முகப்பு /செய்தி /சிறப்புக் கட்டுரைகள் / அமெரிக்காவில் கொரோனா உச்சத்தில் இருந்த போது சீனாவுக்கு முகக்கவசங்கள் ஏற்றுமதி: டிரம்ப்பின் போலித்தனங்களை, முகத்திரையைக் கிழிக்கும் ஆவணப்படத்தினால் பரபரப்பு

அமெரிக்காவில் கொரோனா உச்சத்தில் இருந்த போது சீனாவுக்கு முகக்கவசங்கள் ஏற்றுமதி: டிரம்ப்பின் போலித்தனங்களை, முகத்திரையைக் கிழிக்கும் ஆவணப்படத்தினால் பரபரப்பு

முன்னாள் அதிபர் டிரம்ப்

முன்னாள் அதிபர் டிரம்ப்

அமைப்பே உடைத்து நொறுக்கப்பட்டது, எவ்வளவு மரணங்கள், எவ்வளவு பாதிப்புகள், எவ்வளவு இழப்புகள், அமைப்பு உடைந்ததற்குக் காரணமானவர்கள் பொறுப்பேற்பார்களா? என்று கேட்கிறது இந்த படம்.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :

அமெரிக்காவில் கொரோனா வைரசுக்கு 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர், இன்னமும் பலரும் அந்த ஆபத்திலிருந்து மீள்வோமா, மாட்டோமா என்று பீதியில் வாழ்ந்து வருகின்றனர். லட்சக்கணக்கானோர் கோவிட் 19 சிகிச்சையில் உள்ளனர்.

இந்நிலையில் அப்போது அதிபராக இருந்த டிரம்ப்பும் அவரது நிர்வாகமும் தொடர்ச்சியாகக் கூறி வந்த பொய்கள், செயலின்மை, மற்றும் சில மூர்க்கமான நடவடிக்கைகளால் கொரோனா கட்டுக்கடங்காமல் போனது எப்படி என்பதை  2 மணி நேர ஆவணப்படம் பட்டவர்த்தனமாக்கியுள்ளது.

டிரம்ப் நிர்வாகத்தின் மோசமான தோல்விகளை அம்பலப்படுத்தி அவரது நிர்வாகத்தைக் கூண்டில் ஏற்றி விசாரிக்கிறது இந்த ஆவணப்படம்.

இந்த ஆவணப்படத்தை இயக்கியவர் ஏப்ப சோப்பையான ஆள் அல்ல. அலெக்ஸ் கிப்னி எனும் அகாடமி விருது வென்றவர் Taxi to the Dark Side படத்துக்காகத்தான் அவருக்கு அகாடமி விருது கிடைத்தது. இவரும் ஒஃபீலியா ஹருதியுன்யன், இவர் கிப்னியின் The Inventor: Out for Blood in Silicon Valley என்ற படத்தை தயாரித்தவர், மற்றும் How to Fix an Election என்ற படத்தை இயக்கிய சூசான் ஹில்லிங்கர் ஆகியோர் டிரம்ப்பை தோலுரிக்கும் இந்த ஆவணப்படத்தை எடுத்துள்ளனர்.

இந்த ஆவணப் படத்தின் பெயர் ‘Totally Under Control’, கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாட்டின் பிரதமர்கள், அதிபர்கள் இப்படித்தானே கூறி மக்களை முட்டாளாக்கினர், எனவே அதையே டைட்டிலாக வைத்துள்ளனர். செய்தித்தாள், டிவி சேனல் செய்திகள், நேர்காணல்கள் ஆகியவற்றை அமெரிக்காவில் கொரோனா பாதிப்படைந்தவர்கள், இறந்தவர்களுக்கு விடை அளிக்கிறது. என்ன கேள்வி எனில், “அமெரிக்கா ஏன் இந்த அபாயத்தை எதிர்நோக்கவில்லை ஏன் தயாரிப்புடன் இல்லை?” என்பதே அந்த கேள்வி அதற்குத்தான் இந்த ஆவணப்படம் விடை பகர்வதாகக் கோருகிறது.

இந்த ஆவணப்படம் டிரம்ப் நிர்வாகம் கூறிய இந்த வார்த்தையுடன் தான் தொடங்குகிறது, “இயற்கை பயங்கரமான நோய் ஒன்றை மனிதர்கள் மீது அவிழ்த்து விட்டுள்ளது” (nature set loose a terrible disease) என்ற வாசகம் தான் அது. ஆனால் இந்தப் படம் முடிந்தவுடன் இயற்கை அல்ல அரசியல் முடிவுகள்தான் நோயை பயங்கரமானதாக மாற்றியுள்ளது என்று தெரியவரும் என்கின்றனர் இயக்குநர்கள்.

டிரம்ப் நிர்வாகத்தின் கொரோனா தோல்வி குறித்த இந்த விசாரணையில் 4 பிரதான தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

அவை 1. அறிவியல் உண்மையைப் புறக்கணிப்பதுதான் தேசபக்தி என்று டிரம்ப் நிர்வாகம் கருதியது:

இந்த ஆவணப்படத்தில் டிரம்ப் கொரோனா பற்றிக் கூறியது எப்படி அறிவியல் தகவலுக்கு முரணாகவே வேண்டுமென்றே கட்டமைக்கப்பட்டது என்பது அம்பலப்படுத்தியுள்ளது. இதனை உதாரணமாக நியூயார்க் நகர ஹார்ட் தீவில் எக்கச்சக்க இடுகாடுகளை காட்டுவதோடு மக்கள் வைவதும் திட்டுவதையும் இருமலுடன் இருப்பதையும் மளிகை கடை ஊழியர்களை தாக்குவது என்பதுமாக சில பல இமேஜ்களை வைத்துள்ளனர்.

பெட்டி பெட்டியாக பிணங்கள்.

முகக்கவசம் அணிவதை டிரம்ப் எப்படி அரசியலாக்கினார் என்பதையும், அதிபர் ட்ரம்ப் மாஸ்க் தொழிற்சாலை ஒன்றில் மாஸ்க் போடாமல் சுற்றிப்பார்த்ததும் இதில் வருகிறது. மக்கள் மாஸ்க் போட மறுத்தனர், டிரம்ப் செய்த அரசியலினால் போட்டுக்கொண்ட மற்றவர்களையும் போடாதவர்கள் மிரட்டி உருட்டி துன்புறுத்தினர். இதுவும் இந்தப் படத்தில் வருகிறது. டிரம்ப் நிர்வாகம் முகமூடி இல்லாத நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வந்தது.

மேலும் மிக அதிர்ச்சிகரமான விஷயம் ஒன்றும் இந்த ஆவணப்படத்தில் அம்பலப்படுத்தியது, ஜனவரி, பிப்ரவரியில் அமெரிக்காவில் உச்சத்தில் கொரோனா மரணங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும் போதும், நோய் காட்டுத்தீ போல் மனிதர்களிடத்தில் பரவிய போதும் ட்ரம்ப் நிர்வாகம் மாஸ்க் தயாரிக்கும் நிறுவனங்களை சீனாவுக்கு முகக்கவசங்களை ஏற்றுமதி செய்ய வலியுறுத்தியது என்ற திகில் உண்மையையும் இந்தப் படம் மூலம் ஜீரணிக்க வேண்டும்.

2. தென் கொரியா கொரோனா பரிசோதனைகளை மக்களிடத்தில் தேசிய அளவில் துரிதப்படுத்த அமெரிக்காவில் டிரம்ப் நிர்வாகம் கொரோனா எண்ணிக்கைப் பரவலை குறைவாகக் காட்ட அனைத்து வேலைகளையும் செய்ததாக இந்த ஆவணப்படும் தோலுரித்தது. எஃப்.டி.ஏ.வை வைத்து சோதனைகளுக்கு தேவையற்ற ஆட்சியதிகார முட்டுக்கட்டைகளை ட்ரம்ப் ஏற்படுத்தியதையும் இந்த ஆவணப்படும் தைரியமாக அம்பலப்படுத்தியுள்ளது.

3. கொரோனா பற்றி அறிந்தவர்கள், தெரிந்தவர்கள், அறிவியலாளர்கள் புறக்கணிக்கப்பட்டனர், மவுனமாக்கப்பட்டனர், மிரட்டப்பட்டனர்:

கொரோனாவை தடுக்க வழிவகைகள் தெரிந்தோர்களை டிரம்ப் நிர்வாகம் எப்படி மவுனச்சிறைக்குள் தள்ளியது என்பதை இந்த ஆவணப்படும் அம்பலமாக்கியுள்ளது. டாக்டர் மெசோனியர் கொரோனாவின் உடல் மற்றும் சமூக தீமைகளை விளைவுகளைப் புட்டுப்புட்டு வைத்தார், ஆனால் அடுத்த நாள் சிடிசி பொறுப்பு துணை அதிபர் மைக் பென்ஸிடம் மாற்றப்பட்டது. மெசோனியர் செய்த தவறு என்ன? உண்மையைச் சொன்னதா என்று கேட்கிறது இந்த ஆவணப்படம்.

4வதாக டிரம்புக்கு எல்லாம் தெரியும் ஆனால் உண்மையை மறைக்கவே அவர் வேலை செய்தார் என்று இந்த ஆவணப்படம் கூறுகிறது. ஆனால் ஒரே ஒரு அறரீதியான சக்தி வாய்ந்த கேள்வியை இந்த ஆவணப்படம் எழுப்புகிறது.

அமைப்பே உடைத்து நொறுக்கப்பட்டது, எவ்வளவு மரணங்கள், எவ்வளவு பாதிப்புகள், எவ்வளவு இழப்புகள், அமைப்பு உடைந்ததற்குக் காரணமானவர்கள் பொறுப்பேற்பார்களா? என்று கேட்கிறது இந்த படம்.

First published:

Tags: Corona death, Documentary films, Donald Trump