையில் நஷ்டம் என்பது 2017ஆம் நிதியாண்டில் ரூ.33,894 கோடியாகவும், 2018 ஆம் நிதியாண்டில் ரூ.29,452 கோடியாகவும் மற்றும் அதுவே 2019ஆம் நிதியாண்டில் ரூ.49,623 ஆக உயர்ந்துள்ளது. ஒருவேளை மத்திய அரசு மின் உற்பத்தியாளர்களின் கடன் நிலுவையை செலுத்த ரூ.1.25 லட்சம் கோடி கடன் தொகுப்பை அறிவிக்காமல் இருந்திருந்தால், விநியோகத் துறையின் நிதி நிலைமை 2021 ஆம் நிதியாண்டில் மிகவும் மோசமாகியிருக்கும்.

  Also read:  ஒரு நாள் முழுதும் ஐஸ் பாக்ஸில் இருந்தும் உயிருடன் மீண்ட நபர்.. இறந்தவர் உயிர்பிழைத்தது எப்படி?

  மின்விநியோகத் துறையை தனியார்மயமாக்குவதால் தனியார் நிறுவனங்களும் விநியோகத்தில் பங்கெடுப்பார்கள். இதன் மூலம் விநியோக செலவு குறையும். இது மின்சாரத் துறை மேலும் முழுமையான திறனுடன் இயங்கி அதன் மூலம் பொதுமக்களும் மற்றும் நாடு முழுவதும் மக்களும் வணிக நிறுவனங்களும் 24×7 மணி நேரமும் தடையில்லா மின்சாரத்தை பெற முடியும்.
  நாட்டில் மின்சாரம் மிகவும் குறைவான விலையாக ஒரு யூனிட்டிற்கு ரூ.2 – 3 வரையில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் விநியோக நிறுவனங்கள் அவற்றை ஒரு யூனிட்டிற்கு ரூ. 7 முதல் ரூ.12ற்கு (இடத்திற்கு ஏற்றார் போல வீட்டு உபயோகத்திற்கு தனியான விலையும் மற்றும் அதைவிட கூடுதலான விலை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் வைக்கப்படுகிறது), விற்பனை செய்த போதும் பெரும் நஷ்டத்தை சந்திக்கின்றனர்.

  தொலைத்தொடர்பு துறையை போலவே இணைப்பை மாற்றாமல் சேவை வழங்குநரை மாற்றிக் கொள்வதை போல, இங்கும் நுகர்வோரின் இணைப்பை மாற்றாமல் சேவை வழங்குநரை மட்டும் மாற்றும் பரிந்துரைகளையும் அரசாங்கம் கருத்தில் கொண்டு வருகிறது. இந்த இணைப்பு மாற்றம் (portability) என்பது ஒரு நல்ல யோசனை. இதன் மூலம் மின் விநியோகத்தில் நிலவும் ஏகபோகத்தை உடைக்க முடியும். ஆனால் அதிக அளவில் தனியார் நிறுவனங்கள் விநியோகத்தில் பங்கெடுத்தால் மட்டுமே இதை லாபகரமாக மாற்ற முடியும். அதற்காகவே அரசாங்கம் மின்சார (திருத்த) மசோதாவை கொண்டு வருகிறது.

  Also read:   தன் உயிரைக் கொடுத்து இருவரின் உயிரை காப்பாற்றிய காவலர் - 18 மாத குழந்தையின் தந்தை வீரமரணம்!

  மின் வினியோகம் என்று வரும்போது அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களே ஆதிக்கம் செலுத்துகின்றன. எனவே, தற்சமயம் குஜராத் மற்றும் மேற்கு மகாராஷ்ட்ராவில் மட்டுமே இருக்கக் கூடிய அதானி, டாடா போன்ற மின்விநியோக நிறுவனங்கள் பிற மாநிலங்களிலும் விரிவடைவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் மட்டுமே போதிய தனியார் நிறுவனங்களின் இருப்பை நம்மால் உறுதி செய்ய முடியும் மற்றும் நுகர்வோரை தங்கள் வசமாக்க நிறுவனங்களுக்குள் போட்டித்தன்மை வளரும். இதன் மூலமே, தற்சமயம் இருக்கும் செயல்திறன் குறைபாட்டை மின் துறை எதிர்கொள்ள முடியும்.

  இத்திட்டம் பிப்ரவரி மாதம், நிதியமைச்சரால் மத்திய பட்ஜெட்டின் போது முதல் முறையாக முன்மொழியப்பட்டது. அதன் பின் மின்சாரத் துறை அமைச்சர், எவ்வாறு தொலைதொடர்பு துறையில் ஒரு மொபைல் எண்ணை மாற்றாமல் சேவை வழங்குநரை மாற்றுவதென்பது எளிதாக உள்ளதோ அது போலவே மின் துறையிலும் நிகழும் என்கிற விரிவான விளக்கத்தை ஊடகத்திற்கு வழங்கினார்.

  "மின் விநியோகத் துறை மோசமாக செயல்பட்டாலோ அல்லது அதிக மின் சுமையினால் ஏதேனும் தடை இருந்தாலோ மக்களுக்கு வேறு எந்த வழியும் இருப்பதில்லை. அவர்களின் புகார்களை தீர்த்து வைக்க வேறு எந்த முறையும் இல்லை. இப்போது நாங்கள் முன்மொழியும் இந்த முறையின் மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்கள் ஒவ்வொரு பகுதியிலும் இயங்கும். மேலும் யார் சிறப்பான சேவையை வழங்குகிறார்களோ அவர்களை மக்கள் தேர்வு செய்யலாம்" என பட்ஜெட் தாக்கலின் போது இந்த கருத்தை முன்வைத்தார் மின் துறை அமைச்சர் ஆர்.கே. சிங.

  Also read:  ஷார்ட்ஸ் அணிந்து சென்றதால் வங்கியில் நுழைய வாடிக்கையாளருக்கு அனுமதி மறுப்பு - SBI கூறும் விளக்கம்

  “மொபைல் சேவைகளை போலதான் இதுவும். மொபைல் சேவை வழங்குபவர் சரியாக செயல்படாத போது, மக்களுக்கு மற்ற சேவை வழங்குநரை தேர்வு செய்யும் வாய்ப்பு இருக்கிறது. அது போல தான் இதுவும்” என விளக்கினார் ஆர்.கே.சிங். இதனால் பொதுத்துறை நிறுவனங்களின் மேலாதிக்கம் முடிவுக்கு வருவதோடு தாங்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டியிருக்கும் என்பதால் தொழிலாளர் அமைப்புகள் இப்போது இந்த சட்ட திருத்தத்திற்கு எதிராக லாபி செய்ய தொடங்கி விட்டன. இந்த திருத்தத்தால் இத்துறையில் பெருத்த ஊழல்கள் நடப்பதற்கான வாய்ப்புகளும் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

  மின் தடை ஏற்பட்டால் நுகர்வோருக்கு இழப்பீடு:

  ஒரு நிறுவனம் அறிவிக்காமல், நியாயமான காரணம் ஏதும் இல்லாமல் மின்சாரத்தை தடை செய்தால், அந்நிறுவனம் நுகர்வோருக்கு இழப்பீடு செலுத்த வேண்டியிருக்கும். மின் தடை குறித்து நிறுவனம், நுகர்வோருக்கு முன் கூட்டியே தெரிவிக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட கால வரம்புக்கு மேல் மின்வெட்டு ஏற்பட்டாலும் இழப்பீடு வழங்க இந்த மசோதா வகை செய்யும் என கூறப்படுகிறது.

  எனவே இந்த எதிர்ப்புக் குழுக்களை புறம் தள்ளி அரசாங்கம் இந்த மின் துறை சீர்திருத்தங்களை மிக விரைவாக செயல்படுத்த வேண்டும். தனிநபர் மின்சார நுகர்வில் இன்றும் இந்தியாவில் குறைவாகவே உள்ள நிலையில், அது மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சிக்கு நேரான விகிதாசாரத்தில் உள்ளதால் இத்துறையை விரைந்து சீர்திருத்த முயல்கிறது அரசு. 2021ஆம் ஆண்டின் மின்சார (திருத்த) சட்டம், இத்துறையின் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் வகையில், பல பழைய வழக்கங்களை உடைத்து பல சீர்த்திருங்களை நிச்சயம் கொண்டு வரும்.
  கட்டுரையாளர் - கு. பிரதீப் குணசேகரன் 

  (கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துக்கள் தனிப்பட்டவை))
  Published by:Arun
  First published:

  Tags: Electricity, Electricity bill, Narendra Modi

  அடுத்த செய்தி