Opinion: விவசாயிகள் போராட்டத்தில் செல்போன் டவர்கள் மீதான தாக்குதலும், சீனாவின் 5ஜியும்.

செல்போன் டவர்

விவசாயிகள் போராட்டம் என்ற போர்வையில் அசம்பாவித நடவடிக்கைக்கு சீனாவில் இருந்து நிதியளிக்கப்பட்டிருக்குமா? விவசாயிகள் போராட்டத்தை ஆதரிக்கும் அரசியல் கட்சிகள் சிந்திக்க வேண்டும்.

 • Share this:
  2020 ஆம் ஆண்டு கொரோனா தொற்றால், ஆக்கிரமிக்கப்பட்டது. அன்றாட வாழ்வில் இந்த பெருந்தொற்று பல மாற்றங்களை ஏற்படுத்திவிட்டது. அதேசமயம் இண்டெர்நெட் என்ற ஒன்று மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. பல லட்சக்கணக்கான மக்கள் வீட்டில் இருந்து வேலை பார்க்கவும், மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் பாடம் கற்கவும் இண்டெர்நெட்டை பயன்படுத்துகின்றனர். இன்னும் சிலர் ஆன்லைனில் மருத்துவ ஆலோசனை பெற்று பயனடைந்து வருகின்றனர். அதேபோல், ஆன்லைன் வர்த்தகம், ஆன்லைன் பண பரிவர்த்தனை என இண்டெர்நெட்டின் தேவை இன்றியமையாத ஒன்றாகிப்போனது.

  கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, சீன நிறுவனங்கள் பல்வேறு நாடுகளில் 5ஜி நெட்வொர்க்கை பரப்ப மிகப்பெரும் முதலீடுகளை செய்துள்ளன. அதாவது உலகத்தை டிஜிட்டல் மூலம் சுற்றிவளைக்கும் முயற்சி எனலாம். குறிப்பாக ஹூவாய், இசட்டிஇ (ZTE) 5ஜி உள்கட்டமைப்பை அமைக்க உள்ளன. இன்டெர்நெட் உலகில் இந்த தொழில்நுட்பம் அசாத்திய ஒன்றாக கருதப்படும் நிலையில், சீன நிறுவனங்களால் தனிநபர், அமைப்பு அல்லது நாடுகளின் தகவல்களை கட்டுப்படுத்தக்கூடும் என்கிறனர்.

  4ஜி தொழில்நுட்பத்தைவிட 100 மடங்கு வேகம்படைத்த 5ஜி தொழில்நுட்பத்தால், தானியங்கி கார்கள், ஸ்மார்ட் நகரங்கள் என புதிய இண்டெர்நெட் தொழில்கள் பெருகும். செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களிலும் சீனா ஆதிக்க செலுத்த முயன்ற வருகிறது.

  இந்த ஆண்டு தொடக்கத்தில் 5ஜி தொழில்நுட்ப சேவைகளை தொடங்கிய சீனா, நாடு முழுவதும் 7 லட்சத்துக்கும் மேலான ஸ்டேசன்களை நிறுவியுள்ளது. இதன் மூலம், தானியங்கி தொழிற்சாலைகள், கண்காணிப்பு கேமராக்களை இயக்க தேவையான மென்பொருட்களையும் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளன. மேலும், 6 லட்சம் ஸ்டேசன்களை அடுத்தா ஆண்டுக்குள் அமைக்க உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

  ஹூவாய் நிறுவனம் மூலம் 5ஜி நெட்வொர்க்கை தெற்காசி நாடுகள், ஐரோப்பிய நாடுகளில் நிறுவி ஆதிக்க செலுத்த முனைவதே சீனாவின் திட்டமாக உள்ளது. மேலும், இந்தியாவில் மிகப்பெரிய நெட்வொர்க்காக திகழும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக களமிறங்க திட்டமிட்டுள்ளன.

  ரிலையன்ஸ் ஜியோ நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி, கடந்த அக்டோபரில் தெரிவித்த போது, 5ஜி தொழில்நுட்பத்தை 2021 மத்தியில் விரிவாக்க உள்ளதாக கூறியிருந்தார். அப்போதே அமெரிக்க நிறுவனமான குவால்காம் நிறுவன உதவியுடன் இணைந்து சோதனைகளும் நடத்தப்பட்டன. 5 ஜி மூலம் ஒரு விநாடியில் ஒரு ஜிபி டேட்டா பரிமாற்ற செய்யும் வேகத்தை பெற முடியும். கூகுளுடன் இணைந்து ஜியோ நிறுவனம் நாடு முழுவது 5ஜி ஸ்மார்ட்போன்களை வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்த முயற்சி வெற்றியடைந்தால், இந்தியாவில் ஸ்மார்ட் போன்களில் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கும் சீன நிறுவனங்களான ஸ்யோமி, விவோ பெரும் சவாலை சந்திக்கும்.

  அடுத்த ஆண்டு மார்ச்சில் 5ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக ஏலம் நடைபெறும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 5ஜி தொழில்நுடப்பத்தை விரிவுப்படுத்துவதில் ஜியோ நிறுவனம் முக்கிய பங்காற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் சீன நிறுவனக்களின் நோக்கங்களு மிகப்பெரிய அடியாக இருக்கும் என்றும் கணிக்கப்படுகிறது.

  டெல்லியில் விவசாயிகள் போராட்டம் 5 வாரங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. பெரிதாக பொதுமக்களின் ஆதரவில்லாமல் நடக்கும் இந்த போராட்டத்தில் பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் மட்டுமே ஈடுபட்டுள்ளனர். இவர்களை வழிநடத்துவது காங்கிரஸ், ஆம் ஆத்மி, அகாலி தளம், கம்யூனிஸ்ட் கட்சிகள். தொடக்கத்தில் பஞ்சாப்பில் விவசாயிகள் ரயில் தண்டவாளங்களில் அமர்ந்து போராட்டம் நடத்தில் சரக்கு போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால், பஞ்சாப் பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படும் சூழல் உருவானது. இதையடுத்து, பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் விவசாயிகளை டெல்லி எல்லையில் போராட ஊக்குவித்தார்.

  விவசாயிகள் போராட்டம் நடத்துவது அவர்களின் ஜனநாயக உரிமை. அதேசமயம், சாலையையும், பொது போக்குவரத்தையும் முடக்க எந்த உரிமையும் இல்லை. தொழில் அமைப்பான அசோசம் தகவல்படி, விவசாயிகள் போராட்டத்தால், தினமும் 3500 கோடி இழப்பு ஏற்படுகிறது. டெல்லி, பஞ்சாப், ஹரியானா, ஹிமாச்சல் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களின் பொருளாதாரமும் மிகவும் பாதிக்கப்படுகின்றன.

  அதேசமயம், டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தும் இடத்தில் ஏற்படுத்தி தரப்படும் வசதிகள், பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன. போராட்டத்திற்கு நிதி அளிப்பது யார் கேள்வி உச்சமாக எழுகிறது. பல்வேறு விவசாயி அமைப்புகள் வெளிநாடுகளில் உள்ளவர்கள், சீக்கியர்கள் மூலம் பண உதவிபெறுவதாக அறியமுடிகிறது. காலிஸ்தானி ஆதாரவு அமைப்புகள் மூலமாகவும் நிதி பெறப்படுவதாகவும் சந்தேகம் எழும்புகிறது. காலிஸ்தான் இயக்கமானது பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு மூலம் நிதி பெற்ற இயக்கமாகும். இன்னமும், இந்த இயக்கம் பாகிஸ்தான், கனடா, பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் இயங்கி வருகிறது. இதில் சீனாவுக்கும் தொடர்பு இருப்பதும் அறியமுடிகிறது. ஏற்கெனவே கடனில் தவிக்கும் பாகிஸ்தான், சீனாவின் உதவியை மறுக்காது.

  விவசாயிகள் போராட்டத்தில் சிலர் ரிலையன்ஸ் ஜியோ டவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் சுமார் 1500 டவர்கள் பெரும் சேதமடைந்துள்ளன. பல இடங்களில் மின் இணைப்புகளை தகர்த்துள்ளனர். இதனால், தொலைத் தொடர்பு பாதிக்கப்பட்டது. சில இடங்களில் மின் இணைப்புக்காக வைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டர்களையும் கொள்ளையடித்துள்ளனர்.

  இந்த சம்பவங்கள் வெளிநாடுகளில் குடியேறியவர்களைக் கொண்ட தோபா பெல்ட்டில் நடந்துள்ளன. விவசாயிகள் போராட்டம் என்ற போர்வையில் இத்தகைய நடவடிக்கைக்கு சீனாவில் இருந்து நிதியளிக்கப்பட்டிருக்குமா? விவசாயிகள் போராட்டத்தை ஆதரிக்கும் அரசியல் கட்சிகள் சிந்திக்க வேண்டும்.

  (கட்டுரையாளர் குல்பிர் கிருஷ்ணன், முன்னாள் முன்னாள் டிஜிபி & எல்லைப் பகுதியைப் பாதுகாக்கும் மத்திய காவல் ஆயுதப் படைகளுள் ஒன்றான சசஸ்த்திர சீமை பலத்தின் ஐஜியாக பணியாற்றியவர். கட்டுரையில் இடம்பெற்றவை கட்டுரையாளரின் சொந்த கருத்தாகும்.)
  Published by:Yuvaraj V
  First published: